சென்னை: இந்தியா சிப் தொழில்துறையில் சாதிக்கும் முனைப்பில் திட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில் அந்த தொழிலில் கொடிக்கட்டி பறக்கும் தைவான் நாட்டின் ஃபாக்ஸ்கான் நிறுவன தலைமை செயல் அதிகாரி யங் லியு முக்கிய தகவலை தெரிவித்துள்ளார். சிப் தொழில்துறையில் இந்தியாவுக்கு பக்கபலமாக இருப்பதாக அவர் பிரதமர் மோடி முன் உறுதியளித்துள்ளார்.
சீனாவில் இருந்து பிரிந்து தனி நாடாக தைவான் செயல்பட்டு வருகிறது. தைவானின் மக்கள்தொகை மிகவும் குறைவாக இருந்தாலும் கூட அந்த நாட்டை ஒட்டுமொத்த உலகமும் புறம்தள்ளிவிட வேண்டும். ஏனென்றால் ஒட்டுமொத்த உலகத்துக்கும் தைவான் மிகவும் முக்கிய நாடாக இருக்கிறது.

ஏனென்றால் செல்போன், லேப்டாப் உள்பட பல மின்னணு கருவிகளிலும், நவீன கடிகாரங்களிலும் பயன்படுத்தும் ‛சிப்' தயாரிப்பில் தைவான் தான் முக்கிய பங்கு வகித்து வருகிறது. தைவானில் இயங்கும் நிறுவனங்கள் தான் உலகில் பயன்படுத்தும் கம்ப்யூட்டருக்கான சிப்புகளின் தேவையில் 65 சதவீதத்தை பூர்த்தி செய்கிறது.
இதனால் தான் தைவான் மீது சீனா போர் தொடுக்க முயற்சிக்கும்போதெல்லாம் உலக நாடுகள் சீனாவுக்கு எதிராக நிற்கின்றன. இத்தகைய சூழலில் தான் தைவானில் மிகவும் புகழ்பெற்ற ஃபாக்ஸ்கான் நிறுவனம் இந்தியாவுக்கு பக்கபலமாக இருப்பதாக அறிவித்துள்ளது. ஃபாக்ஸ்கான் நிறுவனம் என்பது ‛சிப்' உற்பத்தி துறையில் முன்னிலையில் உள்ளது. இந்தியாவும் செமிகண்டக்டர் ‛சிப்' உற்பத்தியில் ஆர்வம் காட்டி வரும் நிலையில் தான் ஃபாக்ஸ்கான் நிறுவனம் இந்தியாவுக்கு பக்கபலமாக இருப்பதாக அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக பாக்ஸ்கான் நிறுவனத்தின் தலைவர் யங் லியு, பிரதமர் மோடியிடம் உறுதி அளித்துள்ளார். குஜராத் மாநிலம் காந்தி நகரில் ‛செமிகான்' என்ற பெயரில் 3 நாள் மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டின் தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேசினார். அப்போது பிரதமர் மோடி பேசுகையில், ‛‛இந்தியாவில் சிப் தொழிலை ஊக்குவித்து உருவாக்க துணிச்சலாக செயல்பட்டு வருகிறோம். ஒரு குறிப்பிட்ட துறையில் சாதிக்கும் விருப்பம் இருந்தால் அங்கிருந்து நல்ல வழி பிறக்கும்'' என்றார்.
இந்த மாநாட்டில் தான் பாக்ஸ்கான் நிறுவனத்தின் தலைவர் யங் லியு பிரதமர் மோடியிடம் உறுதியளித்தார். இதுபற்றி யங் லியு கூறுகையில், ‛‛இதற்கு முன்பு பிரதமர் மோடியிடம் பேசினேன். அப்போது அவர் ஐடி துறை என்பது இந்தியா மற்றும் தைவானை தான் குறிக்கிறது என என்னிடம் கூறினார். தைவான் எப்போதும் இந்தியாவின் நம்பிக்கை மிகுந்த நாடாக இருக்கும். மேலும் இந்தியாவில் சிப் உற்பத்திக்கான செயல்பாடு நன்றாக உள்ளது. இதில் நல்ல நிபுணத்துவம் கொண்ட பலர் பணியாற்ற வேண்டும்.
இந்த துறையில் முன்னேற்றம் காண இந்தியா சிறப்பான இடத்தை நோக்கி பயணித்து வருகிறது. குறிப்பிட்ட துறையில் முன்னேற வேண்டும் என்ற நம்பிக்கை எங்கு பிறக்கிறதோ அங்கிருந்து தான் நல்ல வழி கிடைக்கும். தற்போதைய சூழலில் சிப் துறை மிகவும் முக்கியமாகும். இந்தியா இப்போது தான் கால்வைக்கிறது. இதனால் இந்தியாவுக்கு நம்பிக்கை என்பது மிகவும் முக்கியம். இந்தியாவின் சிப் தயாரிக்கும் முயற்சியை மற்றவர்கள் ஆதரிக்கின்றனர். உண்மையில் தைவான் இந்தியாவின் நம்பிக்கை அளிக்கும் வகையில் நம்பகமான நாடாக செயல்படும்'' என்றார்.
அதேபோல் மைக்ரான் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ‛‛எங்களது திட்டம் மூலம் குஜராத்தில் 5000 நேரடி வேலையையும், கூடுதலாக 15ஆயிரம் வேலைகளையும் உருவாக்கும் என நினைக்கிறோம். இந்த முதலீடு என்பது பிற முதலீடுகளையும் அதிகரிக்கும்'' என்றார். மேலும் செமிகண்டக்ர் உற்பத்திக்கான தொழில் சங்கம் செமி தலைவர் அஜித் மனோச்சா கூறுகையில், ‛‛ஆசியாவில் செமிகண்டக்டர் உற்பத்தி துறையில் தைவானுக்கு அடுத்த இடத்தில் இந்தியா நிச்சயம் இருக்கும்'' என்றார்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications