எஃப்எம்சி நிறுவனர் வாக் பக்ரி டீ குழுமத்தின் நிர்வாக இயக்குநர் பராக் தேசாய் தனது 49வது வயதில் காலமானார். அக்டோபர் 15ஆம் தேதி அவர் தனது வீட்டுக்கு வெளியே தெரு நாய்களால் தாக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிவையில் இன்று, அக்டோபர் 22, திங்கட்கிழமை அறுவை சிகிச்சையின் போது அவர் சைடஸ் மருத்துவமனையில் மூளை ரத்தக்கசிவு காரணமாக உயிரிழந்தார்.
ஆக்ரோஷமான நாய்களின் கூட்டத்திலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள முயன்றபோது வீட்டின் வெளியே விழுந்ததில் அவருக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து பராக் தேசாய் வீட்டு காவலர் அவரது குடும்பத்தினரை எச்சரித்ததை அடுத்து அவர் ஷெல்பி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

குஜராத் எம்.பி., ஷக்திசிங் கோஹில், இச்சம்பவம் குறித்து இரங்கல் தெரிவித்துள்ளார். கீழே விழுந்ததில் பராக் தேசாய்-க்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டது. அவரது ஆன்மா சாந்தியடையட்டும். இந்தியா முழுவதும் உள்ள வாக் பக்ரி குடும்பத்துக்கும் எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று இரங்கல் குறிப்பில் அவர் கூறியுள்ளார்.
குஜராத்தின் அகமதாபாத்தை தளமாகக் கொண்ட வாக் பக்ரி தேயிலை குழு 1982 முதல் தேசிய மற்றும் சர்வதேச அளவில் தேயிலை வணிகத்தில் வலுவான முன்னிலையில் உள்ளது. 2,000 கோடி ரூபாய்க்கு மேல் விற்றுமுதல் மற்றும் 50 மில்லியன் கிலோவுக்கு மேல் தேயிலை விநியோகம் செய்து தற்போது இந்தியாவின் முன்னணி தேயிலை பேக்கேஜ் நிறுவனமாக உள்ளது.
MBA பட்டதாரியான பராக் தேசாய், குழுமத்தின் விற்பனை, மார்கெட்டிங் மற்றும் ஏற்றுமதி துறைகளை நிர்வகித்து வந்தார்.
வாக் பக்ரி டீ குழுமத்தின் நிர்வாக இயக்குநரான ரசேஷ் தேசாய், விபத்தில் தனது மகனை இழந்தார். பராக் தேசாய் அவரது மனைவி மற்றும் மகள் உடன் இருந்தார்.


Click it and Unblock the Notifications