சென்னை: இந்தியாவில் நடுத்தர மக்களின் வாழ்க்கையைப் புரட்டிப்போடும் ஒரு விஷயம் என்னவென்றால், திடீரென ஏற்படக்கூடிய அவசரக்கால செலவு, மருத்துவச் செலவுகள் தான், இதைத் தொடர்ந்து திருமண செலவு, வாகனம் வாங்குவது அல்லது வீட்டினை சீர்படுத்துவது போன்ற தவிர்க்க முடியாத விஷயங்களுக்கு அதிகப்படியான நிதி தேவை ஏற்படும் சூழ்நிலையில் ஆபத்பாந்தவனான மக்களைக் காப்பாற்றுவது பர்சனல் லோன் எனப்படும் தனிநபர் கடன்கள் தான்.
இந்த தனிநபர் கடனை அனைத்து வங்கிகளும் வழங்கினாலும், வேகமாகவும், குறைந்த ஆவணங்கள் உடன் 40 லட்சம் வரையில் கடன் அளிக்கிறது பஜாஜ் பின்சர்வ். வங்கிகள் கடன் கொடுக்கும் போது நாட்டின் முன்னணி NBFC ஆக இருக்கும் பஜாஜ் பின்சர்வ் நிறுவனத்தில் கடன் வாங்குவதில் சில முக்கியமான நன்மை உள்ளது. இதில் முதலும் முக்கியமாகக் குறைந்த வட்டியில் கடன், அதிகப்படியான மக்களுக்கு நன்மை அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டு உள்ள Flexi Hybrid மாடல். இந்த புதிய கடன் மாடல் தனிநபர் கடனில் பெரும் புரட்சியைச் செய்துள்ளது என்றால் மிகையில்லை.
பஜாஜ் பைனான்ஸ் லிமிடெட் (Bajaj Finance Limited) நிறுவனம் 40 லட்சம் ரூபாய் வரை தனிநபர் கடன்களை வழங்குகிறது. இந்நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு இன்ஸ்டென்ட் கடன் முதல் பிளெக்சி கடன் வரையில் பல வகையில் சேவை அளிக்கிறது. இதில் முக்கியமாக பர்சனல் கடனுக்கு அனுமதி கிடைத்த 24 மணி நேரத்திலேயே பணம் வங்கி கணக்கில் கிரெடிட் ஆகிவிடும் என்பது கூடுதல் சிறப்பு.
Flexi Hybrid Loan: பஜாஜ் பைனான்ஸ் லிமிடெட் ஃப்ளெக்ஸி ஹைப்ரிட் கடன் என்ற ஒரு சிறப்பு அம்சத்தைக் கொண்டிருக்கிறது. இது தொடக்கக் கட்டத்தில் வெறும் வட்டியை மட்டுமே செலுத்தக்கூடிய interest-only EMI சிறப்பு அம்சத்தைக் கொண்டிருக்கிறது. எனவே இவற்றை எல்லாம் ஆய்வு செய்து எது நமக்குச் சரி பட்டு வருமென முடிவு செய்து கொண்டு லோன் வாங்கலாம்.
'ஃப்ளெக்ஸி ஹைப்ரிட் கடன்' எனப்படுகிறது. இந்த திட்டம் கடன் வாங்கியவர்களுக்கு அதிக நெகிழ்வுத்தன்மையையும், பல புது விதமான பலன்களையும் வழங்குகிறது.
எவ்வாறு செயல்படுகிறது: இந்த திட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வாடிக்கையாளரின் நிதி நிலையை ஆராய்ந்து கிரெடிட் லிமிட் நிர்ணயம் செய்யப்படும். இந்த நிர்ணயம் செய்யப்பட்ட அளவிலான தொகையைத் தேவைப்படும் போது வேண்டிய அளவிலான பணத்தை எடுத்து, இதைத் திரும்பச் செலுத்தும் வசதி உள்ளது. ஆரம்பக் கட்டத்தில் குறைவான EMI செலுத்தலாம். பின்னர், பயன்படுத்தப்பட்ட தொகைக்கு ஏற்ப EMI அதிகரிக்கும்.
