இந்தியாவில் ஸ்ட்ரீமிங் வர்த்தகம் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் வேளையில், ஐபிஎல் ஒளிபரப்பு உரிமத்தை டிஸ்னி இழந்தது முதல் பல பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறது. டிஸ்னி ஹாட்ஸ்டார் வாடிக்கையாளர்களை இழந்தது மட்டும் அல்லாமல் வருவாயும் குறைந்துள்ளது. இதனால் அமெரிக்காவில் இருக்கும் அதன் தாய் நிறுவனமான வாட்ல் டிஸ்னி-க்கு இந்திய வர்த்தகம் சுமையாக மாறியுள்ளது.
வால்ட் டிஸ்னி ஏற்கனவே ஸ்ட்ரீமிங் வர்த்தகத்தில் ஆதிக்கம் செலுத்த முடியாமல் மாடிக்கொண்டு இருக்கும் வேளையிலும், செலவுகளை குறைக்க பல முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக இந்திய வர்த்தகத்தை விற்பனை செய்ய வால்ட் டிஸ்னி திட்டமிட்டு இதற்கான பேச்சுவார்த்தையை துவங்கியுள்ளது.

வால்ட் டிஸ்னி இந்தியாவில் இருக்கும் அதன் ஸ்ட்ரீமிங் மற்றும் டிவி வர்த்தகத்தை மொத்தமாக விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்ட நிலையில், சில நாட்களுக்கு முன்பு முகேஷ் அம்பானியிடம் பேசியதாக தகவல் வெளியானது. இந்திய ஸ்ட்ரீமிங் மற்றும் டிவி வர்த்தகத்தில் வால்ட் டிஸ்னி நேருக்கு நேர் மோதும் போட்டியாளர்கள் என்பதால் வாலட் டிஸ்னி பேசியதை யாரும் நம்பவில்லை.
இந்த நிலையில் வால்ட் டிஸ்னி தற்போது சன் நெட்வொர்க்கின் தலைவர் கலாநிதி மாறன் மற்றும் மீடியா துறையில் நுழைய வேண்டும் என தீவிரமாக இருக்கும் கௌதம் அதானியிடம் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. தென்னிந்தியாவில் பெரிய அளவில் ஆதிக்கம் செய்யும் சன் நெட்வொர்க்கின் தலைவர் கலாநிதி மாறன் டிஸ்னி-யின் வர்த்தகம் மூலம் இந்திய அளவில் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய முடியும்.
அமெரிக்காவின் வால்ட் டிஸ்னி இந்தியாவில் இருக்கும் அதன் ஸ்ட்ரீமிங் மற்றும் டிவி வர்த்தகத்தை மொத்தமாகவோ அல்லது பகுதி பகுதியாக அதாவது ஸ்போர்ட்ஸ் ஒளிபரப்பு உரிமம், பிராந்திய டிஸ்னி + ஹாட்ஸ்டார் சேவைகளை விற்கவும் தயாராகியுள்ளது. மேலும் வால்ட் டிஸ்னி நிர்வாகம் மீடியா துறையில் முதலீடு செய்யும் தனியார் பங்கு முதலீட்டாளர்கள் உடனும் பேசி வருகின்றனர்.
ஜூலை மாதம் வால்ட் டிஸ்னி ஐபிஎல் ஒளிபரப்பு ஒப்பந்தத்தை வயாகாம்18 மீடியாவிடம் இழந்தது, இதில் இருந்து இந்திய வர்த்தகத்தில் வால்ட் டிஸ்னி பெரும் சரிவை எதிர்கொள்ள நேரிட்டது. வயாகாம் என்பது ரிலையன்ஸ், பாராமவுண்ட் குளோபல், உதய் ஷங்கர் தலைமையிலான போதி ட்ரீ சிஸ்டம்ஸ் கூட்டணியில் உருவானது.
இதேவேளையில், வால்ட் டிஸ்னி இந்திய வர்த்தகத்தை கௌதம் அதானி வாங்கினால் சமீபத்தில் NDTV கைப்பற்றியதன் மூலம் மீடியோ துறையில் பெரிய அளவில் கால்தடம் பதித்த நிலையில் இது ஜாக்பாட் ஆக அமையும் என்றால் மிகையில்லை. ஆனால் கௌதம் அதானி எதிர்கொண்டு வரும் பல்வேறு பிரச்சனைக்கு மத்தியில் இந்த திட்டத்தை கையில் எடுப்பாரா என்பதில் சந்தேகம் உள்ளது.
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

GPay யூஸ் பண்றீங்களா? PocketMoney ஐகான் கிளிக் பண்ணா மொத்த பணமும் போய்டுமா?வைரலாகும் வாட்ஸ்அப் ஆடியோ



Click it and Unblock the Notifications