அமெரிக்கா: சர்வதேச அளவில் புகழ்பெற்ற நபராக இருக்க கூடிய எலான் மஸ்க் மின்சார வாகன தயாரிப்பு, விண்வெளி தொழில்நுட்பம் என பல்வேறு துறைகளிலும் சிறந்து செயலாற்றும் நபராக இருக்கிறார். இவருக்கு சொந்தமாக டெஸ்லா,ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் நியூராலிங்க் போன்ற நிறுவனங்கள் உலக அளவில் மிக தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இந்த நிறுவனங்களில் வேலை செய்வதற்கு என்னென்ன தகுதிகள் வேண்டும் என்பது குறித்து வெளியாகியுள்ள தகவல்களை விரிவாக பார்க்கலாம்.
நீண்ட நேரம் பணி : நீண்ட நேரத்திற்கு பணியாற்ற தயாராக இருக்க வேண்டும் என்றும் அதிகபட்ச வேலைப்பளுவை சுமப்பதற்கு தயாராக இருக்க வேண்டும் என்றும் சொல்லப்படுகிறது. ஏனெனில் மிக குறுகிய காலத்திற்குள் சரியான திட்டத்தை சரியான முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதில் தீவிரமாக இருப்பவர் எலன் மஸ்க்.

புதுமைக்கு முக்கியத்துவம்: தனித்துவமான முறையில் யோசிக்கும் நபர்களுக்கு இவரது நிறுவனத்தில் எளிதில் வேலை வாய்ப்பு கிடைக்கும் என சொல்லப்படுகிறது. அது மட்டும் இன்றி புது புது கண்டுபிடிப்புகளை கொண்டு வரும் நபர்களுக்கு இவரது நிறுவனம் மிகவும் பொருத்தமாக இருக்கும்.
டெக் நிபுணத்துவம்: பொறியியல், அறிவியல் மற்றும் கணினி அறிவியல் ஆகிய துறைகளில் அடுத்தடுத்த அப்டேட்டுகளை தெரிந்து வைத்திருக்க வேண்டும் . குறிப்பாக தொழில்நுட்ப ரீதியாக நிபுணத்துவம் பெற்றவர்கள் எளிதாக இவரது நிறுவனத்தில் வேலை வாய்ப்பினை பெற முடியும்.
முழுமையான புரிதல்: எந்த ஒரு விஷயத்தையும் அடிப்படையிலிருந்து புரிந்து கொண்டவர்களால் மட்டுமே புதிய பொருட்களையும் புதிய தயாரிப்புகளையும் உருவாக்க முடியும் என்பதில் நம்பிக்கை கொண்டவர் இவர். எனவே அனைத்து விஷயங்களையும் அடிப்படையிலிருந்து புரிந்து கொண்டு அதன் அடிப்படையில் ஒரு பிரச்சனையை உருவாக்குவது மற்றும் அந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வினை உருவாக்குவது என்ற அணுகுமுறை கொண்டவர்களுக்கு இங்கே வேலை வாய்ப்பு கிடைக்கும்.
தானாக முன் வந்து செய்வது: ஒரு குறிப்பிட்ட ப்ராஜெக்டுகளை கையில் எடுத்து அதற்கென தன்னால் முயன்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வது. தானாக முன் வந்து ஒரு செயலை செய்வதில் ஆர்வம் கொண்டிருப்பது என்பன உள்ளிட்ட அணுகுமுறைகள் இங்கே தேவைப்படுகிறது.
தகவல் தொடர்பு திறன் : மிக சிக்கலான ஐடியாக்களையும் எழுத்துப்பூர்வமாக அல்லது வார்த்தைகள் மூலமாகவும் அனைவரும் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் விளக்கக்கூடிய நபர்கள் முக்கியத்துவம் பெறுகின்றனர். அதாவது சிறந்த தகவல் தொடர்பு திறமை கொண்டவர்கள் எளிதாக இங்கே வேலைவாய்ப்பு பெற முடியும்.
தோல்விகளில் இருந்து மீண்டு வருவது: தோல்விகளை கண்டு துவளாமல் அவற்றிலிருந்து மீண்டு வந்து வெற்றியடைய வேண்டும் என நினைப்பவர்களுக்கு இங்கே வரவேற்பு உண்டு. எனெனில் எலன் மஸ்க் பல தோல்விகள் இருந்து தான் இத்தகைய வெற்றியை பெற்றுள்ளார்.
மாற்றங்களை ஏற்படுது: புதுப்புது விஷயங்களை கற்றுக் கொள்வது மாறிவரும் சூழல்களுக்கு ஏற்ப தகவமைத்துக் கொள்வது மற்றும் நவீன நுட்பங்களை அப்டேட் செய்து கொள்வது. தனிப்பட்ட முறையில் இத்தகைய திறன்களை கொண்டவர்களுக்கு எலன் மஸ்கின் நிறுவனத்தில் வேலை கிடைக்கும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.
Story Written by: Devika


Click it and Unblock the Notifications