Walmart: பிரபல சில்லறை வர்த்தக நிறுவனமும், இ-காமர்ஸ் நிறுவனமுமான வால்மார்ட் 2000-க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சர்வதேச பொருளாதாரமானது என்னவாகுமோ என்ற அச்சத்தின் மத்தியில், தொடர்ந்து பல்வேறு நிறுவனங்களும் பணி நீக்க திட்டத்தினை எடுத்து வருகின்றன.
இது ஊழியர்கள் மத்தியில் பெரும் பதற்றத்தினை மீண்டும் தூண்டியுள்ளது எனலாம்.
பல்வேறு பகுதிகளில் பணி நீக்கம்
வால்மார்ட் நிறுவனம் தனது செயல்பாட்டினை சீரமைக்க திட்டமிட்டு வரும் நிலையில், இந்த பணி நீக்க நடவடிக்கையினை எடுத்துள்ளதாக தெரிகிறது. வால்மார்ட்டின் இந்த பணி நீக்க நடவடிக்கையில் அமெரிக்காவின் பிரபலமான பல முக்கிய நகரங்களில் இருப்பதாகவும் தெரிகிறது. குறிப்பாக டெக்சாஸின் போர்ட் வொர்த்தில் 1000 பேருக்கு மேலாகவும், பெனிசில்வேனியாவில் 600 பேரும், நியூ ஜெர்சியில் 200 பேரும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
கலிபோர்னியாவில் பணி நீக்கம்
இது தவிர கலிபோர்னியாவில் உள்ள அதன் சில்லறை கடைகளிலும் பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த மாதமே வால்மார்ட் பணி நீக்கம் செய்யவுள்ளதாக திட்டமிட்டுள்ளதாக அறிவித்திருந்தது. மேலும் பாதிக்கப்படும் ஊழியர்களுக்கு புதிய வேலை தேடிக் கொள்ள நிறுவனம் உதவிகரமாக இருக்கும் என்றும் கூறியது.
விரிவாக்கமும் உண்டு
வால்மார்ட் நிறுவனம் ஒரு புறம் செலவு குறைப்பின் ஒரு பகுதியாக பணி நீக்கம் செய்து வந்தாலும், மறுபுறம் தனது இருப்பினை புதிய புதிய பகுதிகளிலும் விரிவாக்கம் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. எனினும் இந்த பணி நீக்க நடவடிக்கையில் எத்தனை பேர் பாதிக்கப்பட போகின்றனர். எவ்வளவு பேர் பாதிக்கப்படலாம் என தெரியவில்லை.
கவலையளிக்கும் ஒன்று
அமெரிக்காவின் மிகப்பெரிய டெக் ஜாம்பவான்கள் எனப்படும் கூகுள்,மைக்ரோசாப்ட், அமேசான், பேஸ்புக் உள்ளிட்ட பற்பல நிறுவனங்களும் பணி நீக்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. அவற்றுடன் ஒப்பிடும்போது வால்மார்ட்டில் இது குறைவு தான் என்றாலும், இது டெக் துறையை தாண்டி தற்போது பெரும் தேவை இருக்கும் சில்லறை துறையில் தாக்கம் ஏற்பட்டிருப்பது கவலையளிக்கும் ஒன்றாகவும் பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications