செலவை 20% குறைக்கணும்.. மேலாளர்களுக்கு ஆர்டர் போட்ட வால்ட் டிஸ்னி.. 1000 ஊழியர்கள் விரைவில் பணிநீக்கம்

உலகம் முழுவதும் அனைத்து துறையிலும் ஏஐ, செலவின குறைப்பு, வர்த்தக போட்டி, மக்களின் நுகர்வில் வந்துள்ள மாற்றம் என பல காரணங்களுக்காக கார்ப்ரேட் நிறுவனங்கள் தங்களுடைய ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகிறது.

இந்த வரிசையில் பொழுதுபோக்கு துறையில் முன்னணி நிறுவனமாக இருக்கும் வால்ட் டிஸ்னி ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்யத் திட்டமிட்டு உள்ளது. இதோடு வால்ட் டிஸ்னி நிர்வாகம் சில மேனேஜர்களை தங்களுடைய வர்த்தக பிரிவில் வருடாந்திர செலவுகளை சுமார் 20 சதவீதம் வரையில் குறைக்க வேண்டும் என உத்தரவிட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

செலவை 20% குறைக்கணும்.. மேலாளர்களுக்கு ஆர்டர் போட்ட வால்ட் டிஸ்னி.. 1000 ஊழியர்கள் விரைவில் பணிநீக்கம்

இதனால் மேனேஜர்கள் கொடுக்கப்பட்ட இலக்கை அடைய ஊழியர்கள் பணிநீக்கத்தின் வாயிலாகவும், இயக்க செலவுகளைக் குறைப்பதன் வாயிலாகவும் இந்த இலக்கை அடைய முடிவு செய்துள்ளனர்.

வால்ட் டிஸ்னி நிர்வாகம் தற்போது 3 பிரிவுகளில் உலகளவில் வர்த்தகம் செய்து வருகிறது, தீம் பார்க், டிவி நெட்வொர்க், திரைப்பட ஸ்டூடியோ. தற்போதைய செலவின குறைப்பில் அனைத்து வர்த்தக பிரிவுகளும் இடம்பெறும் என்பதால் பாதிப்பும் அதிகமாகவே இருக்கும் என கணிக்கப்படுகிறது.

தற்போது சேமிக்கப்படும் நிதியில் பெரும் பகுதியைத் திரைப்படம் மற்றும் டிவி ப்ரோகிராமிங், தொழில்நுட்பம், தீம் பார்க் மற்றும் க்ரூஸ் கப்பல் வர்த்தகத்தில் முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார் வால்ட் டிஸ்னி வால்ட் டிஸ்னி நிறுவனத்தின் சிஇஓ Josh D'Amaro.

இதேவேளையில் வால்ட் டிஸ்னி தனது பங்கு முதலீட்டாளர்களுக்கு இந்த நிதியாண்டில் earnings per share-ல் இரண்டு இலக்க வளர்ச்சி விகிதத்தைக் காட்டுவதாக வாக்குறுதி கொடுத்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக வால்ட் டிஸ்னி பல வர்த்தகத்தை மறுசீரமைப்பு செய்தது, சில பிரிவுகளை மூடியது, சில வர்த்தகத்தை விற்பனை செய்தது வாயிலாகப் பல பில்லியன் டாலர் மதிப்பிலான தொகையைச் சேமித்தது.

இதேபோல் இந்த செலவின குறைப்பு மூலம் ஏற்கனவே பல்லாயிரம் ஊழியர்கள் வெளியேற்றப்பட்ட நிலையில் மீண்டும் பெரும் பணிநீக்க சுற்றுக்குத் தயாராகியுள்ளது வால்ட் டிஸ்னி. இந்த பல கட்ட பணிநீக்கத்திற்குப் பிறகு இந்நிறுவனத்தில் சுமார் 2,31,000 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். அக்டோபர் 1ஆம் தேதி இந்நிறுவனம் தனது லீகல் மற்றும் உலகளாவிய விவகாரங்கள் பிரிவில் பெரிய அளவிலான மறுசீரமைப்பு செய்ய திட்டமிட்டு உள்ளதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் தெரிவித்திருந்தது.

வால்ட் டிஸ்னி மட்டும் அல்லாமல் பொழுதுபோக்கு மற்றும் ஓடிடி சேவை பிரிவில் இருக்கும் நெட்பிளிக்ஸ், சோனி பிக்சர்ஸ், ஸ்கைடான்ஸ் கார்ப், பாரமவுண்ட் வார்னர் ப்ரோஸ் என அனைத்து நிறுவனங்களும் வருவாய் சரிவு, வாடிக்கையாளர் எண்ணிக்கையில் ஏற்பட்ட சரிவு ஆகியவற்றின் காரணமாக பணிநீக்கத்தில் ஈடுபட்டு உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+