உலகின் நம்பர் ஒன் பணக்காரராக இருக்கக்கூடியவர் எலான் மஸ்க். அண்மையில் அவருக்கு டெஸ்லா நிறுவனம் ஒரு டிரில்லியன் டாலரை சம்பளமாக வழங்குகிறது ஒப்புதல் தெரிவித்தது. ஒரு டிரில்லியன் டாலர் என்றால் இந்திய ரூபாயின் மதிப்பில் 88,000,000,000,000 ரூபாய் ஆகும். எலான் மஸ்கின் இந்த சம்பளம் என்பது உலகம் முழுவதும் பேசு பொருளாக இருக்கிறது.
முதலீட்டு ஜாம்பவான் வாரன் பஃபெட் இந்த சம்பளம் குறித்து தெரிவித்திருக்கும் கருத்து கார்ப்பரேட் உலகில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பங்குச்சந்தை முதலீட்டு ஜாம்பவான் வாரன் பஃபெட். தன்னுடைய சிறுவயதிலிருந்தே பங்குச்சந்தையில் முதலீடு செய்து உலக பணக்காரர்கள் பட்டியலில் இடம் பிடித்தவர்.

வாரன் பஃபெட் எடுக்கக்கூடிய முதலீட்டு முடிவுகள் உலகம் எங்கும் பங்குச்சந்தையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவை. சிறந்த நிறுவனங்களை சரியான தருணத்தில் தேர்ந்தெடுத்து முதலீடு செய்வதில் வாரன் பஃபெட் வல்லவர் . அவர் பெர்க்சையர் ஹேத்வே நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பொறுப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக விலகி இருக்கிறார்.
இந்த சூழலில் நிறுவன பங்குதாரர்களுக்கு கடிதம் எழுதி இருக்கும் வாரன் பஃபெட் தலைமை செயல் அதிகாரிகளின் சம்பளம் குறித்து குறிப்பிட்டு பேசி இருக்கிறார். அவர் மறைமுகமாக எலான் மஸ்கின் ஒரு ட்ரில்லியன் டாலர் சம்பளத்தை சாடியிருக்கிறார் . பல்வேறு நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளின் சம்பளம் அண்மைக்காலமாக பல மடங்கு உயர்ந்து வருகிறது, நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் தங்களை ஒப்பிட்டு பார்த்து தங்களுக்கு அதிக சம்பளம் வேண்டும் என உயர்த்திக் கொண்டே செல்கிறார்கள் எனக் கூறியிருகிறார்.
தலைமை செயல் அதிகாரிகள் எல்லாம் பேராசையாலும் சுயநலத்தாலும் தான் இப்படி செயல்படுகிறார்கள் என தெரிவித்திருக்கும் அவர் தலைமை பொறுப்பில் இருப்பவர்களிடம் பொறாமையும் பேராசையும் கைகோர்த்து நடக்கிறது என சாடி இருக்கிறார்.
வாரன் பஃபெட் பெர்க்சையர் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரியாக 60 ஆண்டுகள் பொறுப்பு வகித்து வருபவர். முன்பு இருந்ததை போல நிலைமை தற்போது இல்லை என கூறியுள்ள அவர் நிறுவனங்களிடம் வெளிப்படை தன்மை வேண்டும் என்பதற்காக தான் தலைமை செயல் அதிகாரிகளின் சம்பளத்தை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்ற விதிமுறை கொண்டு வரப்பட்டது என கூறியுள்ளார்.
ஆனால் அந்த நோக்கமே திசை மாறி போட்டியும் பொறாமையும் பேராசையும் கொண்டதாக தலைமை செயல் அதிகாரிகளை மாற்றிவிட்டது என கூறியுள்ளார். தங்களுடைய சம்பளத்தை அதிகப்படுத்த வேண்டும் என்பதற்காகவே வாரிய இயக்குனர்களில் தங்களுக்கு தேவையானவர்களை தலைமை செயல் அதிகாரிகள் நியமனம் செய்கிறார்கள் நிலைமை கையை மீறி செல்கிறது என அவர் கூறியிருக்கிறார்.
More From GoodReturns

ஈரான் போர்: கதிகலங்கி நிற்கும் தைவான்.. 11 நாட்கள் கெடு..!!

எல்பிஜி தட்டுப்பாட்டுக்கு முடிவு: இந்தியாவுக்கு வரும் 92,700 மெட்ரிக் டன் கேஸ்.. மத்திய அரசு அறிவிப்பு!!

என்னப்பா புது புது பிரச்சனையா கிளம்புது.. ஈரான் போரால் 'இந்த' பொருட்கள் விலை தாறுமாற உயரபோகுது..!!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

ஈரான் போரில் டிரம்ப் போடும் கணக்கே வேற..! குறி வச்சது கமேனிக்கு இல்ல..! வெளிவரும் உண்மை..!

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!

இந்திய மக்களை துரத்தும் புதிய பிரச்சனை.. ஈரான் போர் மூலம் உங்க பர்ஸ்-க்கு வேட்டு..!!

தங்கம் விலை 7 மடங்கு! வெள்ளி விலை 2.5 மடங்கு அதிகரிக்க வாய்ப்பு! ராபர்ட் கியோசாகி அதிரடி கணிப்பு!

சென்செக்ஸ், நிஃப்டியை புரட்டிப்போட்ட 90 நிமிடம்.. என்ன நடந்தது..? முழுக்க முழுக்க மேஜிக்

ஈரான் போரில் பாகிஸ்தானுக்கு மறைமுக பங்கு: வெளிச்சத்திற்கு வந்தது பாகிஸ்தானின் இரட்டை வேடம்!!



Click it and Unblock the Notifications