வாரன் பஃபெட் உலகின் பெரும் பணக்காரர் என்பது அனைவருக்கும் தெரியும், அவருடைய berkshire hathaway சாம்ராஜ்ஜியத்தை தனது சாமர்த்தியமான முதலீட்டின் வாயிலாக சிறு சிறு பகுதியாகழும், அதன் பின்பு சிறு சிறு நிறுவனங்களை கைப்பற்றி இன்று 136 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி வருகிறார்.
இந்த வாரன் பஃபெட் பல ஸ்மார்ட்டான முதலீடுகளை செய்திருந்தாலும், ஒரு சாக்லேட் நிறுவனத்தை வாங்கிய கதை பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இதுக்குறித்து சமுகவலைத்தளத்தில் நியன்டர் செல்வன் பதிவு செய்துள்ளார். இந்த பதிவில்

1970களில் சீஸ் சாக்லட் (sees chocolate) எனும் அந்த சாக்லேட் கம்பெனி விற்பனைக்கு வந்தது. ஒரு குடும்பம் நடத்தி வந்த சிறிய கம்பனி. வாரிசுகள் அதை விற்க முடிவு எடுத்தார்கள்.
ஹெர்ஷிஸ், காட்பரிஸ், மார்ஸ் மாதிரி பெரிய கம்பெனிகளுடன் இந்த சின்ன கம்பெனி எப்படி போட்டி இட்டது? யானைகள் வாழும் காட்டில் எறும்பும் வாழ்வது போல்தான். மிக தரமான சாக்லட்.. உள்ளுரில் கிடைக்கும் பாதாம் மாதிரி மூலப்பொருட்களை வைத்து தயாரித்தார்கள்.
அவர்களே சொந்தமாக கலிபோர்னியா மாநிலத்தில் கடைகளை நடத்தி விற்றார்கள். வழக்கமாக வாங்கும் வாடிக்கையாளர்கள் தான் தொடர்ந்து வாங்கினார்கள். ஆனால் அவர்கள் பிராண்டுக்கு மிக விசுவாசமாக இருந்தார்கள்.
ஆனால் கம்பெனியை விரிவாக்கம் செய்ய பெரிய அளவில் பணம் வேண்டும். அதை விட கம்பெனியை விற்றுவிடலாம் என வாரிசுகள் முடிவெடுத்தார்கள். அதை வாங்க நெப்ராஸ்கா மாநிலத்தில் இருந்து ஒருவர் வந்தார். அவர் தான் வாரன் பஃப்பட்.
2.5 கோடி டாலர்கள் கொடுத்து கம்பெனியை வாங்கினார். அதன்பின் அவர் செய்த முதல் வேலை கம்பெனியை விரிவாக்கம் எதுவும் செய்யவேண்டாம் என்பதுதான். "மிக விசுவாசமான வாடிக்கையாளர்கள், நல்ல தொழிலாளிகள், நல்ல பிராண்டு...இதை நாம் விரிவாக்கம் செய்தால் அந்த சின்ன லோக்கல் பிராண்டு எனும் அட்ராக்சன் மறைந்துவிடும். பெரிய கம்பெனிகளுக்கு இருக்கும் இயந்திரதன்மை வந்துவிடும்.
எந்த காரணம் கொண்டும் உற்பத்தியை பெருக்க வேண்டாம், விலையை குறைக்க வேண்டாம். பெரிய கம்பெனிகளுடன் மோத வேண்டாம். சின்ன லெவலிலேயே கம்பெனியை தொடர்ந்து நடத்துங்கள்...கம்பெனியை நவீனப்படுத்த ஒரு 3 கோடி டாலர் தருகிறேன்..."

அவ்வளவுதான். அதன்பின் அதே மாதிரி சின்ன லெவலில் கம்பெனி கலிபோர்னியாவில் தொடர்ந்து இயங்கி வருகிறது. அதன் வாடிக்கையாளர்களுக்கு கம்பெனி கைமாறியதே தெரியாது.
5.5 கோடி டாலர் செலவில் மொத்தமாக வாங்கி விரிவாக்கம் செய்த வாரன் பஃப்பட் அந்த கம்பெனியில் இருந்து மட்டும் இதுவரை 200 கோடி டாலர் லாபம் பார்த்துள்ளார். அதுமட்டும் அல்ல. அந்த கம்பெனியின் லாபத்தை அப்படியே கொக்கோகோலா பங்குகளில் போட்டு கொக்கோகோலா பங்குகள் மூலம் 2000 கோடி டாலர் சம்பாதித்துள்ளார்.
ஆறை அறுபது ஆக்குவது என பழமொழி இருக்கு. ஆனால் ஐந்து கோடியை இரண்டாயிரம் கோடியாக மாற்றியது தான் பஃபெட்டின் மாஜிக்.


Click it and Unblock the Notifications