அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், மேக் அமெரிக்கா கிரேட் அகெயின் என்ற கொள்கையின் கீழ் பல அதிரடியான அறிவிப்புகளை வெளியிட்டார். ஆனால் இது அனைத்தும் வானில் எறிந்த பந்து போல திரும்ப அமெரிக்காவையே பாதித்தது. முதலில் கனடா, மெக்சிகோ, சீனா மீது வரி, அதன் பின்பு 75 நாடுகள் மீது ரெசிப்ரோக்கல் வரி விதித்தார் டிரம்ப். இவருடைய அறிவிப்பு முதல் சில நாட்களில் டாலர் மதிப்புக்கும், பத்திர சந்தைக்கும் சாதகமாக இருந்தாலும் அதன் பின்பு அமெரிக்கா எந்த அளவுக்கு உலக நாடுகளை நம்பியுள்ளது என்பது வெளிச்சத்திற்கு வந்தது மூலம் பெரும் சரிவை சந்திக்க துவங்கியது.
இதன் அடிப்படையில் 75 நாடுகள் மீது விதிக்கப்பட்ட ரெசிப்ரோக்கல் வரி அமெரிக்க ஆட்டோமொபைல் துறையை அதிகளவில் பாதித்துள்ளது. ஏற்கனவே இதுக்குறித்து அமெரிக்க ஆட்டோமொபைல் நிறுவனங்கள் டிரம்ப்-யிடம் முறையிட்ட நிலையில் தற்போது வால்வோ முக்கியமான அறிவிப்பை வெளியிட்டு ஒட்டுமொத்த அமெரிக்க மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

வோல்வோ குழுமம் அமெரிக்காவில் உள்ள தனது முக்கிய உற்பத்தி ஆலைகளில் தொழிலாளர்களை அதிகளவில் பணிநீக்கம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. அடுத்த மூன்று மாதங்களில் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த இந்த ஆட்டோமொபைல் நிறுவனம் அமெரிக்காவில் இருக்கும் மூன்று முக்கிய ஆலைகளில் சுமார் 550 முதல் 800 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது.
இதில் பென்சில்வேனியாவின் மாகுங்கி நகரில் அமைந்துள்ள மேக் டிரக்ஸ் ஆலையும், வர்ஜீனியாவின் டப்ளின் ஆலையும் மற்றும் மேரிலாந்தின் ஹேகர்ஸ்டவுன் ஆலையும் அடக்கம். இந்த 3 முக்கிய இடங்களில் உள்ள 3 வோல்வோ குழுமத்தின் தொழிற்சாலைகளில் அதிகப்படியான ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட உள்ளனர். இதை அதிகாரப்பூர்வமாக வோல்வோ நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
வோல்வோ குழுமம் வட அமெரிக்காவில் மட்டும் சுமார் 20,000 ஊழியர்களைக் கொண்ட ஒரு பெரிய சாம்ராஜ்ஜியமாகும். தற்போது அறிவிக்கப்பட்ட 800 ஊழியர்கள் பணிநீக்கத்திற்கு அடிப்படை முக்கிய காரணம், டிரம்ப் விதித்த வரியும், வர்த்தக தடை வாயிலாக உருவான நிலையற்ற பொருளாதாரச் சூழலின் விளைவாக இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.
அமெரிக்காவில் இருக்கும் பெரும்பாலான ஆட்டோமொபைல் நிறுவனங்கள் வெளிநாட்டில் இருந்து தான் உதிரிபாகங்களையும், முக்கிய பாகங்களையும் இறக்குமதி செய்து முழு வாகனமாக தயாரிக்கிறது. தற்போது ஆட்டோமொபைல் துறை மீது விதிக்கப்பட்ட வரி காரணமாக பொருட்களை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்து தயாரிப்பதில் பெரும் சவால் உள்ளது.
இதேபோல் வரியோடு பொருட்களை இறக்குமதி செய்தால் வாகனத்தின் விலையும் அதிகரிக்க கூடும், விலை அதிகரித்தால் வர்த்தகம் குறையும். இதனால் வோல்வோ உட்பட பிற ஆட்டோமொபைல் நிறுவனங்களும் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
முதல் அடி: இதுவரையில் டிரம்ப் வரியால் டெக் துறை மட்டுமே பணிநீக்கம் அறிவிப்புகளை வெளியிட்டு வந்த நிலையில் முதல் முறையாக ஆட்டோமொபைல் துறையில் பணிநீக்க அறிவிப்புகளை வெளியிடப்பட்டு உள்ளது. இதை தொடர்ந்து பிற ஆட்டோமொபைல் நிறுவனங்களும் பணிநீக்க அறிவிப்புகளை வெளியிடலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
டிரம்ப்-ன் ஒவ்வொரு அறிவிப்பும் தற்போது சர்வதேச அளவில் வர்த்தகம் மற்றும் பொருளாதார அறிவிப்பில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் நுகர்வோர் மற்றும் வணிக நம்பிக்கையை அமெரிக்காவில் மட்டும் அல்லாமல் உலகின் முன்னணி நாடுகளிலும் குறைத்துள்ளது. இதற்கு காரணம் எப்போது வேண்டுமானாலும் ரெசிஷன் வரலாம் என்ற அச்சம் தான்.
More From GoodReturns

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரானின் Toll Gate- ஆ? வாய்ப்பில்ல ராஜா என்கிறார் டிரம்ப்!!

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

அமெரிக்க வானில் வட்டமிட்ட Dooms Day விமானம்!! டிரம்ப் ஈரானுக்கு விதித்த கெடு நெருங்குவதால் பதற்றம்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

ஈரான் போர்: டிரம்ப் நிர்வாகத்திலேயே ஒரு கருப்பு ஆடு? செய்தியாளர்களிடம் உண்மையை போட்டுடைத்த டிரம்ப்

ஈரான் போர் நிறுத்தம் நீடிக்குமா? வெள்ளிக்கிழமை நடக்க இருக்கும் டிவிஸ்ட்!!

உழைப்பை யாரும் மதிக்கவில்லை!கார்ப்பரேட் வெற்றிக்கு அதிர்ஷ்டம் முக்கியமா- மைக்ரோசாப்ட் ஊழியர் வேதனை?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?



Click it and Unblock the Notifications