வாரன் பஃபெட் - கோகோ கோலா முதலீட்டு கதை.. இதை பாலோ செய்தால் நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம்..!!

உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான வாரன் பஃபெட் தன்னுடைய பெர்க்ஷயர் ஹாத்வே சாம்ராஜ்ஜியத்தைப் பங்கு முதலீட்டு வாயிலாக உருவாக்கி தற்போது, இந்நிறுவனத்தின் கீழ் 100 பில்லியன் டாலர் மதிப்பிலான பல்வேறு வர்த்தகங்களும், பல முன்னணி நிறுவன பங்குகளும் உள்ளது. இதில் முக்கியமான ஒரு பங்கு கோகோ கோலா.

வாரன் பஃபெட்-ன் கோகோ கோலா முதலீட்டில் இருந்து அனைத்து பங்குச்சந்தை முதலீட்டாளர்களும் அறிந்துகொள்ள வேண்டிய டிரிக்ஸ் ஒன்று உள்ளது. வாரன் பஃபெட்-ன் கோகோ கோலா முதலீட்டு ஐடியா-வை பயன்படுத்தினால் நீங்க மட்டும் இல்ல உங்கள் பிள்ளைகளும், பேரப்பிள்ளைகளும் பெரும் கோடீஸ்வரராக இருக்க முடியும், இதோடு தொடர்ந்து பல லட்சங்களை வருமானமாகப் பெற முடியும்.

வாரன் பஃபெட் - கோகோ கோலா முதலீட்டு கதை.. இதை பாலோ செய்தால் நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம்..!!

பெரும்பாலான பங்கு முதலீட்டாளர்கள் புலம்பும் விஷயம், அதிகம் லாபம் தரும் பங்குகளை எப்படிக் கண்டுப்பிடிப்பது எப்படி என்பது தான், ஆனால் நீண்ட கால அடிப்படையில் குறிப்பாக அடுத்த 20 முதல் 60 வருடம் வரையில் தொடர்ந்து வளரக் கூடிய நிறுவனம் அல்லது துறையைக் கட்டாயம் கணித்துவிட முடியும்.

இதைத் தான் வாரன் பஃபெட் 30 ஆண்டுகளுக்கு முன்பு செய்தார், 1989-90களில் கோகோ கோலா நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்தார். தற்போது இவருடைய முதலீடு 10 மடங்கிற்கு உயர்ந்துள்ளது, 15 ஆண்டுகளுக்கு முன்பு கோகோ கோலா பங்குகள் 45 டாலர் அளவீட்டைத் தொட்டது.

ஆனால் கடந்த 15 வருடத்தில் கோகோ கோலா பங்குகள் தொடர்ந்து 30 முதல் 45 டாலர் விலையிலேயே வர்த்தகமாகி வருகிறதே தவிர உயரவில்லை. பெரும்பாலான முதலீட்டாளர்கள் இந்தச் சூழ்நிலையில் கோகோ கோலா பங்குகளை விற்கத் தான் முடிவு செய்வார்கள்.

ஆனால் இங்கு தான் வாரன் பஃபெட் எல்லோரை விடவும் வித்தியாசப்படுகிறார். கடந்த 30 ஆண்டுகளில் வாரன் பஃபெட் ஒரு கோகோ கோலா பங்கைக் கூட விற்கவில்லை. இதற்கு முக்கியமான காரணம் உண்டு.

1989 ஆம் ஆண்டு வாரன் பஃபெட் சுமார் 1 பில்லியன் டாலர் தொகையை முதலீடு செய்து கோகோ கோலா பங்குகளை வாங்கினார். இவரின் முதலீடு தற்போது 10 மடங்கிற்கு மேல் உயர்ந்துள்ளது ஒரு பக்கம் இருந்தாலும், மறுபக்கம் கோகோ கோலா தனது முதலீட்டாளர்களுக்குத் தொடர்ந்து டிவிடென்ட் அளித்து வருகிறது.

கடந்த வருடம் மட்டுமே கோகோ கோலா சுமார் 600 மில்லியன் டாலர் அளவிலான டிவிடென்ட் வருமானத்தை வாரன் பஃபெட் பங்குகளுக்குக் கொடுத்துள்ளது. இதை விட வேறு என்ன வேண்டும், 1 பில்லியன் டாலர் முதலீட்டுக்கு வருடம் 660 மில்லியன் டாலர் வருமானம் என்றால் 60 சதவீத வட்டி பாஸ்.

லார்ஜ் கேப் பங்குகளில் முதலீடு செய்வது மூலம் நீண்ட கால வளர்ச்சியை உறுதி செய்ய முடியும், இதேபோல் பங்கு விலை பெரிய அளவில் உயரவில்லை என்றாலும் தொடர்ந்து 4-5 சதவீதம் என வருடாந்திர உயர்வையும், அதிகப்படியான டிவிடென்ட் வருமானத்தைப் பெற முடியும்.

இத்தகைய பங்குகள் தான் உங்கள் பிள்ளைகள், பேர குழந்தைகளுக்காக நீங்க முதலீடு செய்ய வேண்டிய பங்குகள். இதை ஆங்கிலத்தில் nest egg முறை என்பார்கள். உதாரணமாக உங்கள் தாத்தா இந்தியாவின் ஐடி துறையின் வளர்ச்சியைக் கணக்கிட்டு 20 வருடத்திற்கு முன்பு ஒரு 10000 ரூபாய்க்கு டிசிஎஸ், இன்போசிஸ் பங்குகளை வாங்கியிருந்தால் உங்களுடைய நிலைமையை இப்போது யோசித்துப் பாருங்க.

உங்க தாத்தா இத்தகைய முதலீட்டை யோசிக்காமல் இருந்திருக்கலாம். ஆனால் நீங்க மிஸ் பண்ணிடாதீங்க, உங்கள் பிள்ளைகளும், பேரப்பிள்ளைகளும் கோடீஸ்வரராகும் வாய்ப்பு உங்கள் கையில் உள்ளது. இதேபோல் இத்தகைய பங்குகளை விற்கக் கூடாது என்பதையும் உங்கள் பிள்ளைகளுக்கு ஸ்டிரிக்ட் ஆர்டராக போட்டுவிட்டால் எவ்விதமான பிரச்சனையும் இல்லை.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+