சென்னை: உலகளவில் பல வெற்றிபெற்ற பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு முதலீட்டு குருவாக விளங்குபவர் வாரன் பஃபெட், 30ஆம் தேதி தனது 94 வது பிறந்த நாளை கொண்டாடிய அவர் தனது முதலீட்டாளர்களுக்குக் கொடுத்த கிப்ட் தான் இந்த 4,384,748 சதவீத லாபம்.
இதை விட முக்கியமான விஷயம், வாரன் பஃபெட்-ன் 94வது பிறந்தநாளுக்கு முன்னதாக, அவருடைய பெர்க்ஷயர் ஹாத்வே சாம்ராஜ்ஜியம், அல்ட்ரா-எக்ஸ்குளூசிவ் 1 டிரில்லியன் டாலர் சந்தை மதிப்பீட்டைக் கொண்ட கிளப்பில் இணைந்து பெருமை சேர்த்தது.

1965 முதல் 2023 இறுதி வரை, அமெரிக்கப் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட பெர்க்ஷயர் ஹாத்வேயின் பங்கு 4,384,748 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. இதே காலகட்டத்தில் S&P 500 குறியீடு 31,323 சதவீதம் மட்டுமே வளர்ச்சி அடைந்துள்ளதைப் பார்க்கும் போது வாரன் பஃபெட் பெர்க்ஷயர் ஹாத்வே பங்குகள் பெரும் லாபத்தை கொடுத்துள்ளது.
ஒருவர் 60 ஆண்டுகளுக்கு முன்பு பெர்க்ஷயர் இல் வெறும் 100 டாலர் முதலீடு செய்திருந்தால், இது இப்போது 4.38 மில்லியன் டாலர் மதிப்புடையதாக இருக்கும். இதற்கு மாறாக, S&P 500 குறியீட்டில் 100 டாலர் முதலீடு செய்திருந்தால் இன்று சுமார் 31,323 டாலராக உயர்ந்திருக்கும்.
வாரன் பஃபெட்டின் பிறந்த நாளுக்கு இரண்டு நாட்கள் முன்பு, ஆகஸ்ட் 28 அன்று, பெர்க்ஷயர் ஹாத்வேயின் பங்குகள் அதிரடியாக உயர்ந்தது மூலம் இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு 1 டிரில்லியன் டாலரை தாண்டியது. இது அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட நிறுவனங்களில் முதல் முறையாக ஒரு தொழில்நுட்பமற்ற நிறுவனம் 1 டிரில்லியன் டாலர் சந்தை மதிப்பீட்டைத் தொட்டு உள்ளது.
இந்த சாதனை மூலம் பெர்க்ஷயர் ஹாத்வே நிறுவனம் ஆப்பிள் மற்றும் மைக்ரோசாஃப்ட் போன்ற தொழில்நுட்ப சாம்ராஜ்ஜியங்கள் கொண்ட ஸ்பெஷல் பட்டியலில் சேர்ந்துள்ளது. இவை இரண்டும் $3 டிரில்லியன் மதிப்புக்கு மேல் உள்ளன. என்விடியா, அல்பாபெட், அமேசான் மற்றும் மெட்டா போன்றவை 1 டிரில்லியன் டாலருக்கும் அதிக மதிப்புடைய நிறுவனங்களாக உள்ளது.
அமெரிக்காவில் 1 டிரில்லியன் டாலர் மதிப்பீட்டைப் பெற்ற நிறுவனங்கள் பட்டியலில் பெர்க்ஷயர் ஹாத்வே தான் மிகவும் தாமதமாக அடைந்துள்ளது. பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டு சுமார் 44 ஆண்டுகளுக்குப் பிறகு பெர்க்ஷயர் ஹதவே 1 டிரில்லியன் டாலர் சந்தை மதிப்பீட்டை அடைந்துள்ளது. ஆனால் பேஸ்புக், வாட்ஸ்அப்-ன் தாய் நிறுவனமான மெட்டா வெறும் ஒன்பது ஆண்டுகளில் 1 டிரில்லியன் டாலர் மதிப்பீட்டை தொட்டுள்ளது.
பெர்க்ஷயர் ஹாத்வேயின் ஆண்டு பங்குதாரர்கள் கூட்டத்திற்கு முன்னதாக, முதலீட்டாளர்களுக்கு எழுதிய தனது ஆண்டு கடிதத்தில், வாரன் பஃபெட், இனி முதலீட்டாளர்கள் வானளவில் உயரும் செயல்திறன் இனி தெரியாது என்று முன்கூட்டியே எச்சரித்துள்ளார்.
இருப்பினும், இந்த ஆண்டு பெர்க்ஷயர் ஹாத்வே நிறுவனத்தின் பங்கு 28% உயர்ந்துள்ளது. இது S&P 500 இன் 18% உயர்வைக் காட்டிலும் அதிகமாக இருந்தது. பெர்க்ஷயர் ஹாத்வேயின் கிளாஸ் ஏ பங்குகள் ஒவ்வொன்றும் சுமார் $700,000 ஆக உள்ளன. இது உலகின் மிக விலையுள்ள பங்குகளாகும்.


Click it and Unblock the Notifications