நெகிழ்வுத்தன்மை: கடன் வாங்கியவர் குறிப்பிட்ட கடன் வரம்பிற்குள் பலமுறை பணத்தை எடுத்து திருப்பிச் செலுத்தலாம்.
வட்டி மட்டுமே EMI: கடன் காலத்தின் ஆரம்பக் கட்டத்தில் வட்டி மட்டுமே EMI-யாக செலுத்த வேண்டும். பயன்படுத்தப்பட்ட தொகைக்கு மட்டுமே EMI கணக்கிடப்படும்.
பகுதி கடனை திருப்பி செலுத்துதல்: வாங்கிய கடன் தொகையில் ஒரு பகுதியைச் செலுத்துவதற்கு எந்தவித கட்டணமும் இல்லை.
குறைந்த ஃப்ளெக்ஸி கட்டணம்: இந்த கடனை வாங்குவோருக்கு மிகக் குறைந்த அளவிலான ஃப்ளெக்ஸி கட்டணம் மட்டுமே பொருந்தும்.
இப்படி பஜாஜ் பின்சர்வ் ஃப்ளெக்ஸி டர்ம், ஃப்ளெக்ஸி ஹைப்ரிட், டர்ம் லோன் என 3 வகையிலான கடன்களை 96 மாதங்கள் வரையிலான கால வரையறையில் கடன்களை வழங்குகிறது. இந்த 3 விதமான கடன்களும் குறைந்த அளவிலான ஆவணங்களை மட்டுமே பெற்றுக்கொண்டு இன்ஸ்டென்ட் முறையில் 40 லட்சம் முறையில் கடன் வழங்கப்படுகிறது. இதன் மூலம் சமானிய மக்கள் தங்களுடைய தேவைக்கு ஏற்ப கடன்களை பெற்று திரும்ப செலுத்தலாம்.
இதேபோல் பஜாஜ் பின்சர்வ் நிறுவனம் அளிக்கும் ஃப்ளெக்ஸி டர்ம், ஃப்ளெக்ஸி ஹைப்ரிட், டர்ம் லோன் ஆகிய 3 திட்டத்திலும் கடன் வாங்கினால் எவ்வளவு ஈஎம்ஐ செலுத்த வேண்டும் என்பதை கணக்கிட இந்நிறுவனமான சிறப்பான கால்குலேட்டரை உருவாக்கியுள்ளது.
தனிநபர் கடன்கள் எந்த ஒரு அடமானமும் இன்றி வழங்கப்படுவதால் வங்கிகள் அதற்கு அதிக வட்டியை விதிக்கின்றன. ஆனால் பின் வரக்கூடிய இந்த வழிமுறைகளை நீங்கள் பின்பற்றினால் குறைந்த வட்டியில் எளிதாக தனிநபர் கடன் பெற முடியும்.
தகுதிகளை பூர்த்தி செய்கிறீர்களா?: தனிநபர் கடனை பெறுவதற்கு எளிமையான தகுதி வரம்புகளைக் கொண்ட வங்கி அல்லது நிதி நிறுவனங்களை தேர்ந்தெடுக்க வேண்டும். ஒருவேளை அவர்கள் சிக்கலான தகுதி வரம்புகளைக் கொண்டிருந்தால் உங்களுக்கு கடன் கிடைப்பது சவால் ஆகிவிடும் என்பதை தாண்டி கடன் தொகை அல்லது வட்டி விகிதங்களில் நீங்கள் சமரசம் செய்ய நேரிடலாம். எனவே எளிமையான தகுதி வரம்புகள் மற்றும் விரைவான சரிபார்ப்பு செயல்முறை கொண்ட வங்கிகளை தேர்வு செய்தால் உங்களுக்கு கடன் கிடைப்பதில் சிக்கல் ஏற்படாது. தகுதிகளை பூர்த்தி செய்பவர்களுக்கு வங்கிகள் குறைந்த வட்டியில் கடன் வழங்க முன் வரும்.
