பிப்ரவரி 28ஆம் தேதியில் இருந்து ஈரானில் அமெரிக்காவும் இஸ்ரேலும் தீவிர ராணுவ தாக்குதலை நடத்தி வருகின்றன. பதிலுக்கு ஈரானும் இஸ்ரேல் மற்றும் சுற்றி இருக்கக்கூடிய வளைகுடா நாடுகளின் மீது தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது. இந்தப் போர் பல்வேறு நாடுகளிலும் கடுமையான எரிபொருள் தட்டுப்பாட்டையும் லாக் டவுன் போன்ற ஒரு சூழலையும் ஏற்படுத்தி இருக்கிறது.
குறிப்பாக ஈரான் போர் அந்த ஒரு நாட்டை மட்டுமில்லாமல் சுற்றி இருக்கக்கூடிய நாடுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஈரான் நாட்டு ராணுவம் தொடர்ச்சியாக ஐக்கிய அரபு அமீரகம் , சவுதி உள்ளிட்ட நாடுகளின் கட்டமைப்புகள் மீது தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த சூழலில் ஈரான் போரை மையமாக வைத்து அமெரிக்க அதிபர் டிரம்பின் மகன்கள் புதிய தொழிலில் முதலீடு செய்து லாபம் பார்த்து வருவது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.

ஈரானின் தாக்குதலுக்கு இலக்காகி வரும் வளைகுடா நாடுகளுக்கு வான் பாதுகாப்பு தொழில்நுட்பங்களை விற்பனை செய்து டிரம்பின் மகன்கள் லாபம் பார்க்கிறார்கள் என ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஃபுளோரிடாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பவரஸ் என்ற நிறுவனத்தில் அண்மையில் தான் டொனால்ட் ட்ரம்பின் மகன்களான எரிக் டிரம்ப் மற்றும் டிரம்ப் ஜூனியர் ஆகியோர் கணிசமான பங்குகளை வாங்கியுள்ளனர்.
இந்த நிறுவனம் கடந்த ஆண்டு தான் அமெரிக்க சிறப்பு ராணுவ படையில் வேலை செய்த முன்னாள் வீரர்களால் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனம் வானிலேயே டிரோன்கள், ஏவுகணைகளை தாக்கி அழிக்கும் தொழில்நுட்பங்களை விற்பனை செய்கிறது. தானியங்கி முறையில் செயல்படும் இந்த தொழில்நுட்பங்கள் தற்போது அதிக அளவில் மத்திய கிழக்கு நாடுகளுக்கு விற்கப்படுகிறதாம்.

