அடேய் மிக்கி மவுஸ் நீயுமாடா.. பாவம்டா ஊழியர்கள்..!

அமெரிக்காவின் பணவீக்கம் கணிசமாகக் குறைந்தாலும் வட்டி விகித உயர்வின் தாக்கமும், ரெசிஷன் அச்சமும் சற்றும் குறையாமல் உள்ளது.

இந்த நிலையில் அமெரிக்காவின் முன்னணி கார்ப்பரேட் நிறுவனங்கள் அனைத்தும் செலவுகளைக் குறைப்பதற்காக ஊழியர்களை அதிரடியாகப் பணிநீக்கம் செய்து வருகிறது.

அமெரிக்கா-வை தலைமையிடமாகக் கொண்ட உலகம் முழுவதிலும் வர்த்தகம் செய்யும் முன்னணி நிறுவனங்கள் அனைத்தும் ஆயிர கணக்கில் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது.

இந்த நிலையில் வால்ட் டிஸ்னி நிறுவனம் அதிகப்படியான ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.

 வால்ட் டிஸ்னி

வால்ட் டிஸ்னி

உலகின் முன்னணி ப்ரொடெக்ஷன் மற்றும் ஸ்ட்ரீமிங் சேவை நிறுவனமான வால்ட் டிஸ்னி தனது நிதி நிலை மற்றும் வர்த்தக வளர்ச்சியை ஆய்வு செய்த பின்னர்ச் செலவுகளைக் குறைக்கவும், இருப்பு நிலை அறிக்கையை மேம்படுத்தவும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

1,90,000 ஊழியர்கள்

1,90,000 ஊழியர்கள்

டிஸ்னி குழுமத்தில் சுமார் 1,90,000 பேர் பணியாற்றி வரும் நிலையில், டிஸ்னி நிறுவனத்தின் சிஇஓ பாப் சபெக் மோசமான காலாண்டு முடிவுகளுக்குப் பின்பு புதிதாக ஊழியர்களை பணியில் சேர்ப்பதை நிறுத்தியும், ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.

 வால்ட் டிஸ்னி சிஇஓ பாப் சபெக்

வால்ட் டிஸ்னி சிஇஓ பாப் சபெக்

சமீபத்தில் வால்ட் டிஸ்னி சிஇஓ பாப் சபெக் ஊழியர்களுக்கு அனுப்பிய மெமோவில் புதிய ஊழியர்கள் சேர்க்கையை நிறுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. ஆனால் முக்கியமான வர்த்தக விரிவாக்க பணியில் புதிய ஊழியர்களின் சேர்க்கை தொடரும் எனத் தெரிவித்துள்ளார்.

செலவுகள் குறைப்பு

செலவுகள் குறைப்பு

மேலும் நிறுவனம் வாய்ப்பு கிடைக்கும் அனைத்து பிரிவுகளிலும் பணத்தைச் சேமிக்கும் பணிகளைத் தொடர உள்ளோம், இதில் சில ஊழியர்களை வெளியேற்றப்படலாம் என்றும் தெரிவித்துள்ளார். வால்ட் டிஸ்னி நிறுவனத்தின் மோசமான காலாண்டு முடிவுகள் எதிரொலியாகப் புதன்கிழமை வர்த்தகத்தில் 52 வார சரிவை இந்நிறுவனம் பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

டிவிட்டர், மெட்டா, அமேசான்

டிவிட்டர், மெட்டா, அமேசான்

சில நாட்களுக்கு முன்பு டிவிட்டர் அறிவித்த மாபெரும் பணிநீக்கத்தைப் போலவே பேஸ்புக்-ன் தாய் நிறுவனமான மெட்டா 11000 ஊழியர்கள் செலவுகளைக் குறைப்பதற்காகப் பணிநீக்கம் செய்யப்பட்டனர். இந்தப் பணிநீக்கத்தில் அதிகமான ஊழியர்கள் அமெரிக்காவில் இருந்தாலும் உலகம் முழுவதிலும் இருக்கும் மெட்டா அலுவலகத்தில் இந்தப் பணிநீக்கம் நடந்துள்ளது.

 அமேசான்

அமேசான்

பொருளாதார மந்தநிலையைச் சமாளிக்க அமேசான் நிறுவனம் லாபம் அளிக்காத துறையின் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது. இதன் படி கடந்த வாரம் புதிய ஊழியர்களைச் சேர்க்கும் பணியை நிறுத்தியது அமேசான்.

ரோபோட்டிக்ஸ் AI பிரிவு

ரோபோட்டிக்ஸ் AI பிரிவு

அமேசான் ஊழியர் ஒருவர் லின்கிடுஇன் பதிவின் படி ஜேமி ஜாங் என்பவர் அமேசான் ரோபோட்டிக்ஸ் AI பிரிவில் சாப்ட்வேர் இன்ஜினியராகப் 1.5 வருடமாக அமேசான் ரோபோட்டிக்ஸ் AI பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் அவரும் அவருடைய மொத்த ரோபோடிக்ஸ் அணியும் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

லின்கிடுன் தரவுகள்

லின்கிடுன் தரவுகள்

லின்கிடுன் தளத்தின் தரவுகள் படி அமேசான் ரோபோட்டிக்ஸ் AI நிறுவனத்தில் 3,766 ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள், இதில் எத்தனை பேர் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளார்கள் என்பது தற்போது தெரியவில்லை.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+