சென்னை: ஒரு வீட்டை வாங்கவேண்டும் என்பது ஒவ்வொருவருக்கும் உள்ள கனவு தான். ஆனால் நீங்கள் ஒரு வீட்டை வாங்கப் போகிறீர்கள் என்றால், அந்த வீட்டின் வெளிப்புறத் தோற்றத்தையும், முதல்முறையாக வீடு வாங்க இருந்தால் உங்களுடைய உணர்ச்சிகளையும் அடிப்படையாகக் கொண்டு வீட்டைத் தேர்வு செய்து விடக்கூடாது. ஒரு வீட்டின் உரிமையாளர், ஒரு வீட்டினை விற்கிறார் என்றால், அதன் விவரங்கள் குறித்து முழுமையாக தெரிந்து கொள்வது அவசியம். எனவே கட்டிய வீடு வாங்குவதற்கு முன்பு கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.
வீட்டின் வால்பேப்பர்: நீங்கள் ஒரு வீட்டை வாங்குவதற்காக செல்கிறீர்கள். அந்த வீட்டின் விற்பனையாளர், வீட்டில் உள்ள கட்டமைப்பு பிரச்சனைக்களை மறைப்பதற்காக வால்பேப்பர்-களை பயன்படுத்தி இருக்கலாம். மேலும் சுவர் முழுவதும் விரிசல், சீரற்ற தளங்கள் அல்லது வீட்டின் மேற்கூரையில் ஈரப்பதம் ஆகியவை உங்கள் வீட்டிற்கு ஆபத்தை விளைவிக்கும். எனவே வீட்டை வாங்குவதற்கு முன்பு இவற்றை எல்லாம் சரி பார்ப்பது மிகவும் முக்கியம். இதனை நீங்கள் தாமதமாக கண்டறிந்தால், அவற்றை சரிசெய்வதற்கு நிறைய பணம் செலவிட வேண்டி இருக்கும். ஆகையால் ஒரு வீட்டை வாங்குவதற்கு முன்பு ஒரு பொறியாளரை வைத்து அந்த வீட்டில் எந்த ஒரு பிரச்சணையும் இல்லை என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

பத்திரங்கள்: விற்பனையாளர்களின் சொத்துப் பத்திரங்கள் தெளிவற்றதாகவோ , பரம்பரை தகராறு காரணமாகவோ வீடுகளை விற்பார்கள். அத்தகைய சிக்கல்களில் நீங்கள் மாட்டிக் கொள்ளாமல் ஒரு வழக்கறிஞரை வைத்து அந்த வீட்டின் சொத்து ஆவணங்களை சரியாகப் பார்க்கவும்.ஏதேனும் வீட்டு பத்திரங்களில் சிக்கல் இருப்பது போல் தெரிந்தால், தேவையற்ற பிரச்சனைகளில் சிக்கிக் கொண்டு உங்களுடைய நேரத்தையும் பணத்தையும் இழப்பதற்கு பதிலாக வேறொரு வீட்டை வாங்குவது குறித்து பரிசீலிக்கலாம்.
பூச்சிகளின் தொல்லை: ஓட்டு வீடு போன்ற வீடுகளை வாங்க இருந்தால் அவற்றில் பூச்சிகளின் தொல்லை இருக்கிறதா என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். சில ஓட்டு வீடுகளில் கரையான் தொல்லை இருக்கலாம். என்னதான் மாடி வீடுகளை வாங்க வேண்டும் என்று பலர் சிந்தித்தாலும், பாரம்பரியமான வீடுகளை வாங்க வேண்டும் என்று பலருக்கும் விருப்பம் இருக்கும். ஆனால் இது போன்ற சிறு விஷயங்களையும் பார்ப்பது நல்லது.
தொழிற்சாலைகள்: சில வீட்டிற்கு அருகே தொழிற்சாலைகள்,ஏதேனும் பெரிய கட்டுமான நடவடிக்கைகள் அல்லது போக்குவரத்து சிக்கல்கள் இருக்கலாம். அவ்வாறு இருக்கும் பகுதியில் வெள்ளம் அல்லது தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது. அந்த வீட்டை நீங்கள் வாங்கிய பிறகு இந்த சிக்கல்களை நீங்கள் கண்டறிந்தால் உங்களுக்கு மன அழுத்தத்தை அவை உண்டாக்கும். ஆகையால் முடிந்தவரை நீங்கள் வாங்கப் போகும் வீட்டின் பக்கத்து வீட்டுக்காரரிடம் உரையாடி அப்பகுதியைப் பற்றி விசாரித்துக் கொள்ள வேண்டும்.
மரணம்: நீங்கள் வாங்க இருக்கும் வீட்டில் யாரேனும் துரதிஷ்டவசமாக தற்கொலை செய்து இறந்து இருந்தால், அந்த வீட்டினை விற்று விட வேண்டும் என்று உரிமணியாளர் சிந்திக்கலாம். இதுபோன்ற வீடுகளை நீங்கள் வாங்கி அதன் பிறகு உங்களுக்கு விஷயம் தெரிய வந்தால் பலர் அதனை எதார்த்தமாக எடுத்துக்கொண்டு கடந்து விடுவார்கள். ஆனால் சிலருக்கு இது தேவையற்ற பய உணர்வை கொடுக்கலாம். அவ்வாறு அந்த வீட்டில் சிலர் வசித்தாலும் எதார்த்தமாக நடக்கும் நிகழ்வுகள் கூட தவறாக தோன்றும். எனவே முடிந்தவரை ஒரு வீட்டை வாங்குவதற்கு முன் யாரேனும் அவ்வீட்டில் இறந்ததுண்டா என்று விசாரித்துக் கொள்ளுங்கள். இது அனைவருக்குமானது அல்ல. இது போன்ற விஷயங்களை நினைத்து பயப்படும் நபர்களுக்கே.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!



Click it and Unblock the Notifications