டெல்லி: இந்தியா பொருளாதாரம் ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி கண்டுள்ளது. மேலும் இது வரவிருக்கும் ஆண்டுகளில் வளர்ச்சி இதே போல் குறையும் என்றும் பீதியை கிளப்பி வருகிறார்கள் சில பொருளாதார நிபுணர்கள்.
ஆனால் இவற்றிற்கெல்லாம் எதிர்மாறாக இந்தியாவின் துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, பொருளாதாரம் விரைவில் மீண்டு வரும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்திய பொருளாதார சங்கத்தின் 102-வது ஆண்டு மாநாட்டை தொடங்கி வைத்து பேசிய அவர், நடப்பு நிதியாண்டின் வளர்ச்சி வீழ்ச்சியால் இந்திய பொருளாதாரம் சில சவால்களை மேற்கொண்டுள்ளது.
பொருளாதார வீழ்ச்சி உண்மை தான்
இந்த வீழ்ச்சியால் பொருளாதாரம் வீழ்ச்சி கண்டுள்ளது உண்மைதான். மேலும் இதனால் சில சவால்களை எதிர் கொண்டுள்ளது உண்மை தான். ஆனால் எவ்வாறயினும் கிழக்கு ஆசிய நிதி நெருக்கடி மற்றும் உலகளாவிய மந்த நிலையை அடுத்து நாடு கடந்த காலங்களில் இதே போன்ற சரிவைக் எதிர்கொண்டது. ஆனால் ஒவ்வொரு முறையும் அதிக வளர்ச்சி கண்டு முன்னேறியது என்று அவர் கூறினார்.
பொருளாதாரம் மீட்டெடுக்கப்படும்
கறுப்பு பணத்தை கட்டுப்படுத்த அரசாங்கத்தால் சில சீர்த்திருத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் திவால்நிலை மற்றும் ஜிஎஸ்டி விகிதங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது போன்ற சீர்திருத்த நடவடிக்கைகள் வரவிருக்கும் காலங்களில் வளர்ச்சிக்கு உதவும் என்றும் கூறப்படுகிறது. மேலும் அவர்கள் பொருளாதாரத்தை மேலும் வலுவாக மாற்றுவார்கள் என்றும் நாயுடு தெரிவித்துள்ளார்.
பொருளாதாரத்தினை மேம்படுத்த நடவடிக்கை
ஜிஎஸ்டி ஆட்சியின் கீழ் 66 லட்சம் புதிய வரி செலுத்துவோர் பதிவு செய்யப்பட்டுள்ளதை சுட்டிக் காட்டிய துணை ஜனாதிபதி, பொருளாதாரத்தை முறைப்படுத்துவதற்கான அதிரித்து வரும் போக்கையும் சுட்டிக் காட்டியுள்ளார். மேலும் வங்கித்துறையின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காகவும், வாராக்கடன் சிக்கலை சமாளிப்பதற்காகவும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் நாயுடு தெரிவித்துள்ளார்.
இந்திய பொருளாதாரத்தில் விவசாயம் முக்கிய பங்கு
இந்திய பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகித்து வருவது விவசாயமே. எனினும் நீண்ட கால தள்ளுபடிகள் மற்றும் மானியங்கள் என்பது நீண்டகாலத்திற்கு கொடுக்க முடியாதவை என்றும் எச்சரித்தார். மேலும் கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்துவதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார். கிராமப்புற பொருளாதாரம் வளர்ச்சிக்கு கிராமப்புற பண்னை அல்லாத நடவடிக்கைகள் சமமாக முக்கியமானவை என்றும் கூறியுள்ளார்.
ஆறுதல் தரும் விஷயம்
இந்த நிலையில் 2022க்குள் விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக்குவது நமது தேசிய தீர்மானமாகும். நாயுடு ஒரு நிலையான மற்றும் ஊதியம் தரும் கிராமப்புற பொருளாதாரத்தை உருவாக்க அழைப்பு விடுத்தார். மற்ற பொருளாதார நிபுணர்கள் பொருளாதாரம் அடுத்த ஆண்டிலும் வீழ்ச்சி காணும் என்று கூறியிருக்கும் நிலையில், துணை குடியரசு தலைவர் கூறியிருப்பது சற்றே ஆறுதல் தரும் விஷயமாக உள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications