சென்னை: ஃபோக்ஸ்வேகன் உலகின் தலைசிறந்த கார் பிராண்டுகளில் ஒன்றாகும். இந்தியாவில், பிரீமியம் கார்களுக்கு பெயர் பெற்றது. இந்த ஏப்ரலில், ஃபோக்ஸ்வேகன் சில நல்ல தள்ளுபடிகளை வழங்க இருக்கிறது. அவை என்னவென்று பார்ப்போம்.
ஃவோக்ஸ்வேகன், டைகன் காம்பாக்ட் எஸ்யூவி மற்றும் விர்டஸ் செடானின் புதுப்பிக்கப்பட்ட பதிப்புகளை புதுப்பித்து வெளியிடலாம் என்ற நோக்கில் செயல்பட்டு வருகிறது. இதற்கிடையில், வோக்ஸ்வாகன் டிகுவான், டைகன் மற்றும் விர்டஸ் ஆகியவற்றில் விற்பனையை ஊக்குவிக்க நல்ல தள்ளுபடியை வழங்கி வருகிறது.

ஏப்ரல் 2024 இல், ஃபோக்ஸ்வேகன் ரொக்கத் தள்ளுபடிகள் மற்றும் பரிமாற்ற பலன்கள் போன்ற கவர்ச்சிகரமான தள்ளுபடிகளை வழங்குகிறது. வெவ்வேறு வாகனங்களுக்கு வெவ்வேறு தள்ளுபடிகள் உள்ளன. எடுத்துக்காட்டாக, ஃபோக்ஸ்வேகன் டைகன் எஸ்யூவி காருக்கு, ரூ.2.40 லட்சம் சலுகையை வழங்குகிறது.
டிகுவான் சலுகை: ஏப்ரல் 2024 இல், ஃபோக்ஸ்வேகனின் டிகுவான் ரூ.2.40 லட்சம் வரையிலான பலன்களை வழங்குகிறது. MY2023 மாடல்களுக்கு, ரூ.75,000 ரொக்கத் தள்ளுபடி மற்றும் ரூ.75,000 எக்ஸ்சேஞ்ச் போனஸுடன், 4 வருட சர்வீஸ் பேக்கேஜுடன் (ரூ. 90,000) பெறலாம்.
இதற்கிடையில், MY2024 மாடல்கள் ரூ.25,000 எக்ஸ்சேஞ்ச் போனஸுடன் வருகின்றன. டிகுவான் ஒரு சக்திவாய்ந்த 190hp, 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் கொண்டுள்ளது, இது 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் மற்றும் VW இன் 4 மோஷன் சிஸ்டம் மூலம் நான்கு சக்கரங்களையும் இயக்குகிறது.
டைகன் சலுகை: ஃபோக்ஸ்வேகன் டைகன் இந்த மாதம் ரூ.1.50 லட்சம் வரையிலான நன்மைகளை வழங்குகிறது. ரூ.90,000 வரை பணத் தள்ளுபடி, ரூ. 40,000 வரை மதிப்புள்ள எக்ஸ்சேஞ்ச் போனஸ், அத்துடன் ரூ.20,000 வரையிலான கார்ப்பரேட் நன்மைகள் மற்றும் லாயல்டி சலுகைகள் ஆகியவை அடங்கும்.
வோக்ஸ்வேகன் டீலர்கள் MY2023 மற்றும் MY2024 ஆகிய இரண்டு கார்களிலும் இந்த நன்மைகளை வழங்குகிறார்கள், இதில் ஜிடி எட்ஜ் ட்ரையல் போன்ற சிறப்பு பதிப்புகளும் அடங்கும். டைகன் இரண்டு எஞ்சின்னுடன் வருகிறது, அவை 115hp, 1.0-லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 150hp, 1.5-லிட்டர் டர்போ பெட்ரோல், மற்றும் ஃபோக்ஸ்வேகன் சமீபத்தில் எஸ்யூவி யின் புதிய ஜிடி லைன் மற்றும் ஜிடி பிளஸ் ஸ்போர்ட் பதிப்புகளை அறிமுகப்படுத்தியது.
விர்டஸ் சலுகை: ஏப்ரல் 2024இல் , விர்டஸ் மிட்சைஸ் செடான் காருக்கு ஃபோக்ஸ்வேகன் ரூ.1.40 லட்சம் வரையிலான பலன்களை வழங்குகிறது. இதற்கும் ரூ.90,000 வரை பணத் தள்ளுபடி, ரூ. 30,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் ரூ.20,000 வரையிலான கார்ப்பரேட் பலன்கள்/லாயல்டி சலுகைகள் ஆகியவை அடங்கும்.
டைகனைப் போலவே, இந்த சலுகைகள் MY2023 மற்றும் MY2024 ஆகிய இரண்டு கார்களுக்கும் பொருந்தும், மேலும் இரண்டு இன்ஜின்கள் உள்ளன. ஹூண்டாய் வெர்னா, ஸ்கோடா குஷாக், ஹோண்டா சிட்டி மற்றும் மாருதி சியாஸ் போன்ற கார்களுடன் விர்டஸ் போட்டியிடுகிறது. ஃபோக்ஸ்வேகன் விரைவில் செடானின் புதிய ஜிடி பிளஸ் ஸ்போர்ட் வகையை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.
நோட்: தள்ளுபடிகள் நகரத்திற்கு நகரம் மாறுபடும் மற்றும் ஸ்டாக் கிடைக்கும் தன்மைக்கு உட்பட்டது. சரியான தள்ளுபடி புள்ளிவிவரங்களுக்கு உங்கள் உள்ளூர் டீலருடன் சரிபார்க்கவும்.


Click it and Unblock the Notifications