பொதுவாக நம் நண்பர்களோ உறவினர்களோ குழந்தை பிறந்தால் இந்த எழுத்தில் ஏதேனும் பெயரை பரிந்துரை செய்யுங்கள் என கேட்பார்கள் நாமும் நமக்கு தெரிந்த பெயர்களை பரிந்துரையாக வழங்குவோம். ஆனால் இதையே ஒரு பெண் தொழிலாக மாற்றி லட்சக்கணக்கில் சம்பாதிக்கிறார்.
இந்த காலத்தில் ஒரு குழந்தையை பெற்று வளர்த்து ஆளாக்குவது என்பது பல்வேறு செலவுகள் நிறைந்ததாக மாறியிருக்கிறது. 25 வருடங்களுக்கு முன்பிருந்த குழந்தை வளர்ப்பு நிலை தற்போது கிடையாது. குழந்தை தரிப்பது தொடங்கி குழந்தையை பெற்றெடுத்து பள்ளிக்கு அனுப்புவது வரை நாம் பல செலவுகளை எதிர்கொள்கிறோம்.

தற்போது உலகம் முழுவதும் இருக்கக்கூடிய இளம் பெற்றோர்களுக்கு குழந்தைகளை பெற்றெடுப்பதை காட்டிலும் குழந்தைக்கு பொருத்தமான பெயரை தேர்வு செய்வது பெரிய சிக்கலாக இருக்கிறதாம். தற்போது குழந்தைக்கு பெயர் தேர்வு செய்து கொடுப்பதே ஒரு தொழிலாக மாறி இருக்கிறது என்பதுதான் ஆச்சரியம்.
1 கோடி பணம் சம்பாதிக்க எளிய வழி Mutual Fund
அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ பகுதியை சேர்ந்த ஒரு பெண் குழந்தைகளுக்கு பெயர் தேர்வு செய்து வழங்குவதற்காகவே ஒரு நிறுவனத்தையே தொடங்கி நடத்தி வருகிறார் . சராசரியாக இதற்காக அவர் 26 லட்சம் ரூபாய் கட்டணமாக வசூல் செய்கிறாராம். டெய்லர் ஹம்பிரே என்ற அந்த பெண் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் சமூக வலைத்தளங்களில் புதுப்புது பெயர்களை தேர்ந்தெடுத்து பதிவிடுவாராம்.
குழந்தைகளுக்கு இந்த பெயர் வைத்தால் நன்றாக இருக்கும் , இந்த பெயரின் அர்த்தம் இது என இண்ட்ரஸ்டிங்கான பெயர்களை தேர்வு செய்து பதிவு செய்திருக்கிறார் . இதன் மூலம் பலரும் அவரிடம் குழந்தைக்கு பெயர் வைக்க வேண்டும் என கேட்பார்களாம் இதனை முழு நேர தொழிலாகவே அவர் மாற்றி இருக்கிறார் . டிக் டாக் மற்றும் இன்ஸ்டாகிராம் தளத்தில் அவர் ஒரு லட்சம் ஃபாலோவர்களை கொண்டிருக்கிறார். 500 குழந்தைகளுக்கு பெயர் சூட்டுவதற்கு இவர் உதவி செய்திருக்கிறார் .
ஒரு குழந்தைக்கு பெயர் தேர்வு செய்வது என்றால் அத்தனை சாதாரண வேலை இல்லை என கூறியிருக்கிறார். இதற்காக ஒரு பெரிய கேள்வித்தாள்களை இவருடைய நிறுவனம் தயாரித்து வைத்திருக்கிறதாம். பெற்றோர் வந்து தங்களை அணுகும் போது இந்த கேள்வித்தாள்களை கொடுத்து அவர்களுடைய பின்னணி என்ன எது மாதிரியான பெயரை அவர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்பன உள்ளிட்ட விவரங்கள் அனைத்தையும் கேட்டு அதன் அடிப்படையில் தான் அவர் பெயர்களை பரிந்துரை செய்வாராம்.
குறைந்தபட்சம் 200 டாலர்கள் என தொடங்கிய இந்த பெயர் தேர்வு செய்வதற்கான கட்டணம் தற்போது முப்பதாயிரம் டாலர்கள் அதாவது இந்திய ரூபாயின் மதிப்பின் 26 லட்சம் ரூபாய் என உயர்ந்திருக்கிறது. ஒரு பெயரை தேர்ந்தெடுத்து கொடுத்தால் அந்த பெயரின் அர்த்தம் தொடங்கி அனைத்தையும் தான் பெற்றோருக்கு விளக்கவேன் என அவர் கூறியிருக்கிறார் .
பெரும் பணக்காரர்கள் தொடங்கி சாதாரண மக்களுடைய பலரும் தன்னிடம் குழந்தைகள் பெயர் தேர்வு செய்து வழங்குமாறு கேட்கிறார்கள் என கூறியிருக்கிறார் .நம்ம இங்க சும்மா செஞ்சிட்டு இருக்க வேலையே அவங்க ஒருத்தங்க தொழிலாவே பண்ணிட்டு இருக்காங்க.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications