உங்களுக்கு இன்னும் மகளிர் உரிமைத் தொகை கிடைக்கலயா? இந்த தேதியில் இருந்து விண்ணப்பிக்கலாம் தெரியுமா?

சென்னை: தமிழ்நாட்டின் முன்னோடி திட்டங்களில் ஒன்றாக மகளிர் உரிமைத்தொகை திட்டம் பார்க்கப்படுகிறது. குடும்பத்திற்காக வாழ்நாளெல்லாம் ஓயாமல் உழைக்கும் பெண்களுக்கு அவர்களின் உழைப்புக்கு கொடுக்கக் கூடிய அங்கீகாரமாக கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.

மகளிர் உரிமைத் தொகை திட்டம்: இந்தத் திட்டத்தின் படி தகுதி வாய்ந்த குடும்ப தலைவிகள் ஆண்டுக்கு 12 ஆயிரம் ரூபாய் அதாவது மாதந்தோறும் ஆயிரம் ரூபாயை உரிமைத் தொகையாக பெற்று வருகின்றனர். ஒரு குடும்ப அட்டையில் பெயர் இடம் பெற்றுள்ள அனைவருமே ஒரு குடும்பமாக கருதப்படுகிறார்கள். ஒவ்வொரு தகுதி வாய்ந்த குடும்பத்திலும் இருக்கும் குடும்ப தலைவிக்கு கலைஞர் மகளிர் உரிமை தொகை கிடைக்கும்.

உங்களுக்கு இன்னும் மகளிர் உரிமைத் தொகை கிடைக்கலயா? இந்த தேதியில் இருந்து விண்ணப்பிக்கலாம் தெரியுமா?

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்: குடும்ப அட்டையில் குடும்ப தலைவர் என குறிப்பிடப்பட்டுள்ள பெண் குடும்ப தலைவியாக கருதப்படுவார். ஒருவேளை குடும்ப அட்டையில் ஆண் குடும்ப தலைவராக குறிப்பிட்டிருந்தாலும் அந்த குடும்பத் தலைவரின் மனைவி குடும்ப தலைவியாக கருதப்பட்டு மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பம் பெறுவதற்கான தகுதியை பெறுவார் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

பொருளாதார தகுதிகள்: ஆண்டுக்கு 2.5 லட்சத்திற்கும் கீழ் வருமானம் ஈட்டும் குடும்பங்கள், ஐந்து ஏக்கருக்கு குறைவாக நன்செய் நிலம் அல்லது 10 ஏக்கருக்கு குறைவாக புன்செய் நிலம் வைத்துள்ள குடும்பங்கள், ஆண்டுக்கு வீட்டு உபயோகத்திற்கு 3,600 யூனிட்டுக்கும் குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்களை சேர்ந்த குடும்ப தலைவிகள் இதில் விண்ணப்பம் செய்ய தகுதி பெறுகிறார்கள்.

இதுவரை உரிமைத்தொகை கிடைக்கவில்லையா?: தகுதி இருந்தும் தங்களுக்கு இதுவரை மகளிர் உரிமை தொகை கிடைக்கவில்லை எனக் கூறும் பெண்களும் புதிதாக ரேஷன் அட்டை பெற்றிருக்கும் பெண்களும் கூடிய விரைவில் மகளிர் உரிமைத் தொகையை பெறுவதற்கு விண்ணப்பம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே புதிதாக ரேசன் அட்டை பெற்றவர்கள் , இதற்கு முன்பு உரிமை தொகைக்கு விண்ணப்பம் செய்து நிராகரிக்கப்பட்டவர்கள் விரைவில் விண்ணப்பம் செய்யலாம், அதற்கான தேதியை அரசு அறிவித்துள்ளது.

எந்த தேதியில் இருந்து விண்ணப்பிக்கலாம்?: வரும் ஜூலை 15ஆம் தேதியிலிருந்து மகளிர் உரிமைத் தொகைக்கு பெண்கள் விண்ணப்பம் செய்யலாம் என முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார் . தஞ்சையில் கல்லூரி விழாவில் கலந்து கொண்டு பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் இந்த அறிவிப்பினை வெளியிட்டார். தமிழ்நாட்டில் ஜூலை 15ஆம் தேதி தொடங்கி "உங்களுடன் ஸ்டாலின்" என்ற பெயரில் முகாம்கள் நடத்தப்படும் என்றும் இந்த முகாமில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விடுபட்ட தகுதியுள்ள பெண்கள் தங்களின் விண்ணப்பங்களை வழங்கலாம் என்றும் அறிவித்தார்.

எப்போது முதல் உரிமை தொகை கிடைக்கும்?: இவ்வாறு வழங்கப்படும் விண்ணப்பங்களின் மீது 45 நாட்களுக்குள் முடிவு எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது நீங்கள் விண்ணப்பம் செய்த 45 நாட்களுக்குள் உங்களுக்கு பணம் கிடைக்குமா என்பது தெரிந்து விடும். ஜூலை இரண்டாவது வாரம் தொடங்கி அக்டோபர் மாதம் வரை" உங்களுடன் ஸ்டாலின்" முகாம்கள் நடத்தப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

விண்ணப்பம் செய்வது எப்படி: இதுவரை மகளிர் உரிமைத்தொகை கிடைக்க பெறாதவர்கள், புதிதாக ரேசன் அட்டை பெற்றவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி விண்ணப்பம் செய்து கொள்ளலாம். ஜூலை 15ஆம் தேதி முதல் அக்டோபர் மாதம் வரை விண்ணப்பம் செய்வதற்கான அவகாசம் இருக்கிறது. ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு பயனாளி மட்டுமே விண்ணப்பம் செய்ய தகுதி பெறுவார்கள். மக்கள் இந்த முகாம்களுக்கு நேரடியாக சென்று விண்ணப்பத்தை பெற்று பூர்த்தி செய்து வழங்கலாம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+