கிரெடிட் ஸ்கோர்: உங்களுக்கு தனிநபர் கடனை வழங்கலாமா வேண்டாமா என்பதை வங்கிகள் உங்களுடைய கிரெடிட் ஸ்கோர் அடிப்படையில் தான் தீர்மானிக்கின்றன. எனவே அதிக கிரெடிட் ஸ்கோர் இருந்தால் உங்களுக்கு குறைந்த வட்டியில் கடன் கிடைக்கும். உங்களுடைய கிரெடிட் ஸ்கோர் குறைந்தது 685 புள்ளிகளாவது இருக்க வேண்டும். அவ்வாறு இருக்கும் பட்சத்தில் நீங்கள் சரியான முறையில் கடனை திரும்ப வழங்குவீர்கள் என்ற நம்பிக்கை வங்கிகளுக்கு கிடைக்கும். இதன் காரணமாக நீங்கள் வட்டியை குறைக்கும் படி முறையிடலாம்.
நிலையான வேலை: உங்களுக்கு ஒரு நிலையான வருமானம் இருக்கிறது என்றால் வங்கிகள் தாராளமாக நீங்கள் கேட்கும் தொகைக்கு தனிநபர் கடன்களை வழங்கும். அதே வேளையில் உங்களுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்குவதற்கான வாய்ப்பு உருவாகும். கடந்த ஓராண்டு காலத்தில் உங்களின் ஊதியம் தொடர்பான அறிக்கையை நீங்கள் ஒரு ஆவணமாக காட்டும் போது.
அனைத்து வருமான ஆதாரங்களையும் காட்ட வேண்டும்: உங்களுடைய அனைத்து வருமான ஆதாரங்களையும் நீங்கள் வங்கியிடம் சமர்ப்பிப்பதை உறுதி செய்யுங்கள். உங்களுடைய முதலீடு, உங்களுக்கு வரக்கூடிய டிவிடெண்டுகள் அல்லது வாடகை பணம் உள்ளிட்ட அனைத்து வருமான ஆதாரங்களையும் நீங்கள் தாக்கல் செய்யும்போது, உங்களால் எளிதாக கடனை திரும்ப கட்டிவிட முடியும் என்ற நம்பிக்கை வங்கிகளுக்கு கிடைக்கும். அவர்கள் உங்களுக்கு ஒரு கணிசமான வட்டி தொகையில் தனி நபர் கடனை வழங்க முன் வருவார்கள்.
பல்வேறு வங்கிகளை ஒப்பிடவும்: சந்தையில் பல்வேறு வங்கிகளும், வங்கி சாராத நிதி நிறுவனங்களும் தனி நபர் கடன்களை வழங்குகின்றன. இவை பல்வேறு விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளையும், வட்டி விகிதங்களையும் கொண்டிருக்கின்றன.
எனவே நீங்கள் ஆன்லைனில் கிடைக்கக்கூடிய ஈஎம்ஐ கால்குலேட்டரை பயன்படுத்தி பல்வேறு வங்கிகள் வழங்கும் வட்டி விகிதங்களை உள்ளிட்டு உங்களுக்கான வட்டி தொகை, கடன் தொகை மற்றும் கடனை திரும்ப செலுத்தும் காலம் ஆகியவற்றை எளிதாக கணக்கீடு செய்து கொள்ளலாம். சில நிதி நிறுவனங்கள் அதிக தொகையை கடனாக வழங்கும், 24 மணி நேரத்தில் பணத்தை கிரெடிட் செய்வது,கடனை திரும்ப செலுத்துவதில் சலுகை ஆகியவற்றை வழங்குகின்றன.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?



Click it and Unblock the Notifications

