உணவு பொருட்களின் விலை உயரும் நிலை.. என்ன காரணம்..?

இந்தியா முழுவதும் பருவமழை பெரும்பாலான இடத்தில் பெய்து முடிந்த நிலையிலும், நாட்டின் 9 முக்கியமான மாநிலத்தில் நீர் சேமிப்பு அளவு கடந்த வருடத்தை விடவும் குறைவாக இருக்கிறது.

இதனால் நாட்டின் உணவுப் பொருட்கள் உற்பத்தி குறைவது மட்டும் அல்லாமல் உணவுப் பொருட்களின் விலை பெரிய அளவில் அதிகரித்துப் பணவீக்கம் உயரும் நிலை உருவாகும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது.

 நீர் சேமிப்பு அளவு

நீர் சேமிப்பு அளவு

மத்திய அரசு வெளியிட்டுள்ள தரவுகள் அடிப்படையில் பஞ்சாப், குஜராத், மேற்கு வங்கம், உத்தர பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசம் 5 மாநிலத்தில் நீர் சேமிப்பு அளவு கடந்த வருடத்தை விடவும் குறைவாகவும், ஹிமாச்சல பிரதேசம், திரிபுரா, நாகாலாந்து மற்றும் சத்தீஸ்கர் ஆகிய 4 மாநிலத்தில் சராசரி அளவை விடவும் குறைவாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

 நாகாலாந்து மற்றும் ஹிமாச்சல பிரதேசம்

நாகாலாந்து மற்றும் ஹிமாச்சல பிரதேசம்

இதில் முக்கியமான நாகாலாந்து பகுதியில் இயல்பு நிலையை விடவும் நீர் சேமிப்பு அளவு 46 சதவீதம் குறைந்துள்ளது. இதேபோல் ஹிமாச்சல பிரதேசத்தில் 39 சதவீதம் வரையில் குறைந்துள்ளது. இந்த அளவீடு கட்டாயம் விவசாய உற்பத்தியைப் பெரிய அளவில் பாதிக்கும்.

 9 மாநிலம்

9 மாநிலம்

மேலும் நாடு முழுவதும் நீர்ப்பாசன முறைகளைப் பெரிய அளவில் பயன்படுத்தும் காரணத்தால் வருடம் முழுவதும் விவசாயம் செய்ய நீர் சேமிப்பு அளவு கட்டாயம் சிறப்பாக இருக்க வேண்டும். ஆனால் தற்போது பல முக்கிய மாநிலத்தில் நீர் சேமிப்பு அளவு பெரிய அளவில் குறைந்துள்ள காரணத்தால் பல பிரச்சனைகள் உருவாகும்.

நீர்ப்பாசன முறை

நீர்ப்பாசன முறை

மேலும் நாடு முழுவதும் நீர்ப்பாசன முறைகளைப் பெரிய அளவில் பயன்படுத்தும் காரணத்தால் வருடம் முழுவதும் விவசாயம் செய்ய நீர் சேமிப்பு அளவு கட்டாயம் சிறப்பாக இருக்க வேண்டும். ஆனால் தற்போது பல முக்கிய மாநிலத்தில் நீர் சேமிப்பு அளவு பெரிய அளவில் குறைந்துள்ள காரணத்தால் பல பிரச்சனைகள் உருவாகும்.

விவசாயம்

விவசாயம்

இந்தியாவில் விவசாயம் முக்கிய வர்த்தகமாகக் கொண்டு இருக்கும் பஞ்சாப், மத்திய பிரதேசம், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய பகுதிகளில் தண்ணீர் சேமிப்பு பெரிய அளவில் குறைந்துள்ளது. இந்தப் பகுதிகளில் இருந்து தான் தானியங்கள், பருப்பு வகைகள் மற்றும் எண்ணெய் விதைகள் உற்பத்தி செய்யப்படுகிறது.

 உணவுப் பொருட்கள் விலை

உணவுப் பொருட்கள் விலை

தற்போது தண்ணீர் இருப்பு அளவு குறைந்துள்ள காரணத்தால் சந்தையில் போதுமான தானியங்கள், பருப்பு வகைகள் மற்றும் எண்ணெய் விதைகள் இல்லாமல் இதன் விலை பெரிய அளவில் உயரும். ஏற்கனவே தானியங்கள், பருப்பு வகைகள் மற்றும் சமையல் எண்ணெய் விலை தாறுமாறாக உயர்ந்துள்ள நிலையில் தற்போது புதிதாகப் பிரச்சனை வெடித்துள்ளது.

 உணவு பணவீக்கம்

உணவு பணவீக்கம்

உணவுப் பொருட்களின் விலை உயரும் காரணத்தால் உணவு பணவீக்கம் அதிகரிக்கும். இது நாட்டின் பொருளாதாரத்திற்கு மிகப்பெரிய சுமையாக மாறுவதோடு சாமானிய மக்கள் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படும்.

