உலகளவில் ரீடெய்ல் விற்பனையில் முன்னணியில் இருக்கிறது வால்மார்ட் நிறுவனம். இந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பொறுப்பில் இருப்பவர் டக் மெக்மில்லன். கூடிய விரைவில் இவர் பணி ஓய்வு பெற இருக்கிறார். இந்த வேலைக்காக இவர் வாங்கக்கூடிய சம்பளம் தான் தற்போது உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்படும் விஷயமாக இருக்கிறது.
வருவாய் அடிப்படையில் உலகின் மிகப்பெரிய சில்லறை விற்பனை நிறுவனமாக வால்மார்ட் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பொறுப்பில் இருப்பவர்தான் டக் மெக் மில்லன். இவர் கடந்த 2011 ஆம் ஆண்டில் இருந்து வால்மார்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பொறுப்பில் இருக்கிறார். அப்போது முதல் தற்போது வரை அவர் 27.5 மில்லியன் டாலர்கள் அதாவது இந்திய ரூபாயின் மதிப்பில் 248 கோடி ரூபாயை வருமானமாக ஈட்டியிருக்கிறார்.

அப்படி பார்த்தால் 2011 ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை இவர் ஒவ்வொரு முப்பது நிமிடங்களுக்கும் 1.4 லட்சம் ரூபாயை சம்பளமாக பெற்று இருக்கிறார். கடந்த ஆண்டு மெக் மில்லன் 1.5 மில்லியன் டாலர்கள் சம்பளம் வாங்கி இருக்கிறார் . இது தவிர 20.4 மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள நிறுவனத்தின் பங்கு அவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இதோடு சேர்ந்து 4.4 மில்லியன் டாலர்கள் இன்சென்டிவ் ஆக அவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
வால்மார்ட் நிறுவனம் இவரது தலைமையின் கீழ் 905 பில்லியன் டாலர்கள் வருமானமாக ஈட்டு இருக்கிறதாம். அந்த வகையில் வால்மார்ட் நிறுவனத்தை உலகின் முன்னணி ரீடெய்ல் நிறுவனமாக மாற்றிய பெருமை மெக்மில்லனுக்கு இருக்கிறது. வால்மார்ட் நிறுவனத்தில் 1984 ஆம் ஆண்டு சாதாரண ஒரு கிடங்கு ஊழியராக வேலைக்கு சேர்ந்தவர். லாரிகளில் வரக்கூடிய சரக்குகளை எடுத்து வைப்பது தான் இவருடைய வேலை.
அப்போது ஒரு மணி நேரத்திற்கு இவருக்கு 6 டாலர்கள் சம்பளம். ஆனால் தற்போது ஒரு மணி நேரத்திற்கு இவருடைய சம்பளம் 2.6 லட்சம் ரூபாய் அதுவும் 24 மணி நேரத்திற்கும் வழங்கப்படுகிறது. ஒரு நிமிடத்திற்கு 52 டாலர்களை இவர் சம்பாதிக்கிறார் அப்படி என்றால் ஒவ்வொரு நிமிடமும் இவர் 4600 ரூபாயை வருமானமாக ஈட்டுகிறார்.
ஆனால் வால்மார்ட் நிறுவனத்தில் வேலை செய்யக்கூடிய ஒரு சராசரி ஊழியர் ஒரு ஆண்டுக்கு 62,000 டாலர்கள்தான் வருமானமாக பெறுகிறார். இது மெக் மில்லனின் ஒரு நாள் சம்பளம் கூட கிடையாது என்கின்றனர் சமூக வலைதளவாசிகள். வால்மார்ட் தலைமை செயல் அதிகாரி மட்டுமல்ல, டெஸ்லா தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க், ஆப்பிள் தலைமை செயல் அதிகாரி டிம் குக் என அமெரிக்கா சிஇஓ-க்கள் அனைவருமே இப்படி ஒவ்வொரு மணி நேரமும் பல லட்சம் வருமானம் ஈட்டுபவராக தான் இருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications