பெங்களூரு: இந்தியாவில் தொலைதொடர்பு சேவை வழங்குவதில் தனியார் நிறுவனங்களே முன்னணியில் இருக்கின்றன. முதலிடத்தில் ஜியோவும் இரண்டாவது இடத்தில் ஏர்டெல்லும் இருக்கின்றன.
வோடபோன் ஐடியாவை பொறுத்தவரை இந்த முதல் இரண்டு இடங்களை எப்படியாவது பிடித்து விட வேண்டும் என்பதற்காக போட்டி போட்டுக் கொண்டு பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறது. அந்த வகையில் பெங்களூருவில் அன்லிமிடெட் 5ஜி டேட்டா சேவையை கொண்டு வந்திருப்பதாக வோடபோன் ஐடியா நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நிறுவனம் நாடு முழுவதும் 5ஜி சேவையை விரிவாக்கம் செய்யும் பணிகளை தீவிரப்படுத்தி இருக்கிறது.

தற்போதைக்கு டெல்லி, மும்பை , பாட்னா மற்றும் சண்டிகர் ஆகிய நகரங்களில் மட்டுமே வோடபோன் ஐடியா 5ஜி சேவைகளை வழங்கி வந்தது. தற்போது பெங்களூருவிலும் அதனை விரிவாக்கம் செய்துள்ளது. விரைவில் தென்னிந்திய நகரங்கள் முழுவதற்கும் விரிவாக்கம் செய்ய இருக்கிறது.
ஆகஸ்ட் மாதத்திற்குள் இந்தியாவின் 17 சர்க்கிள்களில் தங்களுடைய 5ஜி சேவைகள் கொண்டுவரப்பட்டிருக்கும் என வோடபோன் ஐடியா நிறுவனம் கூறி இருக்கிறது. பெங்களூரில் 5ஜி சேவை கொண்டு வந்ததால் பெங்களூருவை சேர்ந்த வாடிக்கையாளர்களுக்கு பிரத்தியேக ரீசார்ஜ் திட்டங்களையும் வோடபோன் ஐடியா நிறுவனம் அறிமுகம் செய்திருக்கிறது. குறிப்பாக ப்ரீபெய்டு திட்டங்களை பொருத்தவரை 299 பிளானிலேயே 5ஜி அன்லிமிடெட் சேவையை பெறலாம். ஒரு நாளைக்கு 1 ஜிபி டேட்டா உடன் 28 நாட்களுக்கு இந்த திட்டம் செயல்பாட்டில் இருக்கும் அதேபோல 349 ரூபாய் மதிப்பு கொண்டு ரீசார்ஜ் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது இதில் 28 நாட்களுக்கு ஒரு நாளைக்கு 1.5 ஜிபி டேட்டா கிடைக்கும் 365 ரூபாய் திட்டத்தில் ரீசார்ஜ் செய்பவர்களுக்கு ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த திட்டங்களுடன் அன்லிமிடெட் 5 ஜி டேட்டா என்ற ஒரு அறிமுக சலுகையும் வழங்கப்பட்டு இருக்கிறது.
அதே போல ஒரு ஆண்டுக்கு 3599 ரூபாய் ரீசார்ஜ் திட்டம் கொண்டுவரப்பட்டிருக்கிறது. இதில் 2 ஜிபி தினசரி டேட்டாவும் அன்லிமிடெட் 5 ஜி சேவையும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. போஸ்ட்பெய்டு திட்டங்களை பொறுத்தவரை வோடபோன் ஐடியா மேக்ஸ் திட்டங்களில் 451 ரூபாயிலிருந்து தொடங்குகின்றனர், இதில் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவும் மாதத்திற்கு 150 ஜிபி டேட்டாவும் வழங்கப்படுகிறது.
இந்தியாவிலேயே வோடபோன் இந்தியா நிறுவனம் தான் 2 ஜிபிக்கும் குறைவான ரீசார்ஜ் திட்டங்களிலேயே அன்லிமிடெட் 5 ஜி சேவையை வழங்குகிறது என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. பெங்களூருவில் இருக்கும் வோடபோன் வாடிக்கையாளர்கள் தங்கள் பகுதியில் 5ஜி சிக்னல் கிடைக்கிறதா என்பதை சரிபார்த்து தங்கள் போனில் செட்டிங்கை மாற்றி கொள்ளலாம் என வோடபோன் ஐடியா நிறுவனம் கூறியுள்ளது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications