உலகின் மிகப்பெரிய சில்லறை வர்த்தக நிறுவனமாக வால்மார்ட் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் அண்மையில் அமெரிக்கா மற்றும் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பணிபுரியக்கூடிய தங்களின் ஊழியர்களை பணி நீக்கம் செய்தது.
இந்த சூழலில் மணி கண்ட்ரோல் தளத்திற்கு பேட்டி அளித்திருக்கும் வால்மார்ட் நிறுவனத்தின் மூத்த அதிகாரிகளுள் ஒருவர் கூடிய விரைவில் இந்தியாவிலும் அமெரிக்காவிலும் வால்மார்ட் நிறுவனத்தில் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் அண்மையில் பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் இந்த வேலை வாய்ப்புகளுக்கு விண்ணப்பம் செய்வதற்கான வாய்ப்பு வழங்கப்படும் என்றும் தெரிவித்திருக்கிறார்.

தற்போது வால்மார்ட் நிறுவனத்தில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வந்திருக்கிறோம் எங்களுடைய குழுக்களை நாங்கள் மறு கட்டமைப்பு செய்து வருகிறோம் என கூறி இருக்கும் அவர் அமெரிக்கா, இந்தியா என பல்வேறு நாடுகளிலும் செயல்படக்கூடிய எங்களின் குழுக்களுக்கு மறு வடிவம் தந்து வருகிறோம் இதனால் நூற்றுக்கணக்கான புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என கூறியுள்ளார். அண்மையில் பணிநீக்கம் செய்யப்பட்ட வால்மார்ட் நிறுவன ஊழியர்கள் இந்த வேலைகளுக்கு விண்ணப்பம் செய்வதற்கான வாய்ப்பு வழங்கப்படும் என தெரிவித்திருக்கிறார் .
உலகம் முழுவதும் சுமார் 16 லட்சம் பேர் வால்மார்ட் நிறுவனத்தில் வேலை செய்கின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் வால்மார்ட் நிறுவன கடைகளில் வேலை செய்பவர்கள் குறிப்பிட்ட சதவீதத்தினர் வால்மார்ட் நிறுவனத்தின் ஜிசிசி மற்றும் கார்ப்பரேட் அலுவலகங்களில் வேலை செய்பவர்களாக இருக்கின்றனர். இந்தியாவில் வால்மார்ட் நிறுவனத்தின் ஜிசிசி மையங்கள் பெங்களூரு மற்றும் சென்னையில் உள்ளன.
அண்மையில் வால்மார்ட் நிறுவனம் 1500 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவிப்பு வெளியிட்டது .சிக்கன நடவடிக்கையாகவும் நிறுவன செயல்பாடுகளை சீரமைக்கவும் இந்த பணி நீக்க நடவடிக்கை மேற்கொள்வதாக வால்மார்ட் நிறுவனம் தெரிவித்தது. இந்த பணி நீக்க நடவடிக்கையில் அமெரிக்கா மட்டுமில்லாமல் இந்தியாவில் பெங்களூரு மற்றும் சென்னை ஆகிய இடங்களில் அமைந்துள்ள வால்மார்ட்டின் ஜிசிசி மையங்களில் வேலை செய்யும் ஊழியர்களும் பாதிக்கப்பட்டனர்.
உலகம் முழுவதும் கடந்த 5 மாத காலத்தில் மட்டும் 130 நிறுவனங்கள் சுமார் 61 ஆயிரம் ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கி இருக்கின்றன . கூகுள், அமேசான், மைக்ரோசாப்ட் போன்ற பெரிய டெக் நிறுவனங்கள் அதிக எண்ணிக்கையிலான ஊழியர்களை பணி நீக்கம் செய்திருக்கின்றன. அந்த வரிசையில் தான் வால்மார்ட் நிறுவனத்தின் பணி நீக்க அறிவிப்பும் வெளிவந்தது.
வால்மார்ட் நிறுவனத்தை பொறுத்தவரை தங்களுடைய கடைகளின் செயல்பாடுகளை மேம்ப்படுத்தவும் சிறந்த வாடிக்கையாளர் சேவையை வழங்கவும் பல இடங்களில் ஏஐ தொழில்நுட்பத்தை ஒருங்கிணைத்து இருக்கிறது. கிட்டத்தட்ட 10500-க்கும் அதிகமான வால்மார்ட் கடைகளில் எவ்வளவு பொருட்கள் இருக்கிறது, எவ்வளவு பொருட்கள் தேவை, விநியோக சங்கிலி, எந்த பொருட்களுக்கான தேவை அதிகமாக இருக்கிறது என்பன உள்ளிட்டவற்றுக்கெல்லாம் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதாக தெரிவித்துள்ளது.
More From GoodReturns

ஈரான் போரை முடிவுக்கு கொண்டு வருவாரா பிரதமர் மோடி? ரம்ஜான் நாளில் தொடங்கிய முக்கிய பேச்சுவார்த்தை..!!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

சிலிண்டர் பிரச்சனைக்கு தீர்வு: அமெரிக்காவிலிருந்து இந்தியா வந்தடைந்தது மிகப்பெரிய எல்பிஜி கப்பல்!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!



Click it and Unblock the Notifications