இந்தியாவில் இயங்கும் 100க்கு 98 ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் வெளிநாட்டு முதலீடுகளாலும், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கட்டுப்பாட்டில் இந்தியர்களால் நிர்வாகம் செய்யப்படுகிறது. இதற்குப் பிளிப்கார்ட் போன்ற பெரிய நிறுவனங்களும் விதிவிலக்கல்ல வால்மார்ட் தற்போது பிளிப்கார்ட் இணை நிறுவனர் மற்றும் முக்கிய முதலீட்டாளர்களை வெளியேற்றி பெரிய ஆதிக்கத்தைப் பெற்றுள்ளது.
2007 ஆம் ஆண்டில் பெங்களூரில் முன்னாள் ஐஐடி டெல்லி மாணவர்கள் மற்றும் முன்னாள் அமேசான் ஊழியர்களான சச்சின் பன்சால், பின்னி பன்சால் உருவாக்கிய பிளிப்கார்ட் நிறுவனத்தில் 2018 ஆம் ஆண்டில் சுமார் 16 பில்லியன் டாலர் முதலீடு செய்து சுமார் 77 சதவீத பங்குகளைக் கைப்பற்றியது. இதன் மூலம் இந்தியாவில் மறைமுகமாக அமெரிக்காவின் பிளிப்கார்ட் இறங்கியது மட்டும் அல்லாமல் அமேசான் உடன் போட்டிப்போடத் துவங்கியது.

இந்த நிலையில் தற்போது பின்னி பன்சால், பிளிப்கார்ட் நிறுவனத்தின் ஆரம்பக்கால முதலீட்டாளர்களான Accel பார்ட்னர்ஸ், டைகர் குளோபல் ஆகிய மூன்று பிரிவினரிடம் இருந்த பங்குகளை மொத்தமாக அமெரிக்காவின் வால்மார்ட்-க்கு விற்பனை செய்துவிட்டு வெளியேறியுள்ளனர். இந்தப் பங்குகள் 38 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் வாங்கப்பட்ட நிலையில் வால்மார்ட்-ன் பங்கு இருப்பு 80.5 சதவீதமாக உயர்ந்துள்ளது.
சச்சின் பன்சால் 2018 ஆம் ஆண்டிலேயே தன்னிடம் இருந்த 5 சதவீத பங்குகளை வால்மார்ட்-க்கு 1 முதல் 1.5 பில்லியன் டாலர் தொகைக்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் மொத்தமாக வெளியேறினார். இந்த நிலையில் தற்போது பின்னி பன்சால்-ம் தன்னிடம் இருந்த சிறிய அளவிலான பங்குகளை மொத்தமாக விற்பனை செய்து வெளியேறினர்.
பிளிப்கார்ட் நிறுவனத்தில் தற்போது அமெரிக்காவின் வால்மார்ட் 80.5 சதவீத பங்குகளை வைத்திருக்கும் வேளையில், எஞ்சியுள்ள பங்குகளை Qatar Investment Authority, Vision Fund, Tencent, CPP Investments, Microsoft மற்றும் GIC போன்ற முக்கியமான முதலீட்டாளர்கள் வைத்திருக்கும் வேளையில் Accel பார்ட்னர்ஸ், டைகர் குளோபல் போன்று பிற முதலீட்டாளர்களும் வெளியேற முடிவு செய்து வருகின்றனர்.
தற்போது வால்மார்ட் நிர்வாகம் பிளிப்கார்ட் மற்றும் போன்பே ஆகிய நிறுவனங்களை ஐபிஓ வெளியிடத் திட்டமிட்டு வரும் வேளையில் பெரிய முதலீட்டாளர்கள் தங்களுடைய இருப்பை விற்பனை செய்ய யோசித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications