மியூச்சுவல் ஃபண்ட் தெரியும்.. அது என்ன ஃப்ரீடம் ஃபண்ட்? பிடிக்காத வேலையில் இருப்பவர்கள் கட்டாயம் பாருங்க!

பலர் தாங்கள் செய்யும் வேலை பிடிக்கவில்லை என்றாலும் ஒரே வேலையில் தொடர்வதற்கு காரணம் மறு மாதம் வரக்கூடிய செலவை ஈடுகட்ட தான். இது போன்ற தருணங்களில் கண்டிப்பாக ஒவ்வொருவரும் ஃப்ரீடம் ஃபண்டை வைத்திருக்க வேண்டும். மியூச்சுவல் ஃபண்ட் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள்.. அது என்ன ஃப்ரீடம் ஃபண்ட்? இந்தப் பதிவில் ஃப்ரீடம் ஃபண்ட் என்றால் என்ன? இதை வைத்திருப்பதால் என்ன நன்மைகள் கிடைக்கும்? என்ற விவரங்களைப் பார்ப்போம்.

ஃப்ரீடம் ஃபண்ட் என்றால் என்ன?: ஃப்ரீடம் ஃபண்ட் என்று சொன்னவுடன் சிலர் ஏதோ வங்கியில் வழங்கும் சேமிப்பு திட்டம் அல்லது மியூச்சுவல் ஃபண்ட் திட்டமாக இருக்கும் என்று யோசிப்பீர்கள். ஆனால் இது அத்தகைய சேமிப்பு திட்டம் கிடையாது. உங்கள் வாழ்க்கையை மேம்படுத்த திட்டமிட்டு கொண்டிருந்தீர்களானால் நீங்கள் தனியாக ஒதுக்கி வைக்க வேண்டிய சேமிப்பு பணம் தான் இந்த ஃப்ரீடம் ஃபண்ட்.

மியூச்சுவல் ஃபண்ட் தெரியும்.. அது என்ன ஃப்ரீடம் ஃபண்ட்? பிடிக்காத வேலையில் இருப்பவர்கள் கட்டாயம் பாருங்க!

இன்னும் எளிமையாக சொல்ல வேண்டுமானால் உங்களுடைய எதிர்கால விருப்பத்திற்காக சேமித்து வைக்கும் தொகை. உதாரணமாக பிடிக்காத வேலையில் இருக்கிறீர்கள்.. மன அழுத்தத்தின் காரணமாக அந்த வேலையை ரிசைன் செய்கிறீர்கள் என்றால் மறு மாதம் உங்கள் செலவுகளை ஈடுகட்ட பணம் தேவை.

Also Read

அதற்காக முன்னரே திட்டமிட்டு சேமிக்கும் தொகை. அது மட்டுமல்ல புதிய திறன்களை கற்றுக் கொள்வதற்கு, வயதான பெற்றோரை பராமரிப்பதற்கு, புதிய தொழில் தொடங்குவதற்கு என எதற்கும் கடன் வாங்காமல் இந்த ஒரு சேமிப்பையே பயன்படுத்தலாம்.

எமர்ஜென்சி ஃபண்ட் Vs ஃப்ரீடம் ஃபண்ட்: இன்றைய சூழலில் மருத்துவச் செலவுகள் யாருக்கு எப்போது வருகிறது என்பதை கணிக்கவே முடியவில்லை. அப்படி திடீரென ஏற்படும் மருத்துவச் செலவுகளை கருத்தில் கொண்டு சேமிக்கும் பணம்தான் எமர்ஜென்சி ஃபண்ட்.

அதேபோல ஃப்ரீடம் ஃபண்ட் என்பது நீங்கள் ஒரு வேலையில் இருந்து இன்னொரு வேலைக்கு மாற விரும்பினாலோ அல்லது மேற்படிப்பு படித்துவிட்டு அதன் பிறகு வேலை செய்ய நினைத்தாலோ அதன் போது நீங்கள் கடன் வாங்காமல் பயன்படுத்துவதற்கு சேமித்து வைக்கக்கூடிய பணம். எமர்ஜென்சி ஃபண்டும், ஃப்ரீடம் பண்டும் ஒன்று என்று சொல்லிவிட முடியாது. அது வேறு இது வேறு. உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் முக்கியமான முடிவுகளுக்காக இந்த ஃப்ரீடம் ஃபண்டை பயன்படுத்தலாம்.

வேலையில் இருந்து விலகுதல்: பெரும்பாலானோர் மாத சம்பளம் முழுமையாக எல்லா செலவுகளுக்குமே சரியாக இருக்கும் போதும் ஒரே வேலையில் இருப்பார்கள். அதில் இருந்து விலக வேண்டும் என்று நினைத்தாலும் மனம் என்னவோ மறு மாத செலவையே நினைத்துக் கொண்டிருக்கும். இதை ஈடுகெட்ட ஃப்ரீடம் ஃபண்டை உருவாக்கலாம். இந்தத் தொகை நீங்கள் புதிதாக வேலை தேடும் காலத்தில், சம்பளம் இல்லாமல் இருந்தாலும் உங்களுடைய தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவும். இதனால் அவசர அவசரமாக வேலையை தேர்ந்தெடுக்காமல் சிறந்த வாய்ப்பை பயன்படுத்தி நல்ல நிறுவனத்தை தேர்வு செய்யலாம்.

திறன் மேம்பாடு: நாளுக்கு நாள் தொழில்நுட்ப வளர்ச்சி அதிகரித்து வருகிறது. அதற்கு ஏற்ப ஒவ்வொரு நபரும் தங்களுடைய ஸ்கில் செட்டை மேம்படுத்தியாக வேண்டும். அதற்கும் இந்த ஃப்ரீடம் ஃபண்டை பயன்படுத்தலாம். அந்த சமயத்தில் வேறு யாரிடமும் கடன் பெறாமல் எமெர்ஜென்சி ஃபண்ட் வைத்திருந்தால் அதில் கை வைக்காமல் புதிய பயிற்சி பெற அல்லது சர்டிபிகேட் கோர்ஸ் முடிக்க இந்த நிதியை வைத்துக் கொள்ளலாம்.

இவ்வளவு நாட்கள் அவசர மருத்துவச் செலவுக்கு எமர்ஜென்சி ஃபண்டை எடுத்து வைத்திருப்பீர்கள். இனிவரும் காலங்களில் எதிர்பாராத வேலை இழப்பு மற்றும் பிற காரணங்களால் ஏற்படும் பண பிரச்சனையை எதிர்கொள்ள ஒவ்வொரு மாதமும் சிறு தொகையை ஃப்ரீடம் ஃபண்டாக எடுத்து வையுங்கள். இது பிற்காலத்தில் உங்களுக்கு கை கொடுக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+