சென்னை: தற்போது சர்வதேச அளவில் தொழில்நுட்ப ரீதியிலான வேலைகளுக்கு தேவை அதிகரித்துள்ளது. இந்த துறையில் வேலை செய்வதற்கான ஆட்களின் தேவையும் அதிகரித்திருக்கிறது. அந்த வகையில் கோடிங் கற்றுக்கொள்ள தேவையில்லாத 10 வேலைகள் குறித்து நாம் இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம் .
User Interface (UI) Specialist: ஒரு செயலி மற்றும் ஒரு இணைய தளம் அதனை பயன்படுத்துபவர்களின் பார்வையில் எப்படி அமைந்திருக்க வேண்டும் என்பதை வடிவமைக்கும் பொறுப்பு கொண்டவர்கள் தான் இவர்கள். ஒரு இணையதளம் எப்படி இருக்க வேண்டும் எவை எந்தெந்த இடத்தில் வடிவமைக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்டவற்றையெல்லாம் அடோப் மற்றும் ஃபிக்மா உள்ளிட்ட செயலிகள் வாயிலாக எளிதாக வடிவமைக்கிறார்கள். இதற்கு கோடிங் தெரிய வேண்டும் என்று அவசியம் கிடையாது.

User Experience (UX) Specialist: ஒரு செயலியின் வடிவம் எப்படி இருக்கிறது ,அதனை மக்கள் எப்படி பயன்படுத்துவார்கள், மக்கள் எளிதாக பயன்படுத்தும் வகையில் அதன் வடிவமைப்பு இருக்கிறதா என்பன உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து அதற்கேற்ற வகையில் செயலியிலும் இணையதள பக்கங்களிலும் மாற்றங்களை கொண்டு வருபவர்கள் தான் இவர்கள். இதற்கு கோடிங் அவசியம் கிடையாது .
Technical Writer: தொழில்நுட்ப உலகின் கதை சொல்லிகள் என இவர்களை கூறலாம். சிக்கலான டெக் கருத்தாக்கங்களை எளிதில் புரிந்து கொள்ளக் கூடிய வழிகாட்டுதல்களாகவும், ஆவணங்களாகவும் மாற்றி வழங்குகின்றனர். நல்ல எழுத்து திறமையும் சரியான மொழித் திறமையும் இருந்தால் போதும் இதற்கு கோடிங் தெரிய வேண்டும் என்று அவசியம் கிடையாது.
Project Manager: ஒரு குறிப்பிட்ட ப்ராஜெக்ட் பெறுவது, குறிப்பிட்ட பட்ஜெட்டுக்குள் அந்த ப்ராஜெக்ட் செய்து முடிப்பது, அதேபோல உறுதியளிக்கப்பட்ட கால நேரத்திற்குள் அந்த பணியை முடித்து வாடிக்கையாளரிடம் ஒப்படைப்பது ஆகியவற்றுக்கு இவர் தான் பொறுப்பு. அனைத்து வேலைகளையும் தொடக்கம் முதல் முடிவு வரை மேற்பார்வையிடக்கூடிய ஒரு பொறுப்பு தான் இது. தொழில்நுட்பத் துறை சார்ந்த வேலையாக இருந்தாலும் இதற்கு கோடிங் தெரிய வேண்டும் என்று அவசியம் கிடையாது.
Data Analyst: அதிக அளவு ஆட்கள் தேவைப்படக்கூடிய ஒரு துறையாக இருக்கிறது. தரவுகளை கையாள்வதில் சிறந்த நபர்களாக இருக்க வேண்டும், தரவுகளின் அடிப்படையில் நிறுவனங்கள் முடிவுகளை எடுக்கக் கூடிய வகையில் அவற்றை தயாரித்து வழங்கும் நபராக இருக்க வேண்டும். எண்கள், வரைபடங்கள், எக்ஸெல் உள்ளிட்டவற்றை பயன்படுத்தும் திறமை இருந்தால் போதும்.
Business Analyst: தொழில்களின் பிரச்சனைகளை தீர்க்கக் தொழில்நுட்ப ரீதியான தீர்வினை வழங்கும் நபர். அதாவது ஒரு தொழிலுக்கு என்ன தேவை என்பதை புரிந்து கொண்டு தொழில்நுட்ப ரீதியாக அந்த தேவைகளை நிவர்த்தி செய்யக்கூடிய ஒரு பொறுப்பு தான் இது . இந்த பணிக்கும் கோடிங் தேவையில்லை.
SEO Specialist: இணையதளத்தில் ஒரு விஷயத்தை தேடும்போது முதல் இடத்தில் குறிப்பிட்ட தளம் அவர்களின் பார்வைக்கு வர வேண்டும் என்ற பணியை செய்பவர்கள் தான் எஸ்இஓ ஸ்பெஷலிஸ்ட் .இதற்கு கோடிங் பற்றிய விழிப்புணர்வு தேவை கிடையாது. இது தொடர்பான சான்றிதழ் படிப்புகளை முடித்து போதிய பணி அனுபவம் பெற்றாலே போதும்.
IT Support Specialist: ஒரு குறிப்பிட்ட நிறுவனங்களில் இருக்கும் சாஃப்ட்வேர் மற்றும் ஹார்டுவேர் பொருட்களை மேலாண்மை செய்யக்கூடிய ஒரு பிரிவுதான் இது. இதற்கும் கோடிங் தேவை கிடையாது .
Sales Engineer: ஒரு வாடிக்கையாளரின் தேவை அந்த குறிப்பிட்ட நிறுவனம் வழங்கும் தயாரிப்பு ஆகிய இரண்டும் எப்படி பொருந்தி போகிறது என்பதை புரிந்து கொண்டு அதனை சரியான வாடிக்கையாளரிடம் கொண்டு சேர்க்கக்கூடிய ஒரு நபர்தான் சேல்ஸ் இன்ஜினியர். உங்களுக்கு தொழில்நுட்ப ரீதியிலான போதிய அறிவு இருக்கிறது, நல்ல தகவல் தொடர்பு திறமை இருக்கிறது என்றால் நீங்கள் எளிதாக இந்த வேலையில் வளர்ச்சி அடைய முடியும் .
System Administrator: ஒரு நிறுவனத்திற்கு தேவையான சர்வர்கள் மற்றும் சர்வர்கள் முறையாக செயல்படுவதையும் எந்தவித அச்சுறுத்தலும் இல்லாமல் அவை பாதுகாப்பான முறையில் இருப்பதையும் தொழில்நுட்ப ரீதியாக கவனித்துக் கொள்ளக்கூடிய ஒரு பணி தான் இது. இந்த பணிக்கும் கோடிங் பற்றிய புரிதல் தேவையில்லை.
Story Written by: Devika
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!



Click it and Unblock the Notifications