சீனா கொடுத்த பதிலடி.. அமெரிக்கப் பங்குச்சந்தையைக் கொஞ்சம் பாருங்கள்..!!

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வர்த்தக போர் பதற்றங்கள் தற்போது புதிய உச்சத்தை எட்டியுள்ளது, உலகின் மிகப்பெரிய வல்லரசு நாட்டிற்கும், உலகின் மிகப்பெரிய உற்பத்தி - ஏற்றுமதி நாட்டிற்கும் வர்த்தக போர் என்பது சர்வதேச பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் பின்னடைவு. டிரம்ப் தனது முதல் ஆட்சியில் சீனா மீது மட்டும் வர்த்தக போர் தொடுத்தார், ஆனால் தற்போது 60 நாடுகள் மீது ரெசிப்ரோக்கல் வரி விதித்து உலக நாடுகளுடன் வர்த்தக போரை தொடுத்துள்ளார்.

இந்த நிலையில் அமெரிக்கா விதித்த 104 சதவீத வரிக்குப் பதிலடி கொடுக்கும் விதமாகச் சீனா அரசு 84 சதவீத வரியை விதித்துள்ளது, இது மட்டும் அல்லாமல் பல அமெரிக்க நிறுவனங்களை பிளாக் லிஸ்ட் பட்டியலில் சேர்த்துள்ளது. இந்த நடவடிக்கை அமெரிக்கப் பங்குச்சந்தை மோசமாக எதிரொலிக்கும் என கணிக்கப்பட்டது. ஆனால் தற்போது என்ன நிலைமை தெரியுமா..?

சீனா கொடுத்த பதிலடி.. அமெரிக்கப் பங்குச்சந்தையைக் கொஞ்சம் பாருங்கள்..!!

அமெரிக்கப் பங்குச்சந்தை: புதன்கிழமை ஆரம்ப வர்த்தகத்தில் அமெரிக்கப் பங்குச் சந்தைகள் கலவையான போக்கைப் பதிவு செய்தது. சீனா- அமெரிக்கா வர்த்தக போர் காரணமாக எஸ்&பி 500 குறியீடு சுமார் 0.1% சரிவைச் சந்தித்து தற்போது உயர்வுடன் உள்ளது. அதே நேரத்தில், தொழில்நுட்பப் பங்குகள் அதிகமுள்ள நாஸ்டாக் குறியீடு 0.5% உயர்வை பதிவு செய்தது. இருப்பினும், தொழில்துறை சார்ந்த முன்னணி நிறுவனங்களின் டவ் ஜோன்ஸ் தொழில்துறை சராசரி குறியீடு 0.4% குறைந்து தற்போது மீண்டுள்ளது.

அமெரிக்க நேரப்படி புதன்கிழமை காலை 10 மணிக்கு டாவ் ஜோன்ஸ் இண்டஸ்ட்ரீயல், நாஸ்டாக் காம்போசிட், எஸ் & பி 500 இன்டெக்ஸ் ஆகியவை உயர்வுடன் உள்ளது. வர்த்தக துவக்கத்தில் பதிவான அனைத்து சரிவையும் மீட்டு எடுத்துள்ளது.

அமெரிக்கப் பத்திர முதலீடு: இதற்கிடையில், முக்கிய 10 ஆண்டுக்கால அமெரிக்கக் கருவூலப் பத்திரத்தின் வருவாய் தொடர்ந்து அதிகரித்து, 4.5% ஐ நெருங்கியுள்ளது. கடந்த மூன்று வர்த்தக நாட்களில் மட்டும் இப்பத்திரத்தின் வருவாய் 50 அடிப்படை புள்ளிகளுக்கு மேல் உயர்ந்துள்ளது. இது 2001 ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஏற்பட்ட மிகப்பெரிய மூன்று நாள் உயர்வாகும்.

சீன வர்த்தகம் பாதிப்பு: மேலும், டிரம்ப் நிர்வாகம் சீனப் பொருட்கள் மீது விதித்த வரிகள் சீனாவின் கிறிஸ்துமஸ் விற்பனையைப் பாதிக்கத் தொடங்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ராய்ட்டர்ஸ் அறிக்கையின்படி, கடந்த ஆண்டு அமெரிக்காவில் விற்பனை செய்யப்பட்ட கிறிஸ்துமஸ் பொருட்களில் சுமார் 87% சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவை. இதன் மதிப்பு சுமார் 4 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.

கிறிஸ்துமஸ் பண்டிகை: இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகைக் காலத்துக்கான ஆர்டர்கள் வழக்கமாக ஏப்ரல் மாத மத்தியில் இறுதி செய்யப்படும், ஆனால் வரி காரணமாக இந்த ஆண்டு அமெரிக்க வாடிக்கையாளர்களிடமிருந்து எந்த ஆர்டரும் வரவில்லை என்று சீனாவில் தொழிற்சாலை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த வரி சர்வதேச வணிகத்தையும், சப்ளை செயினையும் அதிகமாக பாதிக்க துவங்கியுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம்: உலகளாவிய வர்த்தகச் சூழலுக்கு மேலும் சிக்கலைச் சேர்க்கும் விதமாக, ஐரோப்பிய ஒன்றியம் புதன்கிழமை அமெரிக்கா எஃகு மற்றும் அலுமினியப் பொருட்கள் மீது விதித்த வரிகளுக்குப் பதிலடி கொடுக்கும் தனது முதல் கட்ட வரி விதிப்புக்கு ஒப்புதல் அளித்தது என்று சிஎன்பிசி செய்தி வெளியிட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் நிர்வாக அமைப்பான ஐரோப்பிய கமிஷன், ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் சுற்று வரிவிதிப்பு நடைமுறைக்கு வரும் என்று அறிவித்தது. பல்வேறு பொருட்களை டார்கெட் செய்து இந்த பதிலடி வரி விதிப்பு செயல்படுத்தியுள்ளது ஐரோப்பிய ஒன்றியம்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உலோகங்கள் மீது 25% வரி விதித்த பின்னர், ஐரோப்பிய மக்களை பாதுகாக்க 27 நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியம் பதிலடி கொடுக்க முடிவு செய்தது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+