வால்மார்ட்டின் அதிரடி நடவடிக்கை.. அதிர்ந்து போன இந்திய ஊழியர்கள்.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ..!

உலகளவில் தனது ஆதிக்கத்தை நிலை நாட்டியுள்ள வால்மார்ட் நிறுவனம் இந்தியாவிலும் தனது ஆதிக்கத்தை தொடர்ந்து செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச அளவில் நிலவி வரும் மந்த நிலையால் பெருத்த அடி வாங்கியுள்ள நிறுவனங்கள் பல, தங்களது ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகின்றன.

ஆனால் உலகம் முழுவதும் தனது ஆதிக்கத்தினை செலுத்தி வரும் வால்மார்ட் நிறுவனம் கூட, இந்தியாவில் உள்ள தனது கிளையில் உள்ள மூத்த அதிகாரிகள் மட்டத்தில் பணி நீக்கம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது. இது அந்த அதிகாரிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மூத்த அதிகாரிகள் பணி நீக்கம்

மூத்த அதிகாரிகள் பணி நீக்கம்

வால்மார்ட் இன்க் நிறுவனம் இந்தியாவில் உள்ள அதன் உயர் அதிகாரிகளை பணி நீக்கம் செய்துள்ளதாகவும், அதிலும் மூன்றில் ஒரு பங்கு ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. இது உள்ளூர் மீடியா ஒன்றில் வெளியாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்தியாவின் சேவையை நிறுத்த திட்டம்

இந்தியாவின் சேவையை நிறுத்த திட்டம்

வால்மார்ட் நிறுவனம் உலக முழுவதிலும் தனது ஆதிக்கத்தினை செலுத்தி வந்தாலும், இந்தியாவில் அதன் புதிய விரிவாக்கத்தை நிறுத்த திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால் மேலும் இந்தியாவில் தொடர்ந்து பணி நீக்கம் இருக்கலாம் என்றும் எக்னாமிக் டைம்ஸில் வெளியான செய்தியில் கூறப்பட்டுள்ளது.

ஏற்கனவே ஆள்குறைப்பு நடவடிக்கை

ஏற்கனவே ஆள்குறைப்பு நடவடிக்கை

வால்மார்ட் நிறுவனம் ஏற்கனவே இந்திய நிர்வாகிகள் உள்பட, துணைத் தலைவர்கள், வேளாண் வணிகம் மற்றும் வேகமாக நகரும் நுகர்வோர் பொருட்களில் சேர்த்துக் கொண்டதாகவும், மேலும் புதிய அங்காடிகள் வைப்பதற்காக கடைகளை கண்டுபிடிக்க பயன்படுத்தப்படும் ரியல் எஸ்டேட் குழுக்களும் கலைக்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கைகள் கூறுகின்றன.

இணைக்கலாம்

இணைக்கலாம்

அதே போல ஆர்கான்சாஸை தளமாகக் கொண்ட பெண்டன்வில்லே நிறுவனம், நாட்டில் உள்ள அதன் கிளைகளில் செயல்பாடுகளைக் காணவில்லை. ஆக 2018ம் ஆண்டில் 16 பில்லியன் டாலருக்கு வாங்கிய ஈகாமர்ஸ் தளமான பிளிப்கார்டுடன் இணைக்க வாய்ப்புள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

போராட்ட காலம்

போராட்ட காலம்

ஏற்கனவே ஆட்டோமொபைல் துறையில் நிலவி வரும் போராட்ட நிலையில், அடுத்ததாக தற்போது சில்லறை விற்பனை துறையிலும் மந்தம் நிலவி வருகிறது. அதிலும் இந்திய அரசானது உள்ளூர் வியாபாரிகளை காப்பாற்றும் பொருட்டு, உலகளாவிய நுகர்வோர் பிராண்டுகளுக்கு பல விதிமுறைகளை விதித்துள்ளது. இது அந்த நிறுவனங்களும் பெரும் அடியாக இருக்கும் என்றும் கருதப்படுகிறது.

இந்திய கிரானாக்களுக்கு பாதுகாப்பு

இந்திய கிரானாக்களுக்கு பாதுகாப்பு

இந்தியாவில் உள்ள 12 மில்லியன் உள்ளூர் அம்மா மற்றும் பாப் கடைகளை வெளிநாட்டு போட்டியாளர்களிடம் இருந்து பாதுகாக்க வடிவமைக்கப்பட்ட கடுமையான விதிகளால் அமேசான், வால்மார்ட் நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனை தொடர்ந்து கட்டுப்படுத்தும் விதமாகவே தொடர்ந்து இந்தியாவில் அழுத்தங்கள் இருந்து வருகின்றன. ஆக வால்மார்ட் இந்த முடிவினை எடுத்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

வால்மார்ட் திட்டம்

வால்மார்ட் திட்டம்

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வால்மார்ட் நிறுவனம் தனது மொத்த வியாபாரத்தை மேலும் விரிவுபடுத்த விரும்புவதாகக் கூறியது. இது தவிர அடுத்து வரும் நான்கு ஆண்டுகளில் மொத்த விற்பனை நிலையங்கள் இரட்டிப்பாகும். அதற்கான திட்டங்களும் தற்போது உள்ளன என்றும் அறிக்கைகளில் கூறியுள்ளன.

ஆதாரமற்றவை

ஆதாரமற்றவை

எனினும் இது குறித்தான செய்திக்கு வால்மார்ட் நிறுவனம் இது ஆதாரமற்றது. மேலும் தவறான தகவல் எனவும் சப்பை கட்டு கட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆக மொத்தம் எது உண்மை எது பொய் என்று தெரியவில்லை. ஏனெனில் இந்த நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் மத்தியில் இப்படி ஒரு கருத்து நிலவி வரும் நிலையில், நிறுவனம் இப்படி கூறியிருப்பது நம்பும் படியாக இல்லை. எது எப்படியாயினும் உண்மை வெளிவந்து தானே ஆக வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+