லுலு குழுமத்தின் தலைவர் MA யூசுப் அலி, மீண்டும் தனது எளிமையான குணத்திற்காக சமூக ஊடகங்களில் மக்களின் மனதைக் கவர்ந்திருக்கிறார். தனது ரசிகர்களில் ஒருவருக்கு சிறப்பு ராடோ வாட்ச்சை வழங்கினார். அதன்பின் தற்போது இந்த கோடீஸ்வர தொழிலதிபர் அபுதாபியில் மற்றொரு ரசிகருடன் செல்ஃபி எடுத்துக் கொண்டார். UAE-யைச் சேர்ந்த ரசா சந்திரசேகரன் புதுருத்தி என்ற பெண்மணி, யூசுப் அலியுடனான தனது சந்திப்பை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாகப் பகிர்ந்துள்ளார்.
"அவரது செயல்கள் அவரது வார்த்தைகளை விட அதிகமாகப் பேசும். இதுபோன்ற குறிப்பிடத்தக்க கோடீஸ்வரரை சந்தித்ததில் மகிழ்ச்சி அடைந்தேன். அல்லாஹ் அவருக்கு நல்ல ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சியை தந்து நிறைவாக ஆசிர்வதிக்கட்டும். மனிதநேயம் மற்றும் மரியாதை ஒரு வரம்" என்று கேப்ஷனாக எழுதி சில நாட்களுக்கு முன்பு தனது சந்திப்பை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாகப் பகிர்ந்துள்ளார்.

இந்த வீடியோ கிளிப்பில் யூசுப் அலியுடன் வீடியோ எடுக்க ரசா புத்துருதி விரைந்து செல்வதை பார்க்க முடிகிறது. அவருடைய ஆர்வத்தை கவனித்த யூசுப் அலி அவரை அழைத்து செல்பி எடுக்க போஸ் கொடுத்தார். அவர் மட்டும் இன்றி ரசா புத்ருத்தியுடன் வந்த இன்னொரு பெண்ணும் செல்ஃபியில் காணப்பட்டார். இதை ஒரு வீடியோவாக எடுத்து ரசா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்த வீடியோ பகிரப்பட்டதிலிருந்து 3500-க்கும் மேற்பட்ட ஷேர்களையும் 70,000-த்திற்கும் மேற்பட்ட வியூஸ்களையும் பெற்றுள்ளது. மேலும் கமெண்ட் செக்ஷனில் பயணர்கள் இந்த கோடீஸ்வரரின் செய்கையைப் பாராட்டியுள்ளனர்.

இவருடைய இந்த எளிமையான குணத்திற்காக பலரும் பாசிட்டிவ் கமெண்ட்களை வழங்கி வருகின்றனர். அதில் ஒரு பயனர் "என் வாழ்க்கையில் நான் மிகவும் விரும்பப்படும் நபரில் இவரும் ஒருவர்" என்று எழுதியுள்ளார். இன்னொரு நபர் "இதைத்தான் அடக்கம் என்று சொல்வார்கள்" என்று கூறியுள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு இந்த எளிமையான கோடீஸ்வரர் எஃபின் என்ற தனது ரசிகர்களில் ஒருவருக்கு ராடோ வாட்ச்சை பரிசாக கொடுத்து ஆச்சரியத்தை ஏற்படுத்தினார். இதை எஃபின் தனது யூடியூபில் பகிர்ந்தார். அந்த வீடியோவுக்கு பலரும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வந்தனர். ராடோ இணையதளத்தின் படி.. அவர் பரிசளித்த வாட்ச்சின் விலை 2 லட்ச ரூபாய் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.

யூசுப் அலி லுலு குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக உள்ளார், லுலு குழுமத்தின் கீழ் லுலு ஹைப்பர்மார்க்கெட் மற்றும் லுலு இன்டர்நேஷனல் ஷாப்பிங் மால் ஆகியவை அடங்கும். வளைகுடா நாடுகள் மற்றும் இந்தியா முழுவதும் 256 ஹைப்பர் மார்க்கெட்டுகள் மற்றும் மால்களின் பரந்த சாம்ராஜ்யத்தை இவர் மேற்பார்வையிடுகிறார். ஃபோர்ப்ஸ் அறிக்கையின் படி, யூசுப் அலியின் நிகர சொத்து மதிப்பு $8.9 பில்லியனைத் தாண்டும் என்று கூறப்படுகிறது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications