அமெரிக்காவில் இருக்கும் பெரும்பாலான மக்கள் இந்தியாவுக்கு வர ஆசை இருந்தாலும், கஷ்டப்பட்டு சம்பாதித்து கால் வயிறு, அரை வயிறு சாப்பிட்டு சேர்த்த பணத்தை விமான டிக்கெட்-க்கு கொடுக்க வேண்டுமான என்பதை யோசித்தே வருடத்திற்கு ஒரு முறை வருவதை 2-4 வருடத்திற்கு வருகிறார்கள்.
சிங்கிளாக இருப்பவர்களுக்கே இந்த நிலைமை என்றால் குடும்பமாக அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு வர வேண்டும் என்றால் 4 பேருக்கு குறைந்தது 3 லட்சம் முதல் 4 லட்சம் வரையில் செலவாகும். இப்படியிருக்கும் சூழ்நிலையில் வெறும் 19000 ரூபாய்க்கு வாசிங்டன் டூ மும்பை டிக்கெட் விற்கப்பட்டால் எப்படிருக்கும். இப்படியொரு சம்பவம் தான் தற்போது நடந்துள்ளது, இதைப் பற்றி தான் மொத்த அமெரிக்கா என்ஆர்ஐ-களும் பேசி வருகின்றனர்.

அமெரிக்காவின் வாஷிங்டனில் இருந்து மும்பைக்கு வெறும் 19,000 ரூபாய்க்கு விமான டிக்கெட் கிடைத்ததாக சமூக வலைத்தளங்களில் பரபரப்பு கிளம்பியுள்ளது. இந்த நம்பமுடியாத விலையில் விமான டிக்கெட் கிடைத்ததாக ஃபால்குன் (Phalgun) என்ற டிவிட்டர் பயனர் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ஏப்ரல் 25ஆம் தேதி மும்பைக்கு செல்ல ஃபால்குன் விமான டிக்கெட் தேடிக்கொண்டிருந்த போது, கனெக்ட்டிங் விமான சேவையுடன் கூடிய இந்த குறைந்த விலை டிக்கெட்டைக் கண்டறிந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஃபால்குன் தனது பதிவில் வாஷிங்டனில் இருந்து மும்பைக்கு வெறும் 19,000 ரூபாய்க்கு கிடைக்கிறது "எப்படி இது சாத்தியம்? பணம் செலுத்தும் பக்கம் வரை சென்று பார்த்தேன். இரண்டு இலவச Checkin baggageஉம் சேர்க்கப்பட்டுள்ளது!" என்று ஆச்சரியத்துடன் பதிவிட்டுள்ளார்.

பதிவின் புகைப்படத்தில், வாஷிங்டன் முதல் மும்பை வரையிலான எகனாமி வகுப்பு டிக்கெட்டுகளை பல்வேறு பயண ஏஜென்சிகள் வழங்கும் விலை விவரங்கள் காண்பிக்கப்பட்டுள்ளன. FlightNetwork நிறுவனம் ₹18,770-க்கு மிகக் குறைந்த விலையில் டிக்கெட் வழங்குகிறது என்பதைக் காணலாம். அதே போல், GotoGate நிறுவனம் ₹19,332-க்கும், Cleartrip நிறுவனம் ₹19,815-க்கும் விற்பனை செய்கின்றன.
வாஷிங்டன் dulles விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு, ஜெதா வழியாக மும்பைக்கு செல்லும் இணைப்பு சேவை விமானத்தின் தகவல்களும் புகைப்படத்தில் காண்பிக்கப்பட்டுள்ளன. இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டதிலிருந்து 1.9 லட்சத்திற்கும் அதிகமானோர் இதனை பார்த்துள்ளனர். இந்த விலை உண்மையானதா என பலரும் சந்தேகப்பட்டு, தாங்களும் தேடி பார்த்துள்ளனர்.
தற்போது மே 1 ஆம் தேதி புதன் கிழமை ஸ்கைஸ்கேனர் தளத்தில் இதே வாஷிங்டன் டூ மும்பை வழித்தடத்தில் மிகவும் குறைந்த விலை விமான டிக்கெட் 24,508 ரூபாய்.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!



Click it and Unblock the Notifications