உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான வாரன் பபெட் தனது பெர்க்ஷயர் ஹாத்வே சாம்ராஜ்ஜியத்தை சொந்தமாக உருவாக்கியது மட்டும் அல்லாமல், இளம் வயதில் இருந்தே பங்கு முதலீட்டு வாயிலாக அதிகப்படியான பணம் சம்பாதித்து அதன் மூலம் பல நிறுவனங்களை வாங்கி தற்போது பெர்க்ஷயர் ஹாத்வே நிறுவனத்தின் கீழ் அவருடைய முதலீடு, வர்த்தகம், கைப்பற்றிய நிறுவனம் என அனைத்தும் நிர்வாகம் செய்யப்படுகிறது.
பெர்க்ஷயர் ஹாத்வே தலைவரான வாரன் பபெட் பெரும் பணக்காரர் என்பதில் மட்டும் ஸ்பெஷல் இல்லை, இவர் செய்யும் நன்கொடை பெரும் பணக்காரர்களை வியக்க வைத்து வருகிறது. 2006 முதல் பில் கேட்ஸ் உடன் இணைந்து வாரன் பபெட் பெரும் தொகையை அமெரிக்க மக்களின் நலனுக்காகவும், உலக நாடுகளுக்காகவும் நன்கொடை மூலம் செலவிடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் வாரன் பபெட் புதிதாக 4.64 பில்லியன் டாலர் மதிப்பிலான பெர்க்ஷயர் ஹாத்வே பங்குகளை ஐந்து தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாக அளித்துள்ளார். இதன் மூலம் 2006 முதல் வாரன் பபெட் செய்த மொத்த நன்கொடை அளவு 51 பில்லியன் டாலரை தாண்டுகிறது.
போர்ப்ஸ் பில்லியனர்கள் பட்டியலின் படி வாரன் பபெட் சுமார் 117.3 பில்லியன் டாலர் அளவிலான சொத்து மதிப்புடன் உலகளவில் 6வது பெரும் பணக்காரராக உள்ளார். 92 வயதாகும் வாரன் பபெட் இதுவரையில் கொடுத்த நன்கொடையில் இதுவே அதிகமானது. இந்த முறை வாரன் பபெட் பெர்க்ஷயர் ஹாத்வே நிறுவனத்தின் 13.7 மில்லியன் கிளாஸ் B பங்குகளை ஐந்து தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாக கொடுத்துள்ளார்.
இந்த பெரும் நன்கொடையில் வாரன் பபெட், பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளைக்கு 10.45 மில்லியன் பங்குகளை கொடுத்துள்ளார். வாரன் பபெட்-ன் 51 பில்லியன் டாலர் நன்கொடையில் 39 பில்லியன் டாலருக்கும் அதிகமான பங்குகளை இந்த அறக்கட்டளைக்கு அளித்துள்ளார்.
அவர் தனது மறைந்த முதல் மனைவிக்காக பெயரிடப்பட்ட சூசன் தாம்சன் பஃபெட் அறக்கட்டளைக்கு 1.05 மில்லியன் பங்குகளை நன்கொடையாக வழங்க உள்ளார். மேலும் 2.2 மில்லியன் பங்குகளை அவரது பிள்ளைகளான ஹோவர்ட், சூசன் மற்றும் பீட்டர் தலைமையில் நிர்வாகம் செய்யப்படும் தொண்டு நிறுவனங்களிடையே சமமாகப் பிரித்து அளித்துள்ளார். இந்த 3 தொண்டு நிறுவனங்களின் பெயர் ஹோவர்ட் ஜி. பஃபெட் அறக்கட்டளை, ஷெர்வுட் அறக்கட்டளை மற்றும் NoVo அறக்கட்டளை ஆகும்.
வாரன் பபெட் மற்றும் பில் கேட்ஸ், உலக பணக்காரர்கள் மத்தியில் Giving Pledge என்ற கொள்கையில் முன்னோடியாக உள்ளனர். இவ்விருவரை தொடர்ந்து மைக்கேல் ப்ளூம்பெர்க், லேரி எலிசன், கார்ல் இகான், எலான் மஸ்க் மற்றும் மார்க் ஜுக்கர்பெர்க் போன்ற 240 க்கும் மேற்பட்ட பணக்காரர்கள் தங்கள் செல்வத்தில் பாதியையாவது நன்கொடையாக அளிக்க வேண்டும் என முடிவு செய்துள்ளனர்.
வாரன் பபெட் பெர்க்ஷயர் ஹாத்வே நிறுவனத்தில் வைத்திருந்த பங்குகளில் 50 சதவீதத்திற்கும் அதிகமாக நன்கொடை அளிக்கப்பட்டு உள்ள வேளையிலும் தற்போது அவர் பெயரில் இருக்கும் 15 சதவீத பங்குகளின் மதிப்பு 112.5 பில்லியன் டாலராகும். berkshire hathaway பங்கு மதிப்பு வியாழக்கிழமை வர்த்தகத்தில் 0.78 சதவீதம் சரிந்து 5,11,480 அமெரிக்க டாலராக உள்ளது. இந்நிறுவனத்தின் மொத்த சந்தை மதிப்பு 740 பில்லியன் டாலராக உள்ளது.
More From GoodReturns

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரில் டிரம்ப் போடும் கணக்கே வேற..! குறி வச்சது கமேனிக்கு இல்ல..! வெளிவரும் உண்மை..!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!



Click it and Unblock the Notifications