ஐரோப்பாவின் மிகப்பெரிய வர்த்தக சாம்ராஜ்ஜியமான வோக்ஸ்வேகன் நிறுவனத்தின் வர்த்தகம் நாளுக்கு நாள் மோசமடைந்து வரும் வேளையில், இந்நிறுவனத்தில் மிகப்பெரிய நிர்வாகம் சீர்திருத்தம் செய்ய திட்டமிட்டு வருகிறது. இந்த முக்கியமான வேளையில் Volkswagen நிறுவனத்தின் சிஇஓ Oliver Blume ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டியில் ஊழியர்களுக்கு நிறுவனம் மிகவும் இக்கட்டான கட்டத்திலும், நெருக்கடியிலும் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இந்த பேட்டியில் ஆலிவர் ப்ளூம், உலகளாவிய போட்டி மற்றும் சீன நிறுவனங்களின் கடும் வர்த்தக போட்டி ஆகியவை வரலாறு காணாத நெருக்கடியை ஜெர்மனி கார் நிறுவனங்கள் எதிர்கொண்டு வருகிறது. இந்த மோசமான நிலையில் இருந்து வெளியே வர கார் நிறுவனங்கள் மிகப்பெரிய அளவிலான பணிநீக்கத்தை செயல்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக ஆலிவர் ப்ளூம் தெரிவித்துள்ளார்.

அடுத்த சில நாட்களில் Volkswagen நிறுவனத்தில் பணிநீக்கம் குறித்து உயர்மட்ட நிர்வாகம், ஊழியர்கள் சங்கம் ஆகியவற்றுடன் ஆலிவர் ப்ளூம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இதில் ஒரு பகுதியாக அடுத்த சில நாட்களில் Wolfsburg தலைமையகம் மற்றும் Zwickau, Emden உள்ளிட்ட தொழிற்சாலைகளில் ஊழியர்களை சந்தித்து, நிறுவனத்தின் எதிர்கால திட்டங்கள் குறித்து Blume விளக்க உள்ளார்.
தற்போது வோக்ஸ்வேகன் குழுமத்தில் சுமார் 6.57 லட்சம் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இத்தகைய சூழலில், ஒரு லட்சம் பேர் பணியில் இருந்து நீக்க திட்டமிட்டு வருகிறது. இதில் முதல்கட்டமாக 50000 ஊழியர்களின் பணிநீக்கத்திற்கு உத்தரவிடப்பட்டு உள்ள வோக்ஸ்வேகன் நிர்வாகம், 37000 ஊழியர்கள் பணியில் வெளியேற ஒப்புதல் அளித்துள்ளனர்.
ஏற்கனவே ஜெர்மனியில் செயல்பட்டு வரும் நான்கு தொழிற்சாலைகளையும் மூடுவதற்கான திட்டமும் பரிசீலனையில் இருப்பதாக கூறப்பட்டது. இதில் ஹானோவர், ஸ்விக்காவ் மற்றும் எம்டன் தொழிற்சாலைகள் இடம்பெற்றுள்ளதாகவும் கூறப்பட்டது.
தொழிற்சாலைகள் மூடுவது குறித்து ஆலிவர் ப்ளூம் கூறுகையில், இதுக்குறித்து எவ்விதமான முடிவுகளையும் நாங்கள் எடுக்கவில்லை, இதேவேளையில் Emden, Hannover, Zwickau மற்றும் Neckarsulm ஆகிய தொழிற்சாலைகள் 2030 வரையில் லாபத்திற்கு வருவதற்கான வாய்ப்புகள் குறைந்துள்ளது. ஆனால் தொழிற்சாலை மூடுவது என்பது கடைசிக்கட்ட முடிவு தான்.
கார் உற்பத்தி நிறுத்தப்படக்கூடிய ஆலைகளில், தொழிற்சாலைகளை முழுமையாக மூடுவதற்கு பதிலாக வேறு தொழில்களை மேற்கொள்ள Volkswagen ஆய்வு செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக Osnabruck ஆலையை பாதுகாப்புத் துறை நிறுவனங்கள் பயன்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தெரிவித்தார் ஆலிவர் ப்ளூம். இதற்காக பாதுகாப்புத் துறையைச் சேர்ந்த சில நிறுவனங்களுடன் உயர்மட்ட பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தெரிவித்தார்.
Volkswagen தற்போது எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினை என்னவென்றால் ஐரோப்பாவில் தேவைக்கு அதிகமாக ஆண்டுக்கு சுமார் 5 லட்சம் வாகனங்கள் உற்பத்தி செய்யப்படும் நிலை உள்ளதாகவும், இதற்கு மத்தியில் சீன நிறுவனங்கள் மிகவும் குறைந்த விலையில் கார்களை சந்தைக்கு கொண்டு வருவதும் பெரும் பிரச்சனையாக உள்ளதாக ஆலிவர் ப்ளூம் சுட்டிக்காட்டியுள்ளார்.


Click it and Unblock the Notifications

