உலகளவில் பல்வேறு நாடுகளில் தண்ணீர் பிரச்சனை, பெரும் பிரச்சனையாக இருந்து வருகிறது. இந்த சூழலில், உலகில் தண்ணீர் இல்லாத முதல் நகரமாக ஆப்கானிஸ்தானின் காபூல் மாறும் என பரபரப்பு அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. ஆப்கானிஸ்தானின் தலைநகரான காபூலில் சுமார் 60 லட்சம் மக்கள் வசித்து வருவதாக கூறப்படுகிறது. இங்கு அதிகப்படியான நிலத்தடி நீர் பயன்பாடு, காலநிலை மாற்றம் போன்ற காரணங்களால், உலகில் தண்ணீர் இல்லாத முதல் நகரமாக காபூல் மாறவுள்ளதாக ஐநா நிறுவனங்கள் எச்சரித்துள்ளன.
காபூல் நகரில் தண்ணீர் வழங்குவது முற்றிலும் குறைந்துள்ளது. அங்கு வசிக்கும் மக்களுக்கு தினசரி தேவையான தண்ணீர் கிடைப்பதில்லை. தண்ணீர் பிரச்சனையால், மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இதன் காரணமாக சுகாதாரம், மனிதநேய சேவைகள் பாதிக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணம், அங்கு அதிக மக்கள் தொகை மற்றும் காலநிலை மாற்றங்கள் நிலவி வருகிறது. மேலும், அங்கு முறையாக நீர் மேலாண்மை செய்யாதது, அரசியல் மற்றும் பொருளாதார சிக்கல்கள் ஆகியவறை முக்கிய காரணங்களாக கூறப்படுகிறது.

நிபுணர்கள் எச்சரிக்கை : காபூல் நகரத்தில் நீர் பற்றாக்குறை மிகவும் ஆபத்தான கட்டத்தை எட்டியுள்ளதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். மேலும், உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால், வரும் 2030ஆம் ஆண்டுக்குள் அங்கு நிலத்தடி நீர் முழுமையாக இருக்காது என்று தெரிவித்துள்ளனர். இது மட்டும் நடந்தால், சுமார் 30 லட்சம் மக்கள், இடம்பெற வேண்டியிருக்கும். குடிநீர் இன்றி, மக்கள் சுகாதாரம், வாழ்வாதாரம், பாதுகாப்பு பிரச்சனைகளை கடுமையாக எதிர்கொள்வார்கள் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், இப்போது தாமதமின்றி சரியான நீர் மேலாண்மை திட்டங்களை அங்கு செயல்படுத்த வேண்டும். குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மேலும், உலக நாடுகள் உதவி மற்றும் தொழில்நுட்பங்களை வழங்க வேண்டும் என்று நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Mercy Corps என்ற அமைப்பு, 2025 மே மாதம் வெளியிட்ட ஆய்வறிக்கையின்படி, காபூலின் மூன்று முக்கிய நிலத்தடி நீர் ஆதாரங்கள் கடந்த 10 ஆண்டுகளில் 25 முதல் 30 மீட்டர் வரை குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. கபூல் நகரம், தற்போது ஆண்டுக்கு சுமார் 44 மில்லியன் கன மீட்டர் அளவுக்கு நிலத்தடி நீரை எடுத்துக் கொண்டிருக்கிறது. மேலும், இந்த நகரத்தில் 1.2 லட்சத்திற்கும் மேற்பட்ட எவ்வித கட்டுப்பாடும் இன்றி கிணறுகள் இயங்குகின்றன. நூற்றுக்கணக்கான தொழிற்சாலைகள் தொடர்ந்து நிலத்தடி நீரை உறிஞ்சி வருகின்றன.
கடந்த 2001ஆம் ஆண்டில் காபூல் நகரில் மக்கள் தொகை 10 லட்சத்திற்கும் குறைவாக இருந்தது. ஆனால், 2025இல் தற்போது 60 லட்சம் மக்கள் வாழ்கின்றனர். இது குடிநீர் தேவையை பெரிதும் அதிகரித்தது. இதுவே, குடிநீர் பற்றாக்குறைக்கு முக்கிய காரணமாகவும் அமைந்துள்ளது. மேலும், சில குடும்பங்கள் தங்கள் வருமானத்தில் 30% வரை தனியார் டேங்கர் லாரிகளிடம் குடிநீர் வாங்குவதற்காக பயன்படுத்தி வருகின்றன. மூன்றில் இரண்டு குடும்பங்கள் நீருக்காக கடனில் சிக்கியுள்ளன என்று Mercy Corps அமைப்பு தெரிவித்துள்ளது.
காபூலில் குடியிருக்கும் முகமது ஆகா என்பவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், "இங்கு எல்லாவற்றுக்குமே தண்ணீர் என்பது தேவைப்படுகிறது. தண்ணீர் மட்டும் இல்லை என்றால் வாழ்க்கை நரகமாகிவிடும். தண்ணீரின்றி மக்கள் தாகத்தால் இறந்துவிடுவார்கள்" என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
காபூலில் கிடைக்கும் தண்ணீரில் கூட, பெரும்பாலும் பாசி, கழிவுநீர், மரபணு நச்சுகள் மற்றும் உப்புத்தன்மையால் பாதிக்கப்பட்டுள்ளன. காபூலில் எஞ்சியுள்ள நிலத்தடி நீரில் 80% அளவுக்கு பாசித்தன்மை உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலிபான் ஆட்சியால் நீர் நெருக்கடி : கடந்த 2021ஆம் ஆண்டில் தலிபான் ஆட்சிக்கு வந்த பிறகு, ஆப்கானிஸ்தானில் நீர் மற்றும் சுகாதார உதவிகளுக்கான வெளிநாட்டு நிதி பெரிதும் தடைபட்டுவிட்டது. USAID போன்ற முக்கிய அமெரிக்க உதவித் திட்டங்களும் நிதியை குறைத்துள்ளன. இதனால், கபூலின் நீர் திட்டங்கள், கிணறு அமைப்புகள், சுத்திகரிப்பு வேலைகள் அனைத்தும் முடங்கியுள்ளன.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications