அமெரிக்காவின் பிரபல சில்லறை வர்த்தக நிறுவனமான வால்மார்ட், 2023 ஆம் ஆண்டின் முதல் பாதியில் பிளிப்கார்ட் நிறுவனத்தின் நிர்வாகத்தில் கட்டுப்பாட்டு இல்லாத முதலீட்டாளர்களிடம் இருக்கும் பங்குகளை வாங்க சுமார் 3.5 பில்லியன் டாலர் அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 28,953 கோடி ரூபாய் முதலீடு செய்து பங்குகளை கைப்பற்றியுள்ளது.
இதன் மூலம் வால்மார்ட் பிளிப்கார்ட் நிறுவனத்தில் பங்கு இருப்பை எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. இந்திய சந்தையில் மறைமுகமாக செயல்படும் அமெரிக்காவின் வால்மார்ட், பிளிப்கார்ட் மூலம் இந்தியா முழுவதும் பொருட்களை விற்பனை செய்தி இந்திய ரீடைல் சந்தையை கைப்பற்றி வருகிறது.

2023 ஆம் ஆண்டின் முதல் பாதியில், பிளிப்கார்ட் அதன் துணை நிறுவனமான PhonePe க்கு புதிய முதலீட்டு சுற்றில் 700 மில்லியன் டாலர் முதலீட்டை பெற்றுள்ளது என்று அமெரிக்காவின் பென்டன்வைல்-ஐ தளமாகக் கொண்ட வால்மார்ட் அமெரிக்காவின் Securities & Exchange Commission (US SEC) தெரிவித்துள்ளது.
ஜூலை 31, 2023 இல் முடிவடைந்த ஆறு மாதங்களில், நிறுவனம் சில பிளிப்கார்ட் நிறுவனத்தின் நிர்வாகத்தில் கட்டுப்பாடு இல்லாத முதலீட்டாளர்களிடம் இருக்கும் பங்குகளைப் பெறுவதற்கும், PhonePe இன் முன்னாள் பங்குதாரர்களுக்கு பொறுப்பைத் தீர்ப்பதற்கும் சுமார் 3.5 பில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்துள்ளது.
வால்மார்ட் நிறுவனம் சமீபத்தில் ஹெட்ஜ் ஃபண்ட் நிறுவனமான டைகர் குளோபல் மற்றும் ஆக்செல் பார்ட்னர்ஸ் ஆகியவற்றிலிருந்து பங்குகளை வாங்கியுள்ளார். பிளிப்கார்ட் இணை நிறுவனர் பின்னி பன்சாலின் எஞ்சிய பங்குகளையும் இது வாங்கியது.
பிளிப்கார்ட்டில் மேலும் பங்குகளை கையகப்படுத்திய பிறகு, இந்திய இ-காமர்ஸ் நிறுவனத்தில் வால்மார்ட்டின் மொத்த பங்கு 80.5% ஆக உயர்ந்துள்ளது. 2018 ஆம் ஆண்டில், வால்மார்ட் பிளிப்கார்ட்டில் 77% பங்குகளை வாங்கியது குறிப்பிடத்தக்கது.
மேலும் வால்மார்ட் நிர்வாகம் பிளிப்கார்ட் நிறுவனத்தை இந்திய பங்குச் சந்தைகளில் பட்டியலிட திட்டமிட்டுள்ளது. இந்த நிதியாண்டின் ஜூன் காலாண்டில் பிளிப்கார்ட்டின் GMV வலுவாக இருப்பதாகவும், இ-காமர்ஸ் 26% உயர்ந்துள்ளதாகவும் ஆகஸ்ட் மாதம் வால்மார்ட் கூறியிருந்தது.
இந்தியாவில் உள்ள எங்கள் வணிகங்களான பிளிப்கார்ட் மற்றும் போன்பே ஆகிய இரண்டும் வலுவான காலாண்டு நிதி நிலையை கொண்டிருந்தன என்று வால்மார்ட் இன்டர்நேஷனல் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஜூடித் மெக்கென்னா கூறினார்.
மஹிந்திரா லாஜிஸ்டிக்ஸ் லிமிடெட் வெள்ளிக்கிழமையன்று, கனரக வர்த்தக வாகனங்களின் எண்ணிக்கையை உயர்த்துவதற்காக பிளிப்கார்ட்டுடன் இணைந்துள்ளது, ரூட் மேனேஜ்மென்ட் மற்றும் நெட்வொர்க் செயல்பாடுகளில் உதவி வழங்குவதாகவும் தெரிவித்துள்ளது.
இக்கூட்டணி கீழ், மஹிந்திரா லாஜிஸ்டிக்ஸ், நாடு முழுவதும் பல தேசிய வழித்தடங்களில் இயங்கும் டெய்ம்லர் இந்தியா கமர்ஷியல் வாகனங்களுடன் இணைந்து பிளிப்கார்ட்டுக்காக 32 அடி ஒற்றை அச்சு ஹெவி கமர்ஷியல் வாகனங்களை இயக்கும்.


Click it and Unblock the Notifications