தற்போது ஈரான் போர் காரணமாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு வான் பாதுகாப்பு அமைப்புக்கான தேவை அதிகரித்திருக்கிறது. பவரஸ் நிறுவனத்தின் மூத்த அதிகாரிகளுல் ஒருவரான வெலிகோவிச், இந்த பாதுகாப்பு தொழில்நுட்பத்தை மத்திய கிழக்கு நாடுகளில் இருக்கக்கூடிய பல்வேறு நாடுகளும் ஆர்வத்துடன் வாங்குவதற்கு ஆர்வம் தெரிவித்து வருவதாகவும் தங்கள் குழுவினர் அங்கே சென்று பல்வேறு டெமோக்களை செய்து காட்டிருப்பதாகவும் கூறியிருக்கிறார். இந்த தொழில்நுட்பம் பல்வேறு மக்களின் வாழ்க்கையை காப்பாற்றும் என சுட்டிக்காட்டிருக்கிறார்.
டிரம்ப் அதிபராக இருக்கிறார், ஈரானில் போர் தொடுக்கும் முடிவினை எடுக்கும் அதிகாரம் கொண்டுள்ளார், அதே வேளையில் அவரது மகன்கள் வான் பாதுகாப்பு தொழில்நுட்பங்களை விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபடுவது conflict of interest என்றும், போரை வைத்து அதிபரின் குடும்பம் லாபம் பார்க்கிறது என்றும் ஜனநாயக கட்சியினர் குற்றம்சாட்ட தொடங்கியுள்ளனர்.
தற்போது வளைகுடா நாடுகள் தங்களை பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றன, அவை வேறு வழியில்லாமல் டிரம்ப் மகன்கள் நடத்தும் நிறுவனத்தின் டிரோன் தொழில்நுட்பத்தை வாங்குகின்றன என ஜனநாயக கட்சியை சேர்ந்த ரிச்சர்ட் பெயிண்ட் தெரிவிக்கிறார். முதன்முறையாக ஒரு போரில் அதிபரின் குடும்பம் தொழில் புரிந்து லாபம் பார்க்கிறது என்ற குற்றச்சாட்டை முன் வைத்திருக்கும் அவர் இந்த போருக்காக அவர் நாடாளுமன்றத்தின் அனுமதியை கூட வாங்கவில்லை என சுட்டிக்காட்டி இருக்கிறார்.
ஆனால் இதில் conflict of interest எதுவும் இல்லை என பவரஸ் நிறுவனம் விளக்கம் தந்துள்ளது. டிரம்பின் மகன்கள்,எந்தெந்த துறைகளுக்கு எதிர்காலம் உள்ளது என்பதை கணித்து அதில் முதலீடு செய்வதில் திறமையானவர்கள் , ஏற்கனவே அவர்கள் ரியல் எஸ்டேட், கிரிப்டோ கரன்சிகளில் எப்படி முதலீடு செய்தார்களோ அதே போல தான் டிரோன் தொழில்நுட்பத்திலும் முதலீடு செய்திருக்கிறார்கள் என விளக்கம் தந்துள்ளது.
More From GoodReturns

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ஈரானுடன் ஒப்பந்தம் ஏற்படாமலேயே போரை முடிக்க போகிறாரா டிரம்ப்? என்ன சொல்லி இருக்காரு பாருங்க!!

ஈரான் மீது பங்கர்-பஸ்டர் குண்டு தாக்குதல்.. டிரம்ப் வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு.. அதுவும் இந்த இடத்தில்..!!

ஈரான்-க்கு அமெரிக்கா, இஸ்ரேல் விட பெரிய ஆபத்து இதுதான்.. ஈரான் மக்கள் பரிதவிக்கும் நிலை வரலாம்..!!

அபாயகட்டத்தில் ஈரான் போர்..!! தரைவழி தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

ஈரானுக்கு கடைசி வார்னிங்.. எண்ணெய் கிணறு தான் அடுத்த டார்கெட்.. டிரம்ப் பதிவால் ஷாக்..!!

இண்டர்நெட் முதல் சமையல் எண்ணெய் வரை: ஈரான் போரால் அடுத்தடுத்து கிளம்பும் பூதம்!!

திடீரென பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திய Shell நிறுவனம்..!! வாகன ஓட்டிகளே கவனம்..!!

சிலிண்டர் விலை: 3 மாதங்களில் இல்லாத விலை உயர்வு..!! எண்ணெய் நிறுவனங்களின் அறிவிப்பால் அதிர்ச்சி..!!

5ஆவது வாரத்தில் ஈரான் போர்...!! அடுத்ததாக அமெரிக்காவின் நடவடிக்கை என்ன?

4 வார ஈரான் போர்.. தரைமட்டத்திற்கு வந்த டெக் பங்குகள்.. அமெரிக்க அலறல்..!

மீண்டும் மண்ணெண்ணெய்..!! ஈரான் போர் நீடிப்பதால் மத்திய அரசு முக்கிய அறிவிப்பு..!!

Germany: கிளீன் எனர்ஜி எல்லாம் இனி வேலைக்கு ஆகாது.. பழையப்படி நிலக்கரிக்கு போக வேண்டியது தான்..!!



Click it and Unblock the Notifications

