இந்த மனசு தான் சார் கடவுள்: வாரன் பஃபெட் சொத்துக்கள் யாருக்கு செல்கிறது தெரியுமா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவர் வாரன் பஃபெட் என்பதும் அவர் தனது சொத்தில் பெரும் பகுதியை நன்கொடையாக கொடுத்து உள்ளார் என்பதும் அனைவரும் அறிந்ததே.

 

பங்குவர்த்தகத்தில் புலி என்று கூறப்படும் வாரன் பஃபெட் உலகில் உள்ள அனைத்து பங்கு வர்த்தகர்களுக்கும் குருவாக போற்றப்பட்டு வருகிறார்.

எஸ்பிஐ வாடிக்கையாளரா நீங்க.. 5 முக்கிய சேவைகளை போனிலேயே பெறலாம்.. எப்படி தெரியுமா?

இந்த நிலையில் அவர் தனது இறப்புக்குப் பின் தனது சொத்துக்களின் ஒரு குறிப்பிட்ட பகுதி உலகிலுள்ள ஒவ்வொரு குழந்தைகளுக்கும் சேர வேண்டும் என்று அவர் கூறியிருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

வாரன் பஃபெட்

வாரன் பஃபெட்

உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான வாரன் பஃபெட் தனது இறப்பிற்கு பிறகு தனது சொத்துக்களில் $96 பில்லியன் டாலர்களை உலகம் முழுவதும் உள்ள ஒவ்வொரு குழந்தைகளுக்கும் சேரும்படி ஏற்பாடு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

சமூக சேவை

சமூக சேவை

உலகின் பல பணக்காரர்கள் சமூக சேவைக்காக ஒரு குறிப்பிட்ட தொகையை செலவு செய்து வந்தாலும் வாரன் பஃபெட் அவர்கள் சமூக சேவைக்காக செய்யும் தொகைக்கு கணக்கே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அவருடைய குடும்பத்தினரும் அவரது இந்த முடிவுக்கு பெரும் ஒத்துழைப்பு தருகின்றனர் என்பதும் அதனால் அவரது மதிப்பு உலகம் முழுவதும் உயர்ந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்
 

விளம்பரம்

ஒரு சில குறிப்பிட்ட சதவீத பணத்தை நன்கொடை செய்துவிட்டு பெரும் விளம்பரம் தேடிக்கொள்ளும் கோடீஸ்வரர்கள் மத்தியில் வாரன் பஃபெட் தனது சொத்து மதிப்பின் பெரும்பகுதியை சமூக சேவைக்காக நன்கொடை செய்து விட்டு அதை எந்தவித விளம்பரமும் செய்யாமல் உள்ளார்.

$96 பில்லியன்

$96 பில்லியன்

இந்த நிலையில் வாரன் பஃபெட் தனது மரணத்திற்குப் பின்னர் தனது $96 பில்லியன் டாலர் சொத்துக்களை உலகம் முழுவதும் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் சரிசமமாகப் பிரித்துக் கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

5வது இடம்

5வது இடம்

கடந்த ஜூன் மாத நிலவரப்படி வாரன் பஃபெட் அவர்களின் சொத்து மதிப்பு 113 பில்லியன் டாலர் என்பதும் உலக கோடீஸ்வரர் பட்டியலில் அவர் 5வது இடத்தில் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொண்டு நிறுவனங்கள்

தொண்டு நிறுவனங்கள்

91 வயதான வாரன் பஃபெட் தனது பங்குகளில் 85 சதவீதத்தை தொண்டு நிறுவனத்துக்கு வழங்குவதாக ஏற்கனவே உறுதி அளித்திருந்தார். வாரன் பஃப்பெட் வாரிசுகளான ஹோவர்ட், சூசன் மற்றும் பீட்டர் ஆகியோர் நடத்தும் தொண்டு நிறுவனங்களுக்கும் 7 லட்சத்து 70 ஆயிரம் பங்குகளை அவர் வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தானம்

தானம்

2010 ஆம் ஆண்டில் அவர் தனது சொத்தில் பெரும் பகுதியை ஏழைகளுக்கு தானமாக அளிக்கப்படும் என்று அறிவித்தார். அதில் அவரது குடும்பத்தைச் சேர்ந்த நான்கு நிறுவனங்களின் சொத்துகளும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

93வது பிறந்த நாள்

93வது பிறந்த நாள்

இந்த நிலையில் வரும் ஆகஸ்ட் 30ஆம் தேதி வாரன் பஃப்பெட் தனது 93வது பிறந்த நாளை கொண்டாட இருக்கும் நிலையில் தான் இறப்பதற்கு முன்பே அனைத்து நன்கொடை நடவடிக்கைகளையும் முடித்துவிட வேண்டுமென திட்டமிட்டுள்ளார்.

குழந்தைகளுக்கு சொத்து

குழந்தைகளுக்கு சொத்து


இந்த நிலையில் வாரன் பஃபெட் அவர்களின் நன்கொடைக்கான பல்வேறு யோசனைகளில் ஒன்று உலக குழந்தைகளுக்கான சேமிப்பு திட்டம். உலகம் முழுவதிலும் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் அவருடைய சொத்தின் ஒரு பகுதி சேர வேண்டும் என்பதே அவருடைய கனவு. இதனை நடைமுறைப்படுத்தும் பணியில் வாரன் பஃப்பெட் இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியதோடு அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Warren Buffet donate his $96 billion to all children in world!

Warren Buffet donate his $96 billion to all children in world! | இந்த மனசு தான் சார் கடவுள்: வாரன் பஃபெட் சொத்துக்கள் யாருக்கு செல்கிறது தெரியுமா?
Story first published: Wednesday, July 6, 2022, 9:49 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X