சென்னை: நாளை ஏப்ரல் 19 ஆம் தேதி, வெள்ளி கிழமை அன்று நடைபெறவிருக்கும் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் தொடர்பான பணிகள் யாவும் தீவிரமடைந்துள்ளன. இந்திய குடிமக்கள் ஒருவர் கூட வாக்களிப்பதில் இருந்து விடுபட்டு விடக்கூடாது என்பதே இந்திய தேர்தல் ஆணையத்தின் நோக்கமாக உள்ளது. இருப்பினும் சிலர் வெளியூர்களில் தங்கி வேலைக்காகவோ அல்லது இதர விஷயங்களுக்காகவோ இருக்கின்றனர். எனவே தூரம் என்பது உங்கள் ஜனநாயக உரிமையை காக்க இடையூறாக இருக்கக் கூடாது என்பதற்காக நீங்கள் வேறொரு நகரத்தில் வசித்தாலும் உங்களது வாக்குகளை செலுத்த முடியும். இதனை எப்படி செய்வது என்பது குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.
உங்கள் வாக்காளர் ரெஜிஸ்ட்ரேஷன் ஸ்டேட்டஸ் ஐ சரிபார்க்கவும்: நீங்கள் பதிவு செய்யப்பட்ட வாக்காளரா? என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாகவோ அல்லது உங்கள் உள்ளூர் தேர்தல் பதிவு அதிகாரியைத் தொடர்புகொள்வதன் மூலமாகவோ உங்கள் ரெஜிஸ்ட்ரேஷன் ஸ்டேட்டஸ் ஐ ஆன்லைனில் சரிபார்க்கலாம்.

வாக்காளர் பதிவை ட்ரான்ஸ்ஃபர் செய்ய விண்ணப்பிக்க வேண்டும்: நீங்கள் வேறு ஊர்களில் இருந்தாலும், உங்கள் அசல் தொகுதியில் உள்ள வாக்குரிமையைத் தக்க வைத்துக் கொள்ள விரும்பினால், நீங்கள் வாக்காளர் அடையாள பதிவை ட்ரான்ஸ்ஃபர் செய்ய விண்ணப்பிக்க வேண்டும். இதன் மூலம் நீங்கள் ஒரு தொகுதியில் இருந்து மற்றொரு தொகுதிக்கு உங்கள் வாக்காளர் பதிவை மாற்றிக் கொள்ள முடியும். அதற்கான படிவத்தை ஆன்லைனில் அல்லது அருகில் உள்ள வாக்காளர் பதிவு அலுவலகத்தில் இருந்து பெற்று, பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.
ஆவணங்களைச் சமர்ப்பிக்கவும்: இந்த ட்ரான்ஸ்ஃபர் விண்ணப்ப படிவத்துடன் புதிய நகரத்தில், நீங்கள் தற்போது வசித்து கொண்டிருப்பதற்கான ஆதாரத்தை வாக்காளர் பதிவு அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். சான்றாக வாடகை ஒப்பந்தம், யூட்டிலிட்டி பில்கள் அல்லது உள்ளூர் அதிகாரிகளால் வழங்கப்பட்ட நேட்டிவிட்டி சர்டிபிகேட் போன்ற ஆவணங்களை நீங்கள் சமர்ப்பிக்கலாம். ட்ரான்ஸ்ஃபர் விண்ணப்பம் பெற விரும்பினால் இந்த ஆவணங்களை கைவசம் வைத்துக் கொள்ள வேண்டும்.
சரி பார்க்கும் வரை காத்திருங்கள்: தேவையான ஆவணங்களை நீங்கள் சமர்பித்தவுடன் தேர்தல் பதிவு அதிகாரி, இந்த ஆவணங்களை சரிபார்க்கத் தொடங்குவார். மேலும், நீங்கள் புதிய நகரத்தில் வசிக்கின்ற இடத்தை ஆய்வு செய்ய அதிகாரிகள் வருவதும் இதில் அடங்கும்.
உறுதிப்படுத்தலைப் பெறுங்கள்: வெற்றிகரமான சரிபார்ப்புக்குப் பிறகு, உங்கள் வாக்காளர் ஐடி புதிய தொகுதிக்கு மாற்றப்படும். விண்ணப்பச் செயல்பாட்டின் போது நீங்கள் தேர்ந்தெடுத்த தகவல்தொடர்பு முறையைப் பொறுத்து, அஞ்சல் மூலமாகவோ அல்லது மின்னணு மூலமாகவோ உங்கள் வாக்காளர் பதிவு மாற்றம் செய்யப்பட்டது உறுதிப்படுத்தப்படும்.
உங்கள் வாக்கை செலுத்துங்கள்: மக்களவைத் தேர்தல் அன்று, உங்கள் புதிய தொகுதிக்கு ஒதுக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடிக்குச் செல்லவும். உங்கள் புதுப்பிக்கப்பட்ட வாக்காளர் அடையாள அட்டை அல்லது தேர்தல் ஆணையத்தால் குறிப்பிடப்பட்ட வேறு ஏதேனும் அடையாள ஆவணங்களை எடுத்துச் செல்வதை உறுதிசெய்து கொள்ளுங்கள்.
அதன் பின், நீங்கள் விரும்பும் வேட்பாளருக்கு வாக்களிக்கவும். உங்கள் வாக்கு, தேசத்தின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதற்குப் பங்களிக்கிறது என்பதை சிந்தித்து செயல்படுங்கள்.
More From GoodReturns

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!



Click it and Unblock the Notifications