அமெரிக்காவின் பாஸ்டன் நகரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் வேஃபேர் (WAYFAIR) நிறுவனம், மரச்சாமான்கள் உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்களை ஆன்லைனில் விற்பனை செய்து வருகிறது.
இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இந்திய வம்சாவளியை சேர்ந்த நீரஜ் ஷா உள்ளார். அமெரிக்கா, கனடா, ஜெர்மனி, சீனா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் கிடங்குகளை வைத்து வீட்டு உபயோக பொருட்களை இந்நிறுவனம் விநியோகம் செய்து வருகிறது.

உலகம் முழுவதும் 11,000-க்கும் அதிகமான ஊழியர்கள் இந்நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் வேஃபேர் நிறுவனம் 1,650 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.
இந்நிறுவனம் சமீபத்தில் தான் லாபகரமாக இயங்குகிறது, ஆனால் ஊழியர்கள் நேரம் காலம் பார்க்காமல் கடுமையாக உழைக்க வேண்டும் என அறிவுறுத்தி பெரும் விமர்சனத்திற்கு உள்ளானது. இந்த தொடர்ந்து வெறும் ஒரு மாத இடைவெளியில் 1,650 பேரை பணிநீக்கம் செய்த தலைமை செயல் அதிகாரியான நீரஜ் ஷா-வின் செயல் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பணி நீக்கம் தொடர்பான நிறுவனத்தின் முடிவு உங்கள் மீது ஏற்படும் தாக்கத்திற்கு வருந்துகிறேன் என ஊழியர்களுக்கு அனுப்பியுள்ள மின்னஞ்சலில் சுட்டிக்காட்டியுள்ள நீரஜ் ஷா, வலுவான பொருளாதார காலகட்டத்தில் , நமது அடிப்படை கொள்கைகளை மீறி ஊழியர்களை பணி அமர்த்தினோம்.
இந்த நிலையில் நிறுவனத்தின் நீண்ட கால முன்னேற்றத்தை மனதில் கொண்டு, 1,650 ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் முடிவை எடுத்ததாக தெரிவித்துள்ளார். மனிதவளத் துறை அதிகாரிகள், சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கு பணி நீக்கத்துடனான பலன்களை வழங்குவதற்கான நடவடிக்கைகளை தொடங்கி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
கடந்த டிசம்பர் மாதம் நிறுவன ஊழியர்களுக்கு அனுப்பி இருந்த மின்னஞ்சலில், வேஃபேர் நிறுவனம் நல்ல லாபத்துடன் இயங்கி வருகிறது என்றும், ஊழியர்கள் நேரம் காலம் பார்க்காமல் கடினமாக உழைக்க வேண்டும் என்றும் நீரஜ் ஷா கூறி இருந்தார்.
நீண்ட நேர வேலை, நிறுவனத்தின் மீது அக்கறை மற்றும் வேலையையும் வாழ்க்கையும் ஒன்றாக்குவது ஆகியவை வெட்கப்பட வேண்டியவை அல்ல என ஊழியர்களுக்கு அறிவுரை வழங்கி இருந்தார். இது அவர் மீது பல்வேறு விமர்சனங்களுக்கு வழி வகுத்தது.
நீரஜ் ஷா மோசமான பணி கலாசாரத்தை கொண்டு வருவதாக விமர்சனங்கள் எழுந்தன. வேஃபேர் நிறுவனத்தின் பொருட்களை பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என சமூக ஊடகங்களிலும் எதிர்ப்புக் குரல்கள் எழுந்தன.
கொரோனா பெருந்தொற்று தாக்கத்தை அடுத்து சிக்கன நடவடிக்கையாக 2022ஆம் ஆண்டும் வேஃபேர் நிறுவனம் 5% ஊழியர்களை பணிநீக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!



Click it and Unblock the Notifications