அமெரிக்காவின் பிரபலமான சில்லறை வர்த்தக நிறுவனமான வால்மார்ட், இந்தியாவிலும் வர்த்தகம் செய்து வருகிறது.
28 மொத்த விலை ஸ்டோர்களை நடத்தி வரும் வால்மார்ட், கடந்த மார்ச் 31, 2020வுடன் முடிவடைந்த நிதியாண்டில் 299.20 கோடி ரூபாய் நஷ்டம் கண்டுள்ளது.

இதற்கு முந்தைய நிதியாண்டுடன் ஒப்பிடும்போது சில்லறை வர்த்தகர்களின் இழப்புகள் அதிகரித்துள்ளதாகவும், இதனால் நஷ்டம் அதிகரித்துள்ளதாகவும் வால்மார்ட் தெரிவித்துள்ளது. வால்மார்டின் மொத்த விற்பனை வணிகத்தோடு, சமீபத்தில் ஆன்லைன் இ-காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட் நிறுவனத்தினையும் கையக்கப்படுத்தியது.
இது கடந்த 2019ம் நிதியாண்டிலேயே வால்மார்ட் இந்தியா 171.68 கோடி ரூபாய் நஷ்டம் கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதே கடந்த 2020ம் நிதியாண்டில் முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது 20% அதிகரித்து 4,926 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. ஆனால் அதே நேரம் இந்த நிறுவனத்தின் செலவினமும் 22% அதிகரித்து 5,225 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நடப்பு ஆண்டின் ஜூலை மாதத்தில் தான் பிளிப்கார்டினை கையக்கப்படுத்தியது. எனினும் கடந்த 2018ல் வால்மார்ட் நிறுவனம், பிளிப்கார்டில் 16 பில்லியன் டாலர்களை முதலீடு செய்தது. இந்த நிலையில் இந்த ஆண்டு தொடக்கத்தில் விரிவுசெய்யப்பட்ட இந்த நிறுவனத்தின் வணிகப் பிரிவுகள், உணவு மற்றும் மளிகை பிரிவில் விநியோக சங்கிலியினை உறுதிபடுத்தும் விதமாக உள்ளது.
இதற்கிடையில் தனது பிக் பில்லியன் டே சலுகையினை பிளிப்கார்ட் நிறுவனம், வருகிற அக்டோபர் 16ம் தேதியன்று தொடங்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அதிரடியான பண்டிகை கால சிறப்பு தள்ளுபடி விற்பனையானது, அக்டோபர் 21 வரை தொடரும் என்றும் தெரிவித்துள்ளது.

ஒரு புறம் இந்த அதிரடியான சலுகையினால் மக்கள் நல்ல பலனை அடைவார்கள் என்றாலும், மறுபுறம் இதனால் இந்தியாவின் விநியோக சங்கிலி பலப்படும் என்பதும் ஒரு நல்ல விஷயம். அதோடு இந்த காலகட்டத்தில் வேலை வாய்ப்புகளை பெருக்கவும் இது வழிவகுக்குகிறது. பிளிப்கார்ட் நிறுவனத்தின் இந்த பண்டிகைகால விற்பனைக்கு முன்னதாக அந்த நிறுவனம் அதன் விநியோக சங்கிலியையும் விரிவுபடுத்தியுள்ளது.
இது குறித்து பிளிப்கார்டு வெளியிட்டுள்ள அறிக்கையில், குறிப்பாக சிறிய நகரங்களில் எங்கள் விநியோக சங்கியிலின் விரிவாக்கத்தினை இந்த தொற்று நோய் துரிதப்படுத்தியுள்ளது. இது நாடு முழுவதும் அடுத்த சில ஆண்டுகளில் இ-காமர்ஸ் நிறுவனங்களில் துரிதப்படுத்த உதவும். இது கைவினைஞர்கள், விற்பனையாளர்கள், எம்எஸ்எம்இ-க்கள், நாடு முழுவதும் விரிவாக்கம் செய்ய உதவும் என்றும் கூறியிருந்தது.
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்



Click it and Unblock the Notifications