இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தான், இந்தியாவுக்கு எதிராக எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஊக்குவித்து வருகிறது. இதனால் ஏற்கனவே கோபத்தில் இருந்த இந்தியா கடந்த 22ஆம் தேதி பஹல் காமில் நடந்த தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் மீது பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
பாகிஸ்தானில் எத்தனை மாநிலங்கள் உள்ளன, அதில் சர்ச்சைக்குரிய பகுதிகள் என்னென்ன , அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் ஆதிக்கம் செலுத்தக்கூடிய பகுதிகள் என்னென்ன, என்பதை இந்த கட்டுரையில் நாம் தெரிந்து கொள்ள போகிறோம். இந்தியா உரிமை கோரும் இரண்டு மாநிலங்கள் உட்பட பாகிஸ்தானில் மொத்தம் 4 பிராந்தியங்கள் உள்ளன.

இந்தியாவில் மாநிலமாக பிரிக்கப்பட்டாலும், பாகிஸ்தானில் பிராவின்ஸ் அதாவது பிராந்தியமாக பிரிக்கப்பட்டு உள்ளது. சீனாவிலும் இதேபோல தான் பிராந்தியங்களாக பிரிக்கப்பட்டு உள்ளது.
1. பஞ்சாப் - பாகிஸ்தானின் "Powerhouse" என அழைக்கப்படுகிறது. இதன் தலைநகர் லாகூர், மக்கள் தொகை 127,688,922 , பரப்பளவு 205,344 சதுர கிலோமீட்டர், இங்கே பஞ்சாபிகளே அதிகம் இருக்கின்றனர். இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள், சீக்கியர்களும் இங்கே உள்ளனர். பாகிஸ்தானில் நல்ல வளர்ச்சி பெற்ற மாநிலம் இது. எனவே அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் ஆதிக்கம் செலுத்தும் மாநிலமாக இருக்கிறது.
2. சிந்து : இதனை பாகிஸ்தானின் Financial Hub என அழைக்கின்றனர். இதன் தலைநகர் கராச்சி, மக்கள் தொகை 55,696,147 , இதன் பரப்பளவு 140,914 சதுர கிலோமீட்டர், சிந்தி வகை மக்களே அதிகம் உள்ளனர், முஹாஜிர்கள், பலோசிஸ்தானியர்கள் மற்றும் இந்துக்கள் , கிறிஸ்துவர்கள் சிறுபான்மையினராக உள்ளனர்.
3. கைபர் பக்துன்குவா : இதன் தலைநகர் பெஷாவர் ஆகும், மக்கள் தொகை 40,856,097 , பரப்பளவு 101,741 சதுர கிலோமீட்டர். இங்கே பஸ்தூன் வகை மக்கள் அதிகம் உள்ளனர். பொருளாதார ரீதியாக வளர்ச்சி பெறவில்லை, ஆப்கானிஸ்தானுக்கு அருகிலேயே உள்ளது. இங்கே தரமான கல்வியும் சுகாதார வசதியும் இல்லை என்பது மக்களின் புகாராக உள்ளது.
4. பலுசிஸ்தான்: இதன் தலைநகர் குவெட்டா, மக்கள் தொகை 14,894,402 , பரப்பளவு 347,190 சதுர கிலோமீட்டர். இங்கே பலுசிஸ்தானியர்கள் அதிகமாக உள்ளனர். எரிவாயு, கனிமவளங்கள் போன்ற இயற்கை வளங்கள் நிறைந்த ஒரு பகுதி .
5. கில்கிட் - பல்டிஸ்தான்: இந்தியா உரிமை கோரும் ஒரு பகுதி இது. இதன் தலைநகர் கில்கிட், மக்கள் தொகை 1,492,924 ஆக உள்ளது. இதன் பரப்பளவு 72,971 சதுர கிலோமீட்டர்கள். இங்கே ஷியா, சன்னி பிரிவு இஸ்லாமியர்களும், ஷினா, பல்டி பிரிவு மக்களும் இருக்கின்றனர். உள்கட்டமைப்பு மற்றும் எந்த ஒரு வளர்ச்சி திட்டத்தையும் பாகிஸ்தான் அரசு இங்கே மேற்கொள்ளவில்லை. 1947ஆம் ஆண்டு பாகிஸ்தான் முறைகேடாக காஷ்மீரின் சில பகுதிகளை ஆக்கிரமிப்பு செய்தது. அதில் இருந்த கில்கிட் - பல்டிஸ்தான் பகுதி தான் தனி மாநிலமாக மாற்றப்பட்டது. இது இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் பகுதியுடன் இணைந்தது என இந்தியா உரிமை கோருகிறது.
6. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்: இதன் தலைநகர் முஸாஃபர்பாத், மக்கள் தொகை 2017ஆம் ஆண்டு நிலவரப்படி 4,045,366. பரப்பளவு 13,297 சதுர கிலோமீட்டர்கள். இங்கே காஷ்மீரி இஸ்லாமியர்களே அதிகம் உள்ளனர், பஹாரிஸ் மற்றும் குஜ்ஜார்களும் உள்ளனர். உள்கட்டமைப்பு வசதி இல்லை, பொருளாதார வளர்ச்சி இல்லை என்ற குறைபாடு இருக்கிறது. 1947ஆம் அண்டு பாகிஸ்தான் முறைகேடாக இதனை ஆக்கிரமிப்பு செய்து கொண்டது.
More From GoodReturns

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!



Click it and Unblock the Notifications