ரூ.7250 கோடியை நன்கொடையாகக் கொடுத்த வாரன் பஃபெட்.. வாவ், ஆனால் யாருக்கு தெரியுமா..?

உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான வாரன் பஃபெட் பங்கு முதலீட்டின் வாயிலாகப் பெர்க்ஷயர் ஹாத்வே என்னும் பெரும் வர்த்தகச் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியது மட்டும் அல்லாமல் தான் சம்பாதித்த பெரும் பகுதி சொத்துக்களை நன்கொடை அளிப்பது மூலம் உலகளவில் பிரபலம் அடைந்தார்.

இந்த நிலையில் அமெரிக்காவில் வியாழக்கிழமை தேங்க்ஸ் கிவ்விங், பிளார் ஃப்ரைடே பண்டிகைகள் கொண்டாடப்படும் வேளையில் 4 நாட்கள் ஒட்டுமொத்த நாடும் விடுமுறையில் உள்ளது. தேங்க்ஸ் கிவ்விங் நாளில் குடும்பத்தில் இருப்பவர்கள் அனைவரும் ஓரே இடத்தில் கூடிக் கொண்டாடுவது வழக்கம்.

ரூ.7250 கோடியை நன்கொடையாகக் கொடுத்த வாரன் பஃபெட்.. வாவ், ஆனால் யாருக்கு தெரியுமா..?

இந்த முக்கியமான நாளில் வாரன் பஃபெட் மிகப்பெரிய தொகையை நன்கொடை அளித்தது மட்டும் அல்லாமல் தனது 93 வயதான வாரன் பஃபெட் தனது சொத்துக்கள் யாருக்கு என்பதையும், உயில் எப்படி இருக்கும் என்பதையும் வெளிப்படையாகத் தெரிவித்தார்.

வாரன் பஃபெட் தேங்க்ஸ் கிவ்விங் நாளில் அவருக்குச் சொந்தமான 876 மில்லியன் டாலர் மதிப்புள்ள பெர்க்ஷயர் ஹாத்வே பங்குகளை 3 அறக்கட்டளைகளுக்கு நன்கொடையாக வழங்கினார். சுமார் 7,250 கோடி ரூபாய் மதிப்புள்ள பெர்க்ஷயர் ஹாத்வே பங்குகளைத் தனது பிள்ளைகளால் நடத்தப்படும் தொண்டு நிறுவனங்களுக்குப் பரிசாக அளிப்பதாக அறிவித்தார்.

வாரன் பஃபெட் தேங்க்ஸ் கிவ்விங் முன்னிட்டு 2.4 மில்லியன் கிளாஸ் B பெர்க்ஷயர் ஹாத்வே பங்குகளை நன்கொடையாகக் கொடுத்துள்ளார். இதில் 1.5 மில்லியன் பங்குகள் மறைந்த அவரது மனைவியின் பெயரால் நடத்தப்படும் சூசன் தாம்சன் பஃபெட் அறக்கட்டளைக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து 0.9 மில்லியன் பங்குகள் அவரது குழந்தைகளால் மேற்பார்வையிடப்படும் மூன்று தொண்டு நிறுவனங்களிடையே சமமாகப் பிரித்து வழங்கப்பட்டு உள்ளது. இந்த 3 அறக்கட்டளைகள் பெயர் ஷெர்வுட் அறக்கட்டளை, தி ஹோவர்ட் ஜி. பஃபெட் அறக்கட்டளை மற்றும் நோவோ அறக்கட்டளை ஆகும்.

ரூ.7250 கோடியை நன்கொடையாகக் கொடுத்த வாரன் பஃபெட்.. வாவ், ஆனால் யாருக்கு தெரியுமா..?

வாரன் பஃபெட்-ன் மொத்த சொத்து மதிப்பு 120.8 பில்லியன் டாலர், இந்த வருடம் மட்டும் இவருடைய சொத்து மதிப்பு 13.3 பில்லியன் டாலர் அதிகரித்துள்ளது. 93 வயதான வாரன் பஃபெட் அவரது மரணத்திற்குப் பிறகு மக்களுக்கான தொண்டு பணிகளைச் செய்யும் தொண்டு நிறுவனங்களுக்குத் தனது சொத்துக்களை நன்கொடையாக வழங்குவதாகக் கூறினார்.

கடைசியாக வாரன் பஃபெட் இந்தத் தேங்க்ஸ் கிவிவ்ங் நிகழ்ச்சியில் போது எனது மரணத்திற்குப் பிறகு, எனது சொத்துக்களின் விபரங்கள் திறந்த புத்தகமாக இருக்கும் அரசின் ஆய்வைத் தவிர்ப்பதற்காக, கற்பனை அறக்கட்டளைகளோ அல்லது வெளிநாட்டு நிறுவனங்களோ எதுவும் இருக்காது. இதற்கு மாறாக நான் வசிக்கும் நெப்ராஸ்காவின் ஒமாஹாவில் உள்ள டக்ளஸ் கவுண்டி கோர்ட்ஹவுஸில் தகவல்கள் சமர்ப்பிக்கப்பட்டு மக்கள் அதை எளிதாகத் தெரிந்துகொள்ளக் கூடிய வகையில் இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+