Zoho நிறுவனத்தின் இணை நிறுவனரும் தலைமை செயல் அதிகாரியுமான ஸ்ரீதர் வேம்பு சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஒரு நபர். தமிழகத்தை சேர்ந்த இவர் நடத்தி வரும் Zoho நிறுவனம் பல்வேறு இளைஞர்களுக்கும் வேலைவாய்ப்பு வழங்கி வருவதோடு, இவரை ஒரு முன் உதாரணமாகவும் பார்க்கின்றனர்.
எனவே சமூக வலைதளங்களில் ஸ்ரீதர் வேம்புவின் பதிவுகள் எப்போதுமே கவனத்தை ஈர்க்கும். அப்படி அண்மையில் அவர் வெளியிட்ட ஒரு புகைப்படம் இப்போது பேசு பொருளாகியுள்ளது.

தமிழ் மீடியம் பாய்ஸ்: டாடா சன்ஸ் தலைவர் என்.சந்திரசேகரனுடன் தான் எடுத்து கொண்ட புகைப்படத்தை எக்ஸ் தளத்தில் பதிவிட்ட Zoho தலைமை செயல் அதிகாரி ஸ்ரீதர் வேம்பு, அண்மையில் மெட்ராஸ் மேனேஜ்மெண்ட் அசோசியேஷனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கு கொண்டேன், அங்கே டாடா சன்ஸ் தலைவர் என். சந்திரசேகரன் அவர்களை சந்தித்தேன் என கூறியுள்ளார்.
என்.சந்திரசேகரன் அவர்களும் என்னை போல தமிழ் மீடியத்தில் தான் படித்துள்ளார். என்னை போன்றவர்களுக்கு சந்திரசேகரனும், டாடா குழுமமும் எப்போதுமே ரோல் மாடல் என கூறியுள்ளார்.
சென்னையில் நிகழ்ந்த சந்திப்பு: சென்னையில் மெட்ராஸ் மேனேஜ்மெண்ட் அசோசியேஷனின் 20ஆவது விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் என்.சந்திரசேகரன் மற்றும் ஸ்ரீதர் வேம்பு ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது, தொழில் நிறுவனம் நடத்துவோர் நீண்ட காலத்துக்கான யோசனைகளை எப்படி முன்னெடுக்க வேண்டும் என்பதி குறித்து என். சந்திரசேகரன் உரையாற்றினார். இந்த நிகழ்வில் அவருக்கு பிஸினஸ் லீடர்ஷிப் விருது வழங்கப்பட்டது.
ஸ்ரீதர் வேம்புவின் எக்ஸ் தளத்தில் வெளியான பதிவுக்கு ஆயிரக்கணக்கான பயனாளர்கள் லைக்ஸ் வழங்கியுள்ளனர். வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு மொழி ஒரு தடையில்லை என்பதற்கு ஸ்ரீதர் வேம்பு மற்றும் என்.சந்திரசேகரன் இருவருமே உதாரணம், இது எங்களை மேலும் ஊக்கப்படுத்துகிறது என சில பயனாளர்கள் பதிவிட்டுள்ளனர்.
தென்காசி மாவட்டம் கடையத்திற்கு அருகே இருக்கும் கோவிந்தபேரி பகுதியில் இருந்து கொண்டு சர்வதேச மென்பொருள் நிறுவனமான zoho வை செயல்படுத்தி வருகிறார் ஸ்ரீதர் வேம்பு. இந்த நிறுவனத்தின் ஆண்டு வருமானம் ரூ.8,500 கோடி.
1996-ம் ஆண்டு zoho நிறுவனத்தை சென்னையில் தொடங்கியவர், மேற்குத் தொடர்ச்சி மலையின் ரம்மியத்தின்பால் ஈர்க்கப்பட்டு, 2011-ல் தென்காசி மத்தளம்பாறையில் சோஹோவுக்கு பெரிய அளவில் அலுவலகத்தை திறந்தார்.
Story written by: Devika
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications