பங்குச்சந்தை முதலீட்டில் இருக்கும் அனைவரும் ஆச்சரியத்துடன் பார்க்கக்கூடிய ஒரு நபர் தான் வாரன் பஃபெட். 95 வயதான வாரன் பஃபெட் 11 வயது முதலே பங்குச்சந்தை முதலீட்டை தொடங்கியவர். சரியான நேரத்தில் சரியான நிறுவனங்களை தேர்ந்தெடுத்து பங்குச்சந்தை முதலீடு செய்ததன் மூலமே உலக பணக்காரர்கள் பட்டியலில் இடம் பிடிக்கும் அளவிற்கு வளர்ச்சி அடைந்தவர் .
பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு இவர் ஒரு காட் ஃபாதராக அறியப்படுகிறார். 1942 ஆம் ஆண்டில் 11 வயதிலேயே பங்குச்சந்தையில் நுழைந்தவர். சிட்டி சர்வீஸ் என்ற ஒரு நிறுவனத்தில் 114.75 டாலர்கள் மதிப்பிலான பங்குகளை வாங்கி இருந்தார். இதற்காக தன்னுடைய ஆறு வயதில் இருந்தே அவர் பணத்தை சேமித்து வந்ததாக தன்னுடைய புத்தகம் ஒன்றிலேயே குறிப்பிட்டிருக்கிறார் .16 வயது இருக்ம்போது அவரின் பங்குகள் சுமார் 53 ஆயிரம் டாலர்கள் அளவுக்கு உயர்ந்திருந்தன.

படிப்படியாக பங்குச்சந்தை முதலீட்டு நுணுக்கங்களை கற்றுக் கொண்ட அவர் தன்னுடைய 32 வது வயதில் மில்லினியர் ஆனார் 56வது வயதில் பில்லியனியர் ஆனார். உலக பணக்காரர்கள் பட்டியலில் 10ஆவது இடத்தில் இருக்கிறார். உட்கார்ந்த இடத்திலேயே பல கோடிகளை சம்பாதிக்க முடியும் என்பதை நிரூபித்து காட்டியவர்.
1964 ஆம் ஆண்டில் பெர்க்சையர் ஹாத்வே என்ற ஜவுளி நிறுவனத்தில் முதலீடு செய்தார். அப்போது இந்த நிறுவனம் பெரும் நஷ்டத்தில் இருந்தது. இந்த நிறுவனத்தை கையகப்படுத்திய வாரன் பஃபெட் பல துறைகளுக்கும் நிறுவனத்தை விரிவாக்கம் செய்து உலகின் அதிக சொத்து மதிப்பு கொண்ட நிறுவனமாக மாற்றி இருக்கிறார்.
கிட்டதட்ட 60 ஆண்டு காலம் பெர்க்சையர் ஹேத்வே நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பு வகித்து நிறுவனத்தை வழிநடத்தியுள்ளார். நஷ்டத்தில் இருந்த பெர்க்சையர் ஹேத்வே நிறுவனத்தை பணம் கொழிக்கும் இயந்திரமாக மாற்றி காட்டியுள்ளார். வயது மூப்பு காரணமாக தான் இந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். டிசம்பர் 31ஆம் தேதி உடன் அதிகாரப்பூர்வமாக அந்த பதவியில் இருந்து விலகிவிட்டார் .
தற்போது அவருக்கு பதிலாக கிரேக் அபெல் பெர்க்சையர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக பொறுப்பு ஏற்றுக் கொண்டிருக்கிறார். நிர்வாக பொறுப்பில் இருந்து விலகினாலும் செயல் சாராத தலைவராக தொடர்ந்து இவர் நீடிப்பார் என சொல்லப்படுகிறது. தற்போது வாரன் பஃபெட்டின் சொத்து மதிப்பு சுமார் 13 லட்சம் கோடி என சொல்லப்படுகிறது.
கிட்டதட்ட 60 ஆண்டுகளாக வாரன் பஃபெட்டின் தலைமையின் கீழ் செயல்பட்டு வந்த பெர்க்சையர் ஹேத்வே நிறுவனம் இப்போது அவர் இல்லாமல் செயல்பட தொடங்கி இருக்கிறது. ஆனால் நூறு ஆண்டுகளுக்கு இந்த நிறுவனத்தை யாராலும் மிஞ்ச முடியாது என நம்பிக்கையோடு தெரிவித்து இருக்கிறார்.
வாரன் பஃபெட் 11 வயதிலேயே பங்குச்சந்தை முதலீட்டை தொடங்கியவர். 13 வயதிலேயே வருமான வரி கணக்கு தாக்கல் செய்திருக்கிறார் . 14 வயதில் சொந்தமான நிலத்தை வாங்கி அதனை வாடகைக்கு விடுத்து வருமானம் ஈட்டி இருக்கிறார் 17 வயதிலேயே தொழில் முனைவோராக மாறிவிட்டார் . ஆனால் இவ்வளவு சொத்து இருந்தாலும் எளிமை தான் அவரின் அடையாளமாக உள்ளது. 1958 ஆம் ஆண்டு ஒமாஹாவில் 31 ஆயிரம் டாலருக்கு ஒரு வீட்டை வாங்கினார் . இன்றும் அந்த வீட்டில் தான் அவர் குடி இருக்கிறார் எளிமையான வாழ்க்கை வாழ்வதே அவருக்கு மிகவும் பிடிக்கும்.
பங்குசந்தை முதலீட்டிலும் கூட தனக்கென எளிமையான வழிமுறைகளை வகுத்து அதன்படி செயல்பட்டவர். தனக்கென ஒரு இலக்கை நிர்ணயித்து அதற்காக தன்னுடைய அறிவை வளர்த்து கொண்டு தொடர்ந்து செயல்பட்டு கொண்டே இருப்பவர்களை யாராலும் அசைத்து கூட பார்க்க முடியாது என்பதற்கு உதாரணமாக இருக்கிறார்.
More From GoodReturns

ரூ.666 இருந்தால் போதும் ரூ.1 கோடி இலக்கை எட்டலாம்…!! அட இவ்வளவு ஈஸியான வழி இருக்கா?

ரூ.1 லட்சத்துக்கு கீழ் தங்கமே வாங்க முடியாதா? குறைந்த விலையில் தங்கம் வாங்க வழியே இல்லையா?

அப்புறம் பாத்துக்கலாம்னு அசால்ட்டா இருக்காதீங்க! 5 வருஷம் லேட் பண்ணா ரூ3கோடி காலி.. SIP ரகசியம்?

கிணற்றில் போட்ட கல்லு போல இருக்கும் வெள்ளி: இப்போது முதலீடு செய்தால் லாபம் கிடைக்குமா?

3 ஆண்டுகளில் 740% வளர்ச்சி அடைந்த மல்டிபேக்கர் பங்கு: இப்போது முதலீடு செய்யலாமா?

மீண்டும் இந்திய பங்குச்சந்தையை நோக்கி வரும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! இனியாவது சந்தை ஏறுமா?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!



Click it and Unblock the Notifications