பார்மா துறையில் இறங்கிய வாஷிங் பவுடர் நிர்மா பிராண்ட்..!!

“வாஷிங் பவுடர் நிர்மா. வாஷிங் பவுடர் நிர்மா” இது 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட்டான விளம்பர பாடல். துணி துவைக்க பயன்படுத்தப்படும் பவுடரை விற்பனை செய்து பிரபலமடைந்த நிர்மா நிறுவனம் தற்போது மருந்து நிறுவனமாக மாறியுள்ளது தெரியுமா?

கடந்த 1970களில் குஜராத்தை சேர்ந்த கர்சன்பாய் படேல் மக்களுக்கு குறைந்த விலையில் எளிதாக கிடைக்க கூடிய துணி துவைக்கும் பவுடர்களை அறிமுகம் செய்தார். அது மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. நிர்மா பவுடர் நிறுவனமும் வளர்ச்சி கண்டது.

பார்மா துறையில் இறங்கிய வாஷிங் பவுடர் நிர்மா பிராண்ட்..!!

எனவே மற்ற துறைகளிலும் கால் பதிக்க விரும்பிய நிர்மா நிறுவனம் 2004ஆம் ஆண்டு மருந்து துறையில் நுழைந்தது. கோர் ஹெல்த்கேர் நிறுவனத்தை வாங்கியது. ஆனால் அது எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. இந்த சூழலில் 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மருந்து துறையில் களமிறங்கியுள்ளது நிர்மா நிறுவனம்.

மருந்து நிறுவனத்தை வாங்கிய நிர்மா: கடந்த 2023 செப்டம்பர் மாதம் கிளென்மார்க் லைஃப் சயின்ஸ் நிறுவனத்தின் 75 விழுக்காடு பங்குகளை நிர்மா நிறுவனம் வாங்கியது. கிளென்மார்க் ஃபார்மா நிறுவனமே வேண்டாம் என கைவிட்ட ஒரு நிறுவனம் தான் கிளென்மார்க் லைஃப் சயின்ஸ். அப்படி இருக்கையில் நிர்மா இதனை வாங்கி இருக்கிறதே என்ற கேள்வி எழுகிறது.

பொதுவாக மருந்து நிறுவனங்கள் நீண்ட காலம் ஆராய்ச்சி செய்து ஒரு மருந்தை கண்டுபிடித்து அதற்கான உரிமத்தை வாங்கி வைத்துக் கொள்ளும். தங்களது நிறுவனத்தின் பெயரில் அந்த மருந்தினை விற்கும் . இதில் மற்றொரு நடைமுறை இருக்கிறது மருந்தின் மீதான உரிமம் குறிப்பிட்ட காலத்தில் காலாவதியாகும்.

அதன் பிறகு அந்த மருந்தின் விவரங்களை பெற்று அப்படியே தயாரித்து விற்பனை செய்வது. இந்த முறையில் எளிதாக அதிகப்படியான மக்கள் வாங்கி பயன்படுத்தக்கூடிய மருந்துகளை தயாரித்து விற்பனை செய்யலாம். அதுமட்டுமின்றி மருந்துகளுக்கு தேவையான பொருட்கள் API எனப்படும் active pharmaceutical ingredients ஐ விற்பனை செய்வது.

இப்படி APIக்காக கிளென்மார்க் ஃபார்மா நிறுவனம் உருவாக்கியது தான் கிளென்மார்க் லைஃப் சயின்ஸ் நிறுவனம். ஆனால் கிளென்மார்க் ஃபார்மா , இதில் பெருமளவில் லாபம் காணவில்லை. இந்நிலையில் கிளென்மார்க் லைஃப் சயின்ஸ் நிறுவனம் பங்குச்சந்தையில் தனி நிறுவனமாக பட்டியலிடப்பட்டது. கிளென்மார்க் ஃபார்மா நிறுவனம் இந்த நிறுவனத்தை கைவிடுவது என முடிவு செய்ததை அடுத்து நிர்மா இதனை கையகப்படுத்தியுள்ளது.

நிர்மாவின் உத்தி கைக்கொடுக்குமா?: தற்போது APIக்களுக்கான தேவை அதிகரித்திருப்பதால், இந்தியாவில் முன்னணி நிறுவனமாக கிளென்மார்க் லைஃப் சயின்ஸ் உருவெடுத்து வருகிறது. எனவே கடந்த முறையை போல இல்லாமல் நினைத்தபடி நிர்மா நிறுவனம் மருந்து துறையில் வெற்றி காணும் வாய்ப்புள்ளது.

தற்போது கிளென்மார்க் லைஃப் சயின்ஸ் நிறுவனத்தின் ஒரு பங்கின் மதிப்பு 875 ரூபாயாக உள்ளது. நிர்மா நிறுவனம் 631 ரூபாய் என விலை குறைத்து முதலீட்டாளர்களுக்கு ஒரு வாய்ப்பினை தந்துள்ளது.

Story written by: Devika Manivannan

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+