 ஜல் சக்தி அமைச்சகம்

ஜல் சக்தி அமைச்சகம்

இதுகுறித்து ஜல் சக்தி அமைச்சகத்தின் முன்னாள் செயலாளர் சஷி சேகர் கூறுகையில், தற்போது சேமித்து வைக்கப்பட்டு உள்ள தண்ணீர் பெருமளவு நெல் உற்பத்திக்குப் பயன்படுத்தப்படும். எஞ்சியுள்ள தண்ணீர் அடுத்த இரு பருவமழை காலத்திற்கு இடையில் குடிநீர் விநியோகத்திற்காகப் பயன்படுத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

 மின்சார உற்பத்தி

மின்சார உற்பத்தி

மேலும் ஹைட்ரோபவர் பிளாட் அனைத்தும் அதிகளவிலான மின்சாரத்தைப் பருவ காலத்திலேயே தயாரிக்கப்பட்டு உள்ளது. ஆனால் தற்போது நீர் தேகத்திலும் அளவு குறைவாக இருப்பதால் மின்சாரப் பற்றாக்குறையும் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது எனத் தெரிவித்துள்ளார்.

தென்னிந்தியா

தென்னிந்தியா

இதில் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால் தென்னிந்தியாவில் கடந்த ஆண்டை விடவும் இரண்டு மடங்கு அதிகத் தண்ணீர் சேமித்து வைக்கப்பட்டு உள்ளது. அதாவது கடந்த ஆண்டு முழுச் சேமிப்பு அளவில் வெறும் 37 சதவீதம் மட்டுமே சேமித்து வைத்திருந்த நிலையில் இந்த வருடம் 68 சதவீதமாக அதிகரித்துள்ளது.

 பிராந்திய அளவீடுகள்

பிராந்திய அளவீடுகள்

மற்ற பகுதிகளில் மேற்கு பகுதிகளில் 44 சதவீதத்தில் இருந்து 33 சதவீதமாகக் குறைந்துள்ளது, கிழக்குப் பகுதியில் 32.20 சதவீதத்தில் இருந்து 32.30 சதவீதமாக உயர்ந்துள்ளது, வடக்குப் பகுதியில் 42 சதவீதத்தில் இருந்து 49 சதவீதமாக உயர்ந்துள்ளது, மத்திய இந்தியப் பகுதிகளில் 46 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமாகக் குறைந்துள்ளது இது அனைத்தும் ஜூலை 29ஆம் தேதி தரவுகள்.

 மேற்கு பகுதி

மேற்கு பகுதி

இதன் மூலம் மேற்கு பகுதிகளில் விவசாய உற்பத்தி பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் இதனால் மக்களின் நிலை மேலும் மோசமடைய வாய்ப்புகள் உள்ளது. கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வரும் மக்களுக்கு உணவு பணவீக்கம் பெரும் சுமை தான்.

 கொரோனா தொற்று

கொரோனா தொற்று

ஏற்கனவே கொரோனா தொற்றுக் காரணமாக நாட்டின் பொருளாதாரம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக 2வது கொரோனா அலைக்குப் பின்பு மக்களின் வருமானம் மற்றும் வேலைவாய்ப்புக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுத் தற்போது மீண்டு வரும் காலத்தில் 3வது அலை வந்துள்ளது.

 3வது அலை

3வது அலை

3வது அலையில் இருந்து மக்களையும் நாட்டின் பொருளாதாரத்தையும் விழுங்கிவிடக் கூடாது என்பதற்காகத் தமிழ்நாடு உட்பட பல மாநிலங்கள் முன்கூட்டியே பல எச்சரிக்கை நடவடிக்கையை எடுத்துள்ளது. இதன் மூலம் வேலைவாய்ப்பு மற்றும் வர்த்தகச் சந்தை பாதிக்கப்பட்டாலும் மக்களின் உயிரைக் காக்க முடியும்.

 சென்னை கட்டுப்பாடு

சென்னை கட்டுப்பாடு

தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் 3வது கொரோனா அலையைக் கட்டுப்படுத்தச் சென்னையில் மக்கள் அதிகம் கூடும் 9 பகுதிகளில் கடைகள், ஷாப்பிங் மால், வணிக வளாகம், ரோட்டுக் கடைகள் திறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.

 வெளிநாடு மற்றும் வெளியூர்

வெளிநாடு மற்றும் வெளியூர்

இதேபோல் வெளிநாட்டில் இருந்து தமிழ்நாட்டு விமானம் மூலம் வருவோர் விமான நிலையத்திலேயே RT PCR டெஸ்ட் எடுக்கப்பட்டு அதன் பின்பே அனுமதி அளிக்கப்படுகிறது. இதேபோல் வெளிமாநிலத்தில் வருவோருக்கும் சில முக்கியக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாகக் கேரளாவில் இருந்து தமிழ்நாடு வருவோருக்கு அதிகளவிலான கட்டுப்பாடுகளைத் தமிழக அரசு விதித்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+