வோடபோன் குழுமம் இந்தியாவுக்கு எதிராக, சர்வதேச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், வோடபோனுக்கு சாதாகமான தீர்ப்பு கடந்த ஆண்டு செப்டம்பரில் வந்தது.
இதற்கிடையில் தற்போது இதனை எதிர்த்து, இந்திய அரசு சிங்கப்பூர் நீதிமன்றத்தில் வோடபோனுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்துள்ளது.
சிங்கப்பூரில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில், இந்திய அரசாங்கத்திற்கு எதிராக ரூ.12,000 கோடி நிலுவைத் தொகையும், அதோடு ரூ.7,900 கோடி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளதாக தொலைத் தொடர்பு நிறுவனமான வோடஃபோன் தெரிவித்தது. இது குறித்து வோடஃபோன் குழுமம் சிங்கப்பூர் சர்வதேச நடுவர் நீதிமன்றத்தினை கடந்த 2016-ம் ஆண்டிலேயே அணுகியது.
முதலீட்டு ஒப்பந்தம்
இதற்கிடையில் வோடஃபோன் மீது இந்திய அரசு வரிச்சலுகை விதிப்பது, இந்தியாவிற்கும் நெதர்லாந்திற்கும் இடையிலான முதலீட்டு ஒப்பந்தத்தை மீறுவதாக சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதோடு இந்திய அரசாங்கம் வோடபோனிடம் இருந்து நிலுவைத் தொகை கோருவதை நிறுத்த வேண்டும் என்றும் கூறியது.
இந்தியா பணம் கொடுக்க வேண்டும்
மேலும் வோடபோன் நிறுவனத்தின் சட்ட செலவுகளுக்கு இழப்பீடாக இந்தியா 40 கோடி ரூபாய் செலுத்த வேண்டும். அதோடு வோடபோனில் இருந்து வசூலிக்கப்பட்ட 44.74 கோடி ரூபாய் நிதியினை திரும்ப செலுத்த வேண்டும். ஆக மொத்தத்தில் வோடபோன் நிறுவனத்திற்கு 85 கோடி ரூபாய் நிதியினை திரும்ப இந்தியா செலுத்த வேண்டும் என அப்போது கூறப்பட்டது.
வோடபோன் தான் செலுத்த வேண்டும்
ஆனால் இந்த வழக்கில் கூறப்படும் 12,000 கோடி ரூபாய் நிலுவையும், 7,900 கோடி ரூபாய் அபாரதமும் இந்திய நிறுவனமான Hutchison Whampoaவிடம் இருந்து, கடந்த 2007ல் கையகப்படுத்தியதில் இருந்து உருவாகியது என்றும் கூறப்படுகிறது. அரசு தரப்பில் இந்த நிறுவனத்தினை கையகப்படுத்திய வோடபோன் தான் இதனை செலுத்த வேண்டும் எனவும் வாதிடப்பட்டது.
ஏஜிஆர்- தொகையும் அதிகம்
இந்த நிலையில் மொத்தம் அபராதத் தொகையுடன் சேர்த்து தற்போது 22,100 கோடி ரூபாய் செலுத்த வேண்டும் என்று, இந்தியா சிங்கப்பூர் நீதிமன்றத்தினை நாடியுள்ளது. ஏற்கனவே ஏஜிஆர் நிலுவையிலும் வோடபோன் நிறுவனம் மிகப்பெரிய அளவில் நிலுவை வைத்துள்ள நிலையில், இது எந்தளவுக்கு கைகொடுக்கும் என்று தெரியவில்லை.


Click it and Unblock the Notifications