இந்தியப் பங்குச் சந்தை சமீப காலமாக பெரும் ஏற்ற இறக்கத்தைக் கண்டு வருகிறது. கிட்டத்தட்ட அனைத்து துறை பங்குகளும் முதலீட்டாளர்களுக்கு நஷ்டத்தை கொடுத்துள்ளன. அப்படிப்பட்ட நிலையிலும் சில பங்குகள் தொடர்ந்து அபார லாபத்தைக் கொடுத்து வருகின்றன. அந்த வகையில், வாரீ ரெனுவபில் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் இந்த மல்டிபேக்கர் பங்கு வெறும் 5 ஆண்டுகளில் ரூ.1 லட்சம் முதலீட்டை 6 கோடி வருமானமாக வழங்கியுள்ளது.
பங்குச் சந்தை மிகவும் நிலையற்றது மற்றும் பங்கு முதலீடு மிகவும் ஆபத்தானது. இருப்பினும், மிகக் குறுகிய காலத்தில் முதலீட்டாளர்களை கோடீஸ்வரர்களாக்கிய பங்குகள் உள்ளன. சில பங்குகள் நீண்ட காலத்திற்கு முதலீட்டாளர்களுக்கு பணமழை பொழிந்துள்ளன. வேறு சில பங்குகள் குறுகிய காலத்தில் எதிர்பார்த்ததை விட சிறந்த வருமானத்தை அளித்துள்ளன. அதில் வாரீ ரெனுவபில்ஸ் அத்தகைய பங்குகளில் ஒன்றாகும். இந்த பங்கு முதலீட்டாளர்களுக்கு வெறும் ஐந்தாண்டுகளில் பல கோடி ரூபாய் சம்பாதித்துள்ளது. அதே காலகட்டத்தில் இந்தப் பங்கின் விலை ரூ.4 அதிகரித்து ரூ.1480 ஆக இருந்தது. வரும் நாட்களில் இந்தப் பங்கு மேலும் உயர வாய்ப்புள்ளதாக சந்தை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

வாரீ ரெனுவபில்ஸ் டெக்னாலஜிஸின் பங்குகள் கடுமையான உயர்வை பதிவு செய்துள்ளன. கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு அதாவது நவம்பர் 15, 2019 அன்று இந்த நிறுவனத்தின் பங்கின் விலை ரூ.2.34 மட்டுமே இருந்தது. தற்போது இந்த பங்கின் விலை கடந்த வியாழன் அமர்வில் (நவ.14) ஒரு பங்கு ரூ.1,480 ஆக இருந்தது.
வாரீ ரெனுவபில் டெக்னாலஜிஸின் பங்கு மிகக் குறுகிய காலத்தில் மல்டிபேக்கர் வருமானத்தை அளித்து அதன் முதலீட்டாளர்களை கோடீஸ்வரர்களாக்கியுள்ளது. இது கடந்த 5 ஆண்டுகளில் 63,162.82% உயர்ந்துள்ளது. அதன்படி, நவம்பர் 15, 2019 அன்று இந்தப் பங்கில் ரூ.1 லட்சம் முதலீடு செய்திருந்தால், அதன் தற்போதைய மதிப்பு ரூ.6.32 கோடியாக இருக்கும். அதாவது வெறும் ஐந்தே வருடங்களில் இந்த பங்கு முதலீட்டாளரை மிகப்பெரும் கோடீஸ்வரனாக்கி விட்டது. கடந்த 5 ஆண்டுகளில் 1 லட்சம் முதலீட்டுக்கு ரூ.10 கோடியை வழங்கியுள்ளது. கடந்த ஓராண்டில் 413.80% வருமானம் அளித்துள்ளது.
வாரி ரெனுவபிள் டெக்னாலஜிஸ் நிறுவனம் 1999 இல் நிறுவப்பட்டது. இது தற்போது சோலார் இபிசி துறையில் புகழ்பெற்ற நிறுவனமாக உள்ளது. வாரி ரினியூவபிள்ஸ் முக்கியமாக சூரிய சக்தி மூலம் மின்சாரம் தயாரிப்பதில் கவனம் செலுத்துகிறது.
இதற்கிடையில், இந்த பங்கு அதன் 52 வார அதிகபட்ச விலையாக ரூ.3,037 ஆகவும், 52 வார குறைந்தபட்ச விலையாக ரூ.268.10 ஆகவும் உள்ளது. இதன் சந்தை மூலதனம் ரூ.15,430 கோடியாக உள்ளது.


Click it and Unblock the Notifications