வேலையில் குறைவான ஊதியம் கிடைத்து.. பணிச்சூழல் ஒத்துவரவில்லை என்றால் இதை தவிர்ப்பதற்கான ஒரே வழி சொந்த தொழில் தான். ஆனால் எந்த தொழிலைச் செய்வது? எப்படி செய்வது? என்ற 2 கேள்விகளும் தொழில் தொடங்குபவர்களுக்கு மலைபோல் முன் நிற்கின்றன. இன்று இந்த 2 கேள்வியை எளிதாக்கும் வகையில் ஒரு பிசினஸ் ஐடியாவைப் பற்றி பார்க்கலாம். இதற்கு ஆரம்பத்தில் பணம் செலவாகும். ஆனால் வருடம் முழுவதும் டிமாண்ட் இருந்து கொண்டே இருக்கும் பிசினஸ்களில் இதுவும் ஒன்று.
அது வேறொன்றுமில்லை செங்கல் தயாரிக்கும் தொழில். அதுவும் சிமெண்ட் செங்கற்கள். இந்தத் தொழிலை தொடங்கி நல்ல லாபம் ஈட்ட நீங்கள் என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்து பார்ப்போம்.

முதலில் ஒரு பிளானை உருவாக்குங்கள்: சிமெண்ட் செங்கற்களை உருவாக்க ஒரு சிறந்த பிளானை உருவாக்குவது அவசியம். அதில் உங்கள் இலக்குகள், மார்க்கெட்டிங் யுக்திகள், நிதி மேலாண்மை மற்றும் செயல்பாடுகள் ஆகியவற்றைக் கொண்டதாக உங்கள் பிளான் இருக்க வேண்டும். உங்களுடைய பிளான் தெளிவாகவும், நடைமுறைக்கு ஏற்றதாகவும் இருந்தால் கண்டிப்பாக இந்த தொழிலில் நல்ல லாபம் பெறலாம்.
ஆராய்ச்சி: எந்த ஒரு புதிய தொழிலை தொடங்குவதற்கு முன்பும் அந்த தொழிலைப் பற்றி ஆராய்ச்சி செய்வது அவசியம். சந்தையில் போட்டி எவ்வாறு உள்ளது? மக்கள் உங்கள் தயாரிப்பின் அம்சங்கள் என்ன? என்பதை புரிந்து கொள்வார்களா, அதை புரிய வைக்க நீங்கள் என்ன செய்ய வேண்டும்?, உங்களுடைய சிமெண்ட் செங்கற்கள் மற்ற தயாரிப்புகளை விட வேறுபட்டதா? குறைந்த விலையில் உயர்தரத்தை வழங்க முடியுமா? என அனைத்து விஷயங்களையும் ஆராய்தல் முக்கியம்.
ஆரம்ப முதலீடு: சிமெண்ட் செங்கல் உற்பத்திக்கு சராசரியாக ரூ. 12 முதல் ரூ. 15 லட்சம் வரை ஆரம்ப முதலீடு தேவைப்படலாம். இதில் பின்வரும் செலவுகள் அடங்கும்.
நிலச் செலவு: உங்களுடைய நிறுவனம் நகர மையத்திலிருந்து அல்லது குடியிருப்பு பகுதியில் இருந்து தொலைவில் இருக்க வேண்டும். இதற்கு 1 ஏக்கர் வரையில் நிலம் தேவைப்படலாம். நிலத்தின் விலை அந்தந்த பகுதிகளுக்கு ஏற்ப மாறுபடும். ஒருவேளை உங்களுக்கு சொந்த நிலம் இருந்தால் பிரச்சனையே இல்லை.
இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள்: தானியங்கி இயந்திரங்கள் வாங்குவதற்கு ரூ.10 லட்சம் முதல் ரூ.13 லட்சம் வரை செலவாகலாம். அதுவே பட்ஜெட்டுக்குள் இயந்திரங்கள் வாங்க விரும்பினால்.. நீங்கள் ஏற்கனவே பயன்படுத்திய இயந்திரங்களை வாங்கலாம்.
மூலப்பொருள் செலவு: மூலப்பொருட்களான சிமெண்ட், மணல், தண்ணீர் மற்றும் பிற ரசாயனங்களை வாங்குவதற்கு செலவுகள் இருக்கும். சந்தையில் இது கிடைக்கும் தன்மையை பொறுத்து விலையும் மாறுபடும்.
அனுமதிகள்: உங்கள் உற்பத்தி வணிகத்திற்கு பல்வேறு அனுமதிகள் மற்றும் உரிமங்களை பெற வேண்டியிருக்கும். உற்பத்தி புகை, தூசு, பிற கழிவுகள் உருவாகும் என்பதால் இதற்கு என்னென்ன உரிமங்கள் தேவையோ அவற்றையும் வாங்க வேண்டி வரலாம்.
ஊழியர்கள்: இந்த தொழிலில் பணிபுரிவதற்கு சிறப்பு திறன்கள் எதுவும் தேவையில்லை என்றாலும்.. உற்பத்தி செயல்முறையை புரிந்து கொள்ளும் நல்ல அனுபவம் வாய்ந்த தொழிலாளர்கள் தேவை.
சந்தைப்படுத்தல்: சிமெண்ட் செங்கற்களை சந்தைப்படுத்துவது சற்று சவாலானது. ஏனெனில் நேரடியாக இவை நுகர்வோருக்கு விற்கப்படுவதில்லை. காண்ட்ராக்டர்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு அதன் மூலம் கட்டுமான துறையில் பயன்படுத்தப்படுகிறது. எனவே உங்களுக்கு தெரிந்த ஒப்பந்தக்காரர்களுடன் நல்ல உறவை வளர்த்துக் கொள்ளுங்கள். கையில் பணத்தை வைத்துக்கொண்டு ஏதேனும் தொழில் செய்ய வேண்டும் என்று சிந்தித்து கொண்டு இருந்தால்.. இந்த ஐடியாவை பயன்படுத்தி பலனடையலாம்.
More From GoodReturns

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?



Click it and Unblock the Notifications