பிரபலமான தொழிலதிபரை பார்க்கும்போது நாம் அவருக்கு என்னப்பா யோகக்கார மனுசன் என்று எளிதாக சொல்லி விடுகிறோம். ஆனால் அவரின் இந்த வெற்றிக்கு பின்னால் எத்தனை தோல்விகள், மன அழுத்தங்கள், பணத்துக்காக அலைந்தது போன்ற விஷயங்கள் இருப்பதை நாம் மறந்து விடுகிறோம்.
பிரபல மெத்தை நிறுவனமான வேக்ஃபிட் நிறுவனத்தின் துணை நிறுவனர் சைதன்யா ராமலிங்கேவுடாவின் பெரிய வெற்றிக்கு பின்னால் பல தோல்விகள், நெருக்கடிகள் இருந்தன. அவரின் வாழ்க்கை வரலாற்றை கொஞ்சம் பார்ப்போம்.

ஹைதராபாத்தின் இந்தியன் ஸ்கூல் ஆஃப் பிசினஸில் எம்.பி.ஏ. படித்தவர் சைதன்யா ராமலிங்கேகவுடா . இவர் படிப்பு முடிந்த பிறகு டெலாய்ட் மற்றும் காக்னிசண்ட் உள்ளிட்ட ஆலோசனை நிறுவனங்களில் பணிபுரிந்தார்.
2011ல் அந்த வேலைகளை விட்டு விட்டு டேட்டிங் தொடர்பான செயலியுடன் ஸ்டார்ட்அப் நிறுவனத்தை தொடங்கினார். அதில் பல சவால்களை எதிர்கொண்டார். பின்னர் மற்றொரு ஸ்டார்ட் அப் நிறுவனத்தை தொடங்கினார். இது மனித உறவுகளை மையமாக கொண்ட ஆன்லைன் சமூகமாகும். கையில் இருந்த சேமிப்புகளை போட்டுத்தான் இந்த ஸ்டார்ட்அப் நிறுவனங்களை தொடங்கி இருந்தார்.
ஒரு ஞாயிற்றுக்கிழமை, தனது வங்கி கணக்கில் இருந்து ரூ.3,000 எடுத்தார். அப்போது நம்மிடம் வேறு எந்த நிதியும் இல்லை, இந்த பணமும் ஒரு வாரம் தாக்கு பிடிக்கும் என்பனை உணர்ந்தார். அனைத்து சேமிப்புகளும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களும் முதலீடு செய்து விட்டார்.
இதனையடுத்து மாற்று நாட்களில் அல்லது இரவுகளில் பார்ட் டைம் கன்சல்டிங் வேலை செய்து வாடகை செலுத்தினார். மன அழுத்த நிலையை நோக்கி இருந்தார். என்னதாலும் நிதி பற்றாக்குறை இருந்தபோதிலும், ஸ்டார்ட்அப் நிறுவனம் மூடப்படும் வரை அதில் பணியாற்றிய 10 ஊழியர்களுக்கு ஊதியம் சரியான நேரத்தில் செலுத்துவதை உறுதி செய்தார்.
2014ல் ஸ்டார்ட்அப் நிறுவனங்களை மூடினார். ஆனால் தனிப்பட்ட சவால்களையும், மன அழுத்தத்தையும் சந்தித்தார். பின்னர் சீக்வோயா நிதியுதவி பெற்ற ஹெல்ப்ஷாட்டில் வேலைக்கு சேர்ந்தார். ஆனால் வேலைக்கு சேர்ந்த ஒரு ஆண்டுக்குள் அந்த வேலையை ராஜினாமா செய்தார்.
ஹெல்ப்ஷாட்டில் பணிபுரியும்போது மெத்தை துறையில் நிபுணரான அன்கிட் கார்க்கை சந்தித்தது அவரது வாழ்க்கையில் பெரும் திருப்புமுனையாக இருந்தது. பாரம்பரிய மெத்தை சந்தையில் புதுமை இல்லாதது மற்றும் அதிக விலை இருந்ததால் நாம் இந்த துறையில் சாதிக்க முடியும் என்ற உந்துதல் அங்கிட்டுக்கு உருவானது.
சைதன்யாவும் மற்றும் அங்கிட்டும் நித்திரை (தூக்கம்) துறையில் புரட்சியை ஏற்படுத்த அவர்கள் முடிவு செய்தனர். இதனையடுத்து 2015ல் நேரடி நுகர்வோர் ஆன்லைன் மெத்தை சில்லரை விற்பனையாளராக வேக்ஃபிட்டை தொடங்கினர்.
அமேசானில் அன்கிட்டின் சோதனை விற்பனை வெற்றியடைந்தது. அவர்கள் புதுமை மற்றும் தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்தினர். வேக்ஃபிட் நிறுவனத்தின் எலும்பியல் மெத்தை பிரபலமடைந்தது. தொற்றுநோய் பின்னடைவுகள் மற்றும் வாடிக்கையாளர் புகார்கள் இருந்தபோதிலும் வேக்ஃபிட் கணிசமாக மீண்டு உயர்ந்தது.
இந்நிறுவனம் தற்போது பர்னிச்சர்களையும் விற்பனை செய்கிறது. என்டிராக்ரின் தரவுகளின்படி, 2022-23ம் நிதியாண்டில் வேக்ஃபிட் நிறுவனம் ரூ.813 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. இது முந்தைய நிதியாண்டைக் காட்டிலும் 28.4 சதவீதம் அதிகமாகும். 2021-22ம் நிதியாண்டில் அந்நிறுவனத்தின் வருவாய் ரூ.633 கோடியாக இருந்தது.


Click it and Unblock the Notifications