இந்தியாவின் முன்னணி மெத்தை நிறுவனமான வேக்ஃபிட் இன்னோவேஷன்ஸ் லிமிடெட் இத்துறையில் வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக விற்பனை துவங்கி புதிய மாற்றத்தை கொண்டு வந்தது. இந்த மாற்றம் இளம் தலைமுறையினர் மத்தியில் பெரிய அளவில் விரும்பப்பட்ட நிலையில் இந்தியாவில் நெடுங்காலமாக இருந்த நிறுவனங்களை தாண்டி வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது.
இந்த வளர்ச்சி கொடுத்த நம்பிக்கையும், சந்தையில் தனக்கான இடத்தையும் பிடித்த காரணத்தால் தற்போது ஐபிஓ வெளியிட செபி அமைப்பிடம் ஜூன் 26ஆம் தேதி DRHP அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. இந்த ஐபிஓ மூலம் Wakefit நிறுவனம் ரூ.468 கோடி மதிப்பிலான தொகையை புதிய பங்கு வெளியீடு வாயிலாகவும் மற்றும் 5.84 கோடி பங்குகளை OFS வாயிலாக விற்பனை நிதியை திரட்ட உள்ளது.

வேக்ஃபிட் இந்த ஐபிஓ மூலம் மொத்த ரூ.1,500-2,000 கோடி அளவிலான நிதியை திரட்டலாம். இந்நிறுவனம், தேசிய பங்கு பரிவர்த்தனை (NSE) மற்றும் மும்பை பங்கு பரிவர்த்தனையில் (BSE) பட்டியலிட திட்டமிட்டுள்ளது.
எப்படி பைன் லேப்ஸ் நிறுவனத்தில் முக்கிய முதலீட்டாளர்கள் அனைவரும் இணைந்து பங்குகளை விற்பனை செய்தனரோ, அதேபோல் வேக்ஃபிட் ஐபிஓ-விலும் முக்கிய முதலீட்டாளர்கள் அனைவரும் பங்குகளை விற்கின்றனர்.
இதன் படி பீக் எக்ஸ்வி பார்ட்னர்ஸ் 2.5 கோடி பங்குகளை (OFS-இல் 48.8%) விற்கிறது, வெர்லின்வெஸ்ட் 1 கோடி பங்குகளையும், இன்வெஸ்ட்கார்ப் 54.5 லட்சம் பங்குகளையும் விற்கின்றன. இந்நிறுவனத்தின் இணை நிறுவனர்கள் அங்கித் கார்க் மற்றும் சைதன்ய ராமலிங்கேகவுடா ஆகியோர் 1.21 கோடி பங்குகளை விற்கின்றனர்.
வேக்பிட் நிறுவனத்தின் பீக் எக்ஸ்வி 22.7% பங்குகளுடன் மிகப்பெரிய முதலீட்டாளராக உள்ளது, அதைத் தொடர்ந்து வெர்லின்வெஸ்ட் (9.89%) மற்றும் இன்வெஸ்ட்கார்ப் (9.39%) உள்ளனர். அங்கித் கார்க் 33.38% பங்குகளையும், சைதன்ய ராமலிங்கேகவுடா 10.09% பங்குகளையும் வைத்துள்ளனர்.
2016-ல் அங்கித் கார்க் மற்றும் சைதன்ய ராமலிங்கேகவுடாவால் நிறுவப்பட்ட வேக்ஃபிட், மெத்தைகள் (62.2% வருவாய்), மரச்சாமான்கள் (26.8%), மற்றும் வீட்டு அலங்காரப் பொருட்கள் (10.9%) ஆகியவற்றை சொந்தமாக தயாரித்து விற்கின்றனர்.
இந்நிறுவனம் தற்போது கர்நாடகா, ஹரியானா, மற்றும் தமிழ்நாட்டில் ஐந்து உற்பத்தி தளங்களை வைத்துக்கொண்டு ஆன்லைன் மூலம் தனது தயாரிப்புகளை இந்தியா முழுவதும் விற்பனை செய்கிறது. ஆன்லைன் வாயிலாக மட்டும் அல்லாமல் இந்நிறுவனம் தனியாக நிர்வகிக்கப்படும் கடைகள் மற்றும் பிற சந்தைகள் வழியாகவும் விற்பனை செய்கிறது.
இப்படி இந்தியா முழுவதும் விற்பனை செய்த வேக்பிட் 2024ஆம் நிதியாண்டில் ரூ.986.3 கோடி வருவாயைப் பதிவு செய்ததது. 2023-ல் ரூ.145.68 கோடி நஷ்டத்திலிருந்து 2024-ல் ரூ.15.05 கோடி நஷ்டமாக குறைத்தது.
More From GoodReturns

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

4 வார ஈரான் போர்.. தரைமட்டத்திற்கு வந்த டெக் பங்குகள்.. அமெரிக்க அலறல்..!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?



Click it and Unblock the Notifications