இனி பேப்பர் ஆதார் கார்டு வேண்டாம்! வெறும் ரூ.75-க்கு பிளாஸ்டிக் ஆதார் கார்டு! உங்க வீட்டுக்கே வந்துடும்!

இந்தியாவின் மிக முக்கியமான அடையாள ஆவணமாக ஆதார் கார்டு இருக்கிறது. புது சிம் கார்டு வாங்குவதற்கு, வங்கி கணக்கு தொடங்குவதற்கு, அரசு திட்டங்களில் முதலீடு செய்வதற்கு என அனைத்திற்கும் இந்த ஒரு கார்டைத் தான் கேட்கின்றனர். ஆனால் இன்னமும் பலர் பேப்பரால் செய்யப்பட்ட வழக்கமான ஆதார் கார்டை மட்டுமே பயன்படுத்துகின்றனர். இதில் தண்ணீர் பட்டாலோ அல்லது மடித்து பைக்குள் வைத்தாலோ கிழிந்து போகும் வாய்ப்புள்ளது. இது போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வாக இந்திய தனித்துவ அடையாள ஆணையம் பிவிசி கார்டை வழங்குகிறது. இது டெபிட் கார்டு மற்றும் ஏடிஎம் கார்டைப் போலவே இருக்கும். கனகச்சிதமாக இருப்பதால் உங்களுடைய பர்ஸ் அல்லது ஹேண்ட் பேக்கில் வைத்துக் கொள்ளலாம்.

இதற்கு நீங்கள் ஆதார் பதிவு மையங்களுக்கெல்லாம் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் பிவிசி கார்டை ஆர்டர் செய்யலாம். கட்டணத்தை செலுத்தி ஆர்டர் செய்தால் உங்கள் முகவரிக்கே நேரடியாக அனுப்பி விடுவார்கள்.

ஆதார் பிவிசி கார்டு என்றால் என்ன?: ஆதார் பிவிசி கார்டு என்பது ஒரு பிளாஸ்டிக் ஆதார் கார்டு அவ்வளவுதான். அதில் ஆதார் கார்டில் இருக்கும் உங்களுடைய விவரங்கள் அனைத்தும் பொறிக்கப்பட்டிருக்கும். முன்புறம் பெயர், டேட் ஆஃப் பர்த், புகைப்படம் போன்ற விவரங்களும் பின்புறம் அட்ரஸ் விவரங்களும் இருக்கும். காகிதத்தால் செய்யப்பட்ட ஆதாரை விட இது உறுதியாக இருப்பதால் எளிதில் சேதமடையாது. தண்ணீரில் விழுந்தாலும் எந்தப் பிரச்சனையும் இருக்காது. அன்றாட பயன்பாட்டிற்கு ஆதாரை பயன்படுத்தும் போது இது போன்ற கார்டை பயன்படுத்துவது நல்லது.

இனி பேப்பர் ஆதார் கார்டு வேண்டாம்! வெறும் ரூ.75-க்கு பிளாஸ்டிக் ஆதார் கார்டு! உங்க வீட்டுக்கே வந்துடும்!

அளவு சிறியதாக இருப்பதால் உங்கள் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு மற்றும் லைசன்ஸ் போன்றவற்றுடன் சேர்த்து வாலெட்டில் எடுத்துச் செல்லலாம். லேமினேஷன் செய்யப்பட்ட பேப்பர் ஆதார் கார்டை விட பிவிசி கார்டில் பல நன்மைகள் கிடைக்கிறது.

திடீரென வெளியில் செல்லும்போது மழை பெய்தால் நீங்கள் பேப்பர் ஆதாரை வைத்திருக்கும் போது அது நனைந்து விடும் வாய்ப்புள்ளது. ஆனால் இந்த பிவிசி கார்டு பிளாஸ்டிக்கால் ஆனது. இதனால் எந்த பாதிப்பும் ஏற்படாது. மேலும் நீடித்து உழைக்கக்கூடிய தன்மை கொண்டது. இதை வழங்குவதற்கு இந்திய தனித்துவ அடையாள ஆணையம் பேக்கேஜிங் மற்றும் விநியோக கட்டணம் உட்பட ஒரு கார்டுக்கு 75 ரூபாய் கட்டணம் வசூலிக்கிறது.

ஆன்லைனில் பிவிசி ஆதார் கார்டு பெற விண்ணப்பிப்பது எப்படி?: ஸ்மார்ட் போன், டேப்லெட், கம்ப்யூட்டர் போன்றவற்றைப் பயன்படுத்தி வீட்டில் இருந்தே சில நிமிடங்களில் பிவிசி கார்டு பெற விண்ணப்பிக்கலாம்.

ஸ்டெப் 1: முதலில் அதிகாரப்பூர்வ UIDAI இணையதளத்திற்கு செல்லுங்கள். பிறகு உங்களுடைய விருப்பமொழியை தேர்வு செய்யுங்கள்.

ஸ்டெப் 2: இணையதளத்தை பயன்படுத்தும் போது நீங்கள் தேர்ந்தெடுக்கும் மொழியிலேயே விண்ணப்பிக்கலாம். ஆங்கிலம், ஹிந்தி மற்றும் பிராந்திய மொழிகளில் எது வசதியோ அதை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

ஸ்டெப் 3: ஆதார் சர்வீசஸ் என்ற பகுதிக்கு சென்று பிவிசி ஆதார் கார்டைத் தேர்ந்தெடுங்கள். உங்கள் ஆதார் நம்பர் மற்றும் கேட்கப்படும் சில விவரங்களை வழங்கி கேப்ட்சா கோடை வழங்குங்கள்.

ஸ்டெப் 4: ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் நம்பருக்கு ஒரு ஓடிபி அனுப்பப்படும். அந்த OTP-ஐ வழங்குங்கள்.

ஸ்டெப் 5: UPI, கிரெடிட் கார்டு, நெட் பேங்கிங் போன்ற ஏதேனும் ஒரு டிஜிட்டல் கட்டண முறையை தேர்ந்தெடுத்து 75 ரூபாய் கட்டணம் செலுத்துங்கள்.

ஆதார் கார்டை ஆர்டர் செய்த சிறிது நேரத்திலேயே ப்ராசஸிங் தொடங்கிவிடும். இருந்தாலும் டெலிவரி செய்யப்படுவதற்கு 5 முதல் 7 நாட்கள் வரை எடுக்கும். கட்டணம் செலுத்திய பிறகு உங்களுக்கு ஒரு SRN நம்பர் வழங்கப்படும். அந்த நம்பரை பயன்படுத்தி பிவிசி கார்டு விண்ணப்பத்தின் ஸ்டேட்டஸ் என்ன என்பதை கண்காணிக்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+