கோடி கோடியா சம்பாதிச்சாலும் மக்களுக்கு கொடுக்க மனசு வேணும்.. வாரன் பஃபெட் டாப்பு தான்..!

அமெரிக்கா: உலக அளவில் பெரும் பணக்காரர்களாக இருப்பவர்கள் பல்வேறு மக்கள் நல பணிகளுக்காக தாங்கள் சம்பாதித்த தொகையின் ஒரு கணிசமான பகுதியை நன்கொடையாக வழங்குகின்றனர். சிலர் கல்வி சம்பந்தப்பட்ட சேவைகளுக்காகவும், சிலர் மருந்து சம்பந்தப்பட்ட ஆராய்ச்சிகளுக்காகவும், ஒரு சிலர் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான பணிகளுக்காகவும் தங்களுடைய வருமானத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை நன்கொடையாக வழங்குகின்றனர்.

அந்த வகையில் அமெரிக்காவை சேர்ந்த பணக்காரர்களில் யாரெல்லாம் கடந்த ஆண்டில் பெருமளவிலான தொகையை நன்கொடையாக வழங்கியுள்ளனர் என்பது குறித்து போர்ப்ஸ் பத்திரிக்கை ஒரு பட்டியலை வெளியிட்டுள்ளது. இதன்படி அமெரிக்காவை சேர்ந்த 25 பணக்காரர்கள் கடந்த டிசம்பர் 30ஆம் தேதி நிலவரப்படி 241 பில்லியன் டாலர்களை நன்கொடையாக வழங்கியுள்ளனர். இது அதற்கு முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது 30 பில்லியன் டாலர்கள் அதிகமாகும்.

கோடி கோடியா சம்பாதிச்சாலும் மக்களுக்கு கொடுக்க மனசு வேணும்.. வாரன் பஃபெட் டாப்பு தான்..!

புகழ்பெற்ற முதலீட்டாளரான வாரன் பஃபெட் தன்னுடைய வாழ்நாளில் 62 பில்லியன் டாலர்களை நன்கொடையாக வழங்கியுள்ளார். அவருடைய சொத்து மதிப்பில் இது 30 சதவீதம் என சொல்லப்படுகிறது. கடந்த ஆண்டில் மட்டும் இவர் 5.3 பில்லியன் டாலர்களை நன்கொடையாக வழங்கி இந்த பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார்.

பில்கேட்ஸ் மற்றும் மெலிந்தா கேட்ஸ் தங்களுடைய வாழ்நாளில் மொத்தமாக 47.7 பில்லியன் டாலர்களை நன்கொடையாக வழங்கியுள்ளனர். கடந்த ஆண்டில் 5.2 பில்லியன் டாலர்களை நன்கொடையாக வழங்கியுள்ளனர். இவர்கள் பெரும்பாலும் மருந்து சம்பந்தப்பட்ட ஆராய்ச்சிகளுக்கும் ,வறுமை ஒழிப்பு திட்டங்களுக்கும் பணத்தை வழங்கியுள்ளனர்.

அமெரிக்காவை சேர்ந்த ஜார்ஜ் சோரோஸ் தன்னுடைய வாழ்நாளில் 23 பில்லியன் டாலர்களையும் கடந்த ஓராண்டில் 1.7 பில்லியன் டாலர்களையும் நன்கொடையாக வழங்கி இருக்கிறார். மனித உரிமைகள் பாதுகாப்பு மற்றும் ஜனநாயக பாதுகாப்பு பணிகளில் ஈடுபடும் அறக்கட்டளைகளுக்கு இவர் நன்கொடை வழங்கி இருப்பது தெரிய வருகிறது.

ப்ளூம்பெர்க் நிறுவனத்தின் மைக்கேல் ப்ளூம்பெர்க் கடந்த ஆண்டு 3.7 பில்லியன் டாலர்களை நன்கொடையாக வழங்கி இருக்கிறார். பருவநிலை மாற்ற பாதிப்புகளை தடுப்பதற்கான நடவடிக்கைகள், கல்வி மற்றும் மருத்துவம் சார்ந்த பணிகளுக்கு இவர் நன்கொடை வழங்கியுள்ளார்.

பேஸ்புக் உரிமையாளர் மார்க் ஜக்கர்பர்க் கடந்த ஆண்டு 620 மில்லியன் டாலர்களை நன்கொடையாக வழங்கியுள்ளார். அறிவியல் மற்றும் கல்வி சம்பந்தப்பட்ட பணிகளுக்காக இவர் பணத்தை வழங்கியிருப்பது தெரியவருகிறது.

அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் கடந்த ஆண்டில் 660 மில்லியன் டாலர்களையும் தன்னுடைய வாழ்நாளில் 4.1 பில்லியன் டாலரையும் பல்வேறு நலப்பணிகளுக்காக நன்கொடையாக வழங்கியுள்ளார். பருவநிலை மாற்ற பாதிப்புகளை தடுப்பது, வீடு இல்லாத நபர்களுக்கு வீட்டு வசதி ஏற்படுத்தி தருவது மற்றும் கல்வி பணிகளுக்காக அவர் நன்கொடை வழங்குகிறார்.

கூகுள் இணை நிறுவனர் செர்ஜி பிரின் கடந்த ஆண்டு 890 மில்லியன் டாலர்களை நன்கொடையாக வழங்கி இருக்கிறார். இவருடைய பணமானது பார்க்கின்சன் நோய்க்கு எதிரான மருந்து ஆராய்ச்சி மற்றும் பருவநிலை மாற்ற பாதிப்புகளை தடுக்கும் பணிகளுக்கு என வழங்கப்பட்டுள்ளது.

Story written